ஷாலோம் SHALOM ஜனவரி 12, 1964 சியராவிஸ்டா , அரிசோனா, அமெரிக்கா 1. அவரை இன்று காலை அவரை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற முறை நம்முடன் கூட இருந்த இந்த சகோதரர் புற்று நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு வருந்து-கிறேன். இதற்கு ஒரே வழி தான் உண்டு. அது தான் மரணத்தின் வழி. நாம் அனைவருமே - நாம் எவ்வளவு தான் நீதிமானாய் இருந்தாலும், எவ்வளவு தான் பரிசுத்தவானாயிருந்தாலும் அதன் வழியாக கடந்து செல்ல வேண்டிய-வர்களாய் இருக்கிறோம். நாம் வேறொருவர் கல்லறையின் மேல் ஒருவர் பின் ஒருவராக அடக்கம் பண்ணப்படுகிறோம். இருப்பினும் இயேசு, ''என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" என்றார். அவர் இங்கு குறிப்பிடும் "மரணம்'' நாம் மரணம் என்று அழைக்கும் ஒன்றல்ல. 2. இயேசு லாசருவைக் குறித்து கூறின போது, "அவன் நித்திரை அடைந்து இருக்கிறான்.” என்றார். அவர்கள், "அவன் நித்திரை அடைந்திருந்தால் சுகம் அடைவான்'' என்றனர். 3. அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தெரிந்த மொழியில் கூற வேண்டியதாயிற்று, பாருங்கள். அவர் “லாசரு மரித்துப் போனான்” என்று வெளிப்படையாய் கூறினார். அவர், ''நான் அங்கே இராததனால், உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன். அவனை இப்பொழுது எழுப்பப் போகிறேன்” என்றார். 4. அப்பொழுது தான் அவர் வேதாகமத்தில் நாம் காண்கிற அந்த அற்புதமான வேதவாக்கியத்தைக் கூறினார்: ''என் வசனத்தைக் கேட்டு என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக் கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.'' பாருங்கள்? என்றென்றைக்கும் மரிப்பதில்லை! கிறிஸ்தவனுக்கு உண்மையில் மரணம் என்பதே கிடையாது . மரணம் என்றால் ''நித்திய பிரிவினை" என்று பொருள் 5. இப்பொழுது நாம்... இப்பொழுது நாமிருக்கும் மாமிச சரீரத்தில் மரிக்கும் பொழுது, நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து விடுகிறோம். இந்த மாமிச சரீரம் ஒன்று தான் நம்மை ஒருவருக்கொருவர் அடையாளம் காண்பிக்கிறது. நாம் ஐம்புலன்களால் கட்டப்பட்டிருக்கிறோம். பார்த்தல், ருசிபார்த்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்பவை. நாம் ஒருவரை ஓருவர் காணவும் உணரவும் முடியும் வரைக்கும், நாம் இங்குள்ளோம் என்னும் அத்தாட்சி நமக்கு உள்ளது. நீங்கள் குருடராயிருந்து காணமுடியாவிட்டால், நீங்கள் ஒருவரை ஓருவர் உணர முடியும்... அல்லது ஒருவர் கூறுவதை மற்றவர் கேட்க முடியும். பூமிக்குரிய புலன்கள் ஒருவரை ஓருவர் வெளிப்படுத்து கின்றன. 6. ஆனால் உண்மையில், வெளிப்படையாகக் கூறினால், நாம் ஒருவரை ஓருவர் கண்டதில்லை. அது உங்களுக்குத் தெரியுமா? நாம் ஒருவரை ஓருவர் கண்டதில்லை. உள்ளேயுள்ள ஒன்றுக்கு பிரதிநிதியாக இருக்கும் ஒரு வெளிப்புற சரீரம் ஏதாவதொன்றைப் பேசுவதை நீங்கள் கேட்கின்றீர்கள். எனவே நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது, நாம் உண்மையில் வெளிப்புற சரீரத்துடன் பேசுவதில்லை, அது உள்ளே உள்ள ஆவியுடன். ஆனால் வெளிப்புற சரீரமோ உள்ளே உள்ள ஆவியை அடையாளம் காண்பிக்கிறது. எனவே நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது, நாம்... விரைவில், உடனடியாக, நாம் கிறிஸ்தவர்களா அல்லவா என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாம் பேசும் போது ஆவிக்குரிய ஐக்கியம் நம்மிடையே உண்டாகின்றது. பாருங்கள், நாம் கிறிஸ்தவர்களா அல்லவா என்று, நாம் அது வரை ஒருவரையொருவர் கண்டிருக்கவில்லை என்றாலும் அந்த ஆவியில் ஏற்படும் துடிப்பு தெரியப்படுத்துகிறது. 7. இயேசு, "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரேன அவரை வெளிப்படுத்தினார்” பாருங்கள்? வேறு விதமாகக் கூறினால், தேவன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார்- தேவனாகிய நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் சரீரத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய தன்மையின் சொரூபமாயிருந்தார் (Image). அதாவது தேவன் தம்மை ஒரு உருவத்தின் மூலம் மனிதனாக வெளிப் படுத்தினார். தேவன், தேவனாயிருந்தபடியால், தம்மை நமக்கு வெளிப் படுத்தினார். அவர் இரண்டாம் ஆளோ, மூன்றாம் ஆளோ கிடையாது. அவர் தேவன் என்னும் நபர். நாம் அவரை தொட்டு உணரும்படிக்கு தேவனே தம்மை மனித உருவில் அடையாளம் காண்பித்தார். 8. 1.தீமோ.3:16, ''அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மை உள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.'' அல்லது தம்மை அறியப்படுத்தினார். அது அற்புதம் அல்லவா-? தேவன், தேவன் அக்கினி ஸ்தம்பம் போன்றவைகளில் அசைவாடின போது, நம்மால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் நம்மில் ஒருவராக, பாருங்கள், மனிதனாக ஆனபோது, அவரை நாம் புரிந்து கொண்டோம். அப்பொழுது அவர் நம்முடன் பேச முடிந்தது. நாமும் அவரைக் கைகளால் தொட்டு அவரை உணர முடிந்தது. வேத வாக்கியம் வெளிப்படையாய் சொல்லுகிறபடி, ''எங்கள் கைகளினாலே அவரைத் தொட்டோம்'', பாருங்கள், நமது கைகளினால் - நமது கைகளினால் அவரைத் தொட்டோம். 9. தேவன் மனிதனுக்குள் இருக்கிறார். அவர் இன்று தமது சபையின் மூலமாக தம்மை அடையாளம் காண்பிக்கிறார். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனின் மூலம் அவர், தாம் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்று அடையாளம் காண்பிக்கிறார். வெளிப் புற உலகம், தேவனை உங்களிலும் என்னிலும் காண்பதன் மூலமாகவே அவரை அறிந்து கொள்ள முடியும். நாம் சகல மனிதராலும் வாசிக்கப்படுகிற எழுதப்பட்ட நிரூபங்களாக வேதாக மத்தின் நிரூபங்களாக இருப்போமானால், அந்த ஒரு வழியில் மாத்திரமே அவர்கள் தேவனை அறிந்து கொள்ள முடியும். நாம் வாழும் வாழ்க்கை நமக்குள் என்ன இருக்கிறது என்பதை பிரதிபலிக்கின்றது. ஒரு மனிதன், தான் செய்யும் கிரியைகளின் மூலம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறான். எனவே நமது கிரியைகள் நல்லவைகளாக இருக்க வேண்டும். பாருங்கள் எப்பொழுதும் நல்லவைகளாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் நமது இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாய் இருக்கிறோம். 10. அது எவ்வளவு அற்புதமான காரியம் - முக்கியமாக என்னைப் போன்ற வயதான ஒருவன் இங்கு நின்று கொண்டு மறைந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையும், கடந்து போன வாழ்க்கையையும், நாம் எதிர்காலத்தில் நித்தியத்தை சந்திக்கப் போகின்றோம் என்பதையும் குறித்து ஆலோசனை செய்யும் போது. இந்த வாழ்க்கையில் மாத்திரம் என் நம்பிக்கையை நான் வைத்திருப்பேனானால், இன்று காலை நான் மிகவும் பரிதபிக்கப்படத்தக்க மனிதனாய் இருப்பேன் ஆனால் வரவிருக்கும் ஒன்றுக்கு இவ்வாழ்க்கை நிழலாக மாத்திரமே அமைந்துள்ளது என்று நான் அறிந்திருக்கிறேன். இது ஒரு பிரதிபலிப்பு. இது தேவன் உண்டாக்கிய பரிபூரணமான ஒன்றாக இருக்க முடியாது. அழிந்து போகும் எதையுமே தேவன் சிருஷ்டிப்பது இல்லை. பாருங்கள்? தேவன் நித்தியமானவர். எனவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை, நமக்கு முன்னால் உள்ள ஒன்றை பிரதிபலிப்பதாக உள்ளது. உண்மையானது மரிக்க முடியாது - அழிந்து போக முடியாத சரீரம், எடுத்துக் கொள்ளப்பட முடியாத ஜீவன். பாருங்கள்? எனவே நாம் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளதாக வேதாகமம் கூறினால், அது சரியே. நாம் ஒருக்காலும் மரிக்கவே மாட்டோம். பாருங்கள்? நீங்கள்... நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாகி விடுகின்றீர்கள். பாருங்கள். நீங்கள் என்றென்றைக்கும் நித்தியத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு போதும் தவறவே மாட்டீர்கள். நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் அவருடைய குமாரன். 11. நான் வேறொரு பெயரை எடுத்துக்கொண்டு, என் பெயர் வேறொரு பெயர் என்று கூறலாம். நான் என் தாயின் பெயர் ஹார்வி என்பதை எடுத்துக் கொள்ளலாம். அது எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு பெயர். இவ்வுலகில் என் தாய் ஹார்வி என்னும் பெயரை உடையவர்களாயிருந்தார்கள். நானும் கூட ஹார்வி என்னும் பெயரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் என் இரத்தம் நான் ஒரு பிரன்ஹாம் என்பதை நிரூபிக்கும். பாருங்கள்? ஏனெனில் நான் என் தந்தையின் பாகமாயிருக்கிறேன். எனக்குள் இரத்தம் இருக்கும் வரைக்கும், நான், என் தந்தையின் பாகமாகவே இருப்பேன் பாருங்கள். அது உண்மை. அவ்வாறே நான் தேவனுடைய ஆவியால் பிறக்கும் போது, நான் தேவனுடைய ஒரு பாகமாகி விடுகிறேன், அவ்வளவு தான். அவர் என் பிதா என்று நான் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். அப்பொழுது என் வாழ்க்கை அவரைப் பிரதிபலிக்க வேண்டும் - என் வாழ்க்கை எவ்வாறு பூமிக்குரிய தந்தையை அவர் இருந்த ரூபத்தில் பிரதிபலிக்கிறதோ அவ்வாறே நான் காண்பதற்கு என் தந்தையைப் போல் உள்ளதாக பலர் கூறுகின்றனர். அப்படியானால் அவருடைய மனித ரூபம் என்னில் பிரதிபலித்துள்ளது. அவ்வாறே உங்கள் தந்தையும் உங்களில் பிரதிபலிக்கிறார்- உங்கள் பெற்றோர்கள். எனவே நாம் மறுபடியும் பிறந்து அவருடைய ரூபத்துக்கு ஒப்பாக நாம் இருக்கும் போது, நம்முடைய தேவனாகிய பிதா நம்மில் பிரதிபலிக்கிறார். 12. நான் இப்படி பேசிக்கொண்டே போய், உங்களிடம் நான் பேச வேண்டும் என்று எத்தனித்துள்ள பொருளுக்கு வருவதே இல்லை . 13. நான் எப்பொழுதுமே வீட்டில் நடைபெறும் இப்படிப்பட்ட ஜெபக் கூட்டங்களை விரும்புவதுண்டு. ஜனங்கள் நினைப்பதைக் காட்டிலும் எனக்கு இத்தகைய வீட்டு ஜெபக்கூட்டங்கள் அதிக விருப்பம். சிறிதளவு விசுவாசிகள் ஒன்று கூடி, நாம் வீடுகளில் ஆராதிக்கும் போது, நான் தேவனிடம் அதிகமாக நெருங்கி உள்ளதை உணர்ந்திருக்கிறேன். 14. இன்று காலை முப்பது, நாற்பது முப்பது பேர்- பிள்ளைகள் உட்பட இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறோமென்று நினைக்கிறேன். எனக்கு சரியாக தெரியவில்லை. ஒரு கூட்டத்தை நோக்கி, அதில் எத்தனை பேர் உள்ளனர் என்று எனக்கு கணக்கெடுக்கத் தெரியாது. இங்கு வேறு சில அறைகளும் உள்ளன, பாருங்கள், அங்குள்ளவர்களை என்னால் காணமுடியவில்லை. ஆனால் இப்படியாக நாம் சிறிதளவில் ஒன்று கூடும் போது, பெரிய கூட்டத்தில் நாம் இருக்கும் போது நமக்கு கிடைக்கப் பெறாத ஒரு அருகா மையை இங்கு நாம் பெறுகிறோம். இங்கு நாம் வெளிப்படையாக பேச முடியும். எனவே தான் இன்று காலை இந்த சபையோரிடமும் அவர்கள் உடைய அருமையான போதகரிடமும் பேசலாமென்று கருதி இங்கு வந்தேன். என் நண்பர்களில் அநேகரை இங்கு காண்பதில் மகிழ்ச்சி - ஸ்டிரிக்கர் குடும்பமும் மற்றவர்களும். இவர்களை நான் சில காலம் காணவேயில்லை. 15. அடுத்த ஞாயிறு அன்று பீனிக்ஸிலுள்ள அரங்கத்தில் நான் பேச உத்தேசித்திருக்கும் என் புத்தாண்டு செய்தியை இன்று காலை இங்கு அளிக்கப் போகின்றேன். இங்கு ஒருக்கால் அவர்கள் ஒலிநாடாவில் பதிவு செய்வார்கள். விசுவாசமும், அவிசுவாசமும், மூட நம்பிக்கையும் கலந்துள்ள பீனிக்ஸ் கூட்டத்தினரின் மத்தியில் காட்டிலும், இங்கு கூடியுள்ள ஒரு சிறு கூட்டம் விசுவாசிகளின் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் ஒருக்கால் மேலான கருத்துக்களை எனக்கு அளிக்க சாத்தியமுண்டு. இதை இங்கு பதிவு செய்து, ஒலிநாடாக்களை சகோதரர்கள் வெளியே விநியோகம் செய்வார்கள் ஆனால் அது நன்றாயிருக்கும். ஏனெனில் இங்கு பதிவு செய்யப்பட்ட ஒரு நல்ல செய்தியை நீங்கள் வெளியே அனுப்புவீர்கள். நான் பையன்களோடு முதலில் சப்தத்தை பரிசோதிக்கும்படி கூறினேன். இன்று காலை நான் வந்த போது, சப்தமெல்லாம் அருமையாக உள்ளதாக சகோ.டெர்ரி என்னிடம் கூறினார். இந்த பயபக்தியான விவகாரத்தை நாம் அணுகும் முன்பு, முதலாவதாக நாம்... 16. உங்களில் சிலர் பகல் உணவுக்காக இங்கு தங்கப் போவதாக என்னிடம் கூறினார்களென்று நினைக்கிறேன். பகல் உணவு மைதானத்திலோ அல்லது வீட்டிலோ பரிமாறப்படும். நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து பங்கு கொள்வோம். அது மிகவும் அருமையானது. நீங்கள் எல்லோரும் ஒன்று கூடியுள்ளதை நான் பாராட்டுகிறேன். 17. இன்றைய என் காலை செய்தி ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு அளிக்கப்படும் ஒன்று என்று உணருகிறேன். இன்று காலை இங்கு அமர்ந்து உள்ளவர்கள் அந்த சபையின் ஒரு பாகமாவர். அந்த பயபக்தியான பகுதிக்கு நாம் வருவதற்கு முன்பு, ஜெபத்திற்காக சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். 18. எங்கள் பரலோக பிதாவே, உம்மை எங்கள் பிதாவே என்று கூப்பிடும் படியான சிலாக்கியத்தை நாங்கள் பெற்றுள்ளதற்காக உமக்கு மிகுந்த நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். பிதாவே என்பதற்கு, வானத்தையும் பூமியை யும் படைத்த மகத்தான தேவனால் நாங்கள் ஜெநிப்பிக்கப்பட்டோம் என்று பொருள். எங்கள் இருதயத்தில் நாங்கள் உம்முடைய குமாரரும் குமாரத்தி-களுமென்று நினைக்கக்கூடிய இந்த சிலாக்கியத்திற்காக நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம். நீர் உம்மைக் கண்டிப்பாக எங்கள் மத்தியில் அடையாளம் காண்பிக்கிறீர் என்பதைக் காணும் போது; நீர் எங்கள் பிதாவாயிருந்து, எங்கள் சிந்தனைகளை உலகத்தின் காரியங்களிலிருந்து மாற்றி அமைத்து, எங்கள் நோக்கங்களையும், குறிக்கோள்களையும், சுபாவங் களையும், எங்கள் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றி, உம்மை சிநேகிக்கவும், உம்மை விசுவாசிக்கவும், உமது வாக்குத்தத்தங்கள் சத்தியமென்று அறிந்து கொள்ளவும் அருள் புரிந்திருக்கிறீர். 19. "வனாந்திரத்தின் பின்பாகம்'' என்று நாங்கள் - அல்லது நான் - அழைக்கும் அல்லது கருதும் இந்த இடத்தில் நாங்கள் இன்று காலை ஒன்று கூடி இருக்கிறோம். கர்த்தாவே, இதை நான் கூறும் காரணம் என்னவெனில், இவர்கள் சிறு கூட்டமாக உள்ளதனால் இவர்களை இழிவாகப் பேச வேண்டுமென்பதற்காக அல்ல. 20. நான் உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயை இப்பொழுது நினைவு கூறமுயல்கிறேன். அவன் வனாந்திரத்தின் பின்பாகத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஒருக்கால் அவனுடைய மனைவி சிப்போராளும் அவனுடைய மகன் கெர்சோமும் அவனுடன் கூட இருந்து இருப்பார்கள். எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வனாந்திரத்தின் பின் பாகத்தில் அவன் பெற்ற அனுபவம் தான் அந்த தீர்க்கதரிசியை ஓடிப்போகும் கோழையாக இருந்ததிலிருந்து தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியத்திற்கென்று மாற்றி அமைத்தது. அங்கு தான் மானிடர் வாழ்க்கையிலேயே அக்கினி ஸ்தம்பம் முதன் முறையாக காட்சி அளித்ததென்று நாங்கள் அறிவோம். அந்த அக்கினி, அந்த வனாந்திரத்திலிருந்த சிறு புதரில் அமர்ந்திருந்தது, ஆனால் அது அந்த புதரை அது எரிக்கவில்லை. அது அந்த புதரின் வழியாக பிரதிபலித்த தேவனுடைய மகிமை. மோசே, தன் பாதரட்சைகளைக் கழற்றிப் போட்டு அதன் அருகில் சென்று, தேவனுடைய ஜனங்களை விடுவிக்கும்படி தேவனிடத்தில் கட்டளை பெற்றான். 21. இன்றும் கர்த்தாவே, வனாந்திரத்தின் பின்பாகத்தில் அவ்வாறே நிகழ்வதாக. இப்பொழுது எங்கள் காலணிகளையும் எங்கள் தொப்பிகளையும், எல்லாவற்றையும் கழற்றி கிறிஸ்துவின் சிலுவையின் கீழ் வைத்து, ''இதோ அடியேன், கர்த்தாவே, என்னை அனுப்பும்'' என்கிறோம். 22. இங்குள்ள போதகராகிய சகோ.ஐசக்ஸன்னை ஆசீர்வதியும். அவரையும் அவருடைய மனைவியையும் அவருடைய பிள்ளைகளையும்; சகோ. ஸ்டிரிக்கர், அவருடைய மனைவி, அவருடைய பிள்ளைகள்; மற்றும் இன்று காலை இங்கு வந்துள்ள அனைவரையும் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். 23. ஒரு பெரிய மகிமைக்காகவோ அல்லது தலைவர்கள் பெரிய உத்தியோகஸ்தர்கள் என்று கருதப்படுவதற்கோ இங்கு நாங்கள் கூடி வரவில்லை. நாங்கள் தாழ்மையுள்ள விசுவாசிகள் உம்மில் நாங்கள் அன்பு கூறுவதனால் இங்கு கூடியுள்ளோம். நாங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூறுகிறோம். நாங்கள் ஒருவரையொருவர் காணும்போது. நாங்கள் ஒன்று கூடும்போது, ஒவ்வொரு விசுவாசியும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடும் போது, தேவன் அதிகமாக ஒன்று கூடுவதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில், ''இதை நீங்கள் என் நாமத்தினால் செய்தால், உங்கள் மத்தியில் நான் வாசமாயிருப்பேன்" என்று இயேசு கூறியுள்ளார். நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர் என்று நாங்கள் அறிகிறோம். 24. கர்த்தாவே, எங்களோடு பேசும் இப்பொழுது நான் பிரசங்கத்துக்காக எழுதி வைத்துள்ள குறிப்புகளும், வேத வாக்கியங்களும் நாங்கள் என்ன பேச வேண்டுமென்று நீர் எண்ணியிருக்கிறீரோ, அதிலிருந்து விலகியிருக்கும் என்றால், அதை நாங்கள் கூறாமல் விட்டு விட்டு, நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதையே நாங்கள் செய்வோம். எங்களை இப்பொழுது ஆசீர்வதியும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 25. முன்பெல்லாம் வேத வாக்கியங்களைப் படிக்கும்போது, நான்... எனக்கு இவ்வளவு வயதாவதற்கு முன்பு, எனக்கு நன்றாக ஞாபகமிருக்கும். அந்நாட்களில் நான்... வாலிப நாட்களில், நான் நீண்ட செய்தி பிரசங்கிப்பது கிடையாது - ஏறக்குறைய முப்பது 'நிமிடம். நான் நேரடியாக கருத்துக்குச் சென்று, அதை என் மனதில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். ஆனால் இப்பொழுதோ நான்.. நீண்ட நேரக் கூட்டம் நடத்தும் காரணம் என்னவெனில், இதை நான் ஒலிநாடாவில் பதிவு செய்கிறேன். பாருங்கள்? இதை ஒலி நாடாவில் பதிவு செய்யும் பையன்கள், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இதை பதிவு செய்யத் துவங்குவார்கள் - ஒருக்கால் இப்பொழுது ஜெபத்தின் துவக்கத்தில். அது உலகம் எங்கும் அநேக இடங்களுக்குச் செல்கின்றது. இன்று காலை நாம் புத்தாண்டு செய்தியை பிரசங்கிக்கப் போகின்றோம்... புத்தாண்டு செய்தி என்று நாம் அழைப்பதை; நான் மூன்று கிறிஸ்துமஸ் செய்திகளை பிரசங்கித்தேன். வனாந்திரத்தின் பின்பாகத்திலுள்ள ஜனங்கள் ஆகிய உங்களுக்கு அந்த ஒலிநாடாக்கள் கிடைக்கின்றன என்று அறிவேன். சபையில் நான் அளித்த கடைசி செய்தி அல்லது, அதற்கு முந்தின செய்தி, ''ஒளி,'' என்னும் தலைப்பைக் கொண்டதாகும். நீங்கள் அந்த ஒலிநாடாவைப் பெறவில்லை என்றால்; அதை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். நானும் அதை அதிகமாக ரசித்தேன். கர்த்தர் எனக்களித்த ஏவுதலின் காரணமாக, 26. இன்று, நாம் புத்தாண்டை சந்தித்துள்ள இந்நேரத்தில், கடந்து போனவை களை நான் நினைவுகூர விரும்பவில்லை, ஆனால் எதிர் காலத்தைக் காணவே நான் விரும்புகிறேன். பாருங்கள்? பவுல் கூறினது போன்று, "பின்னானவைகளை மறந்து, முன்னான வைகளை நாடி, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்''. காரில் பொருத்தப்பட்ட நிலைக்கண்ணாடி வழியாக காண்பது போன்றது அது. பின்னால் உள்ளதைக் காண்பதற்காக காரில் பொருத்தப்பட்ட நிலைக் கண்ணாடி (rear-view mirror) வழியாக நாம் காண்போமானால், நாம் ஏற்கெனவே கடந்து வந்ததையே காண முடியும். இன்றைய செய்தியை நான் அப்படிப்பட்ட நிலைக் கண்ணாடி வழியாக காண்பது போன்று உங்களுக்கு அளிக்க முயலவில்லை. அப்படி செய்வோமானால், கர்த்தர் கடந்த காலங்களில் செய்தவைகளைக் குறித்து சிந்திக்க நீண்ட நேரமாகி விடும். நமது கர்த்தர் செய்து வரும் கிரியைகளைக் குறித்து நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அவைகளில் சில என் வாழ்க்கையிலே நான் கண்ட மிக்க மகத்தான செயல் ஆகும் - கடந்த சில மாதங்களாக அவர் செய்தவை. கடந்த காலங்களில் நடந்தவைகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது நாம் முன்நோக்குகிறோம். நாம் எங்கு செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோமோ அதையும் 1964-ம் ஆண்டையும் முன் நோக்கிக் கொண்டிருக்கிறோம். 27. இங்குள்ள நீங்கள் வேதவாக்கியங்களைப் படிக்க விரும்பினால்.., நான் சில வேதவாக்கியங்களைப் படிக்க விரும்புகிறேன். ஏனெனில் இது அனைத்துமே தேவனுடைய பரிசுத்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டது. 28. இதை ஒலிநாடாவில் பதிவு செய்ய எனக்கு ஒரு மணி பதினைந்து நிமிடம் நேரம் உள்ளது. கர்த்தருக்கு சித்தமானால், அதற்குள் முடிக்கப் பார்க்கிறேன். அதன் பிறகு நீங்கள் பகல் உணவு அருந்தலாம். எனக்கு இன்றிரவு ஆறு மணி வரைக்கும் நேரம் உண்டு என்று என்னிடம் கூறினதால் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அது மிகவும் நல்லது. 29. இப்பொழுது வேதாகமத்தை இரண்டு இடங்களுக்கு திருப்புவோம். இந்த இரண்டு புத்தகங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ளன. அவை பழைய ஏற்பாட்டில் உள்ளன. வேத வாசிப்புக்காக இரண்டு இடங்களில் தெரிந்து கொண்டிருக்கிறேன் - ஏசாயா.62, சங்கீதம்.60. ஏசாயா.62-ஐ நாம் முதலாவது படிப்போம். இதில் தேவனுடைய மகத்தான வல்லமையைக் குறித்து நமக்கு ஞாபகப்படுத்தப்பட்டுள்ளது - அவர் எவ்வளவு மகத்தானவர் என்று. நமது தேவன் எவ்வளவு மகத்தானவர் என்று. மன்னிக்கவும், அது ஏசாயா 62 இல்லை, ஏசாயா 60, முதலிரண்டு வசனங்கள். எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன் மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன் மேல் காணப்படும். ஏசா.60-1:2 30. ''காரிருள் ஜனங்களை மூடும்'' இது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளுக்கான தீர்க்கதரிசனம். 31. இப்பொழுது நாம் சங்கீதங்களின் புத்தகத்துக்கு வேதாகமத்தை திருப்பு வோம். சென்ற இரவு நான் வசனங்களை அவசரமாக குறித்து வைத்த படியால், அதை எங்கே எழுதி வைத்தேன் என்று, சிறிது குழப்பமாயுள்ளது. சங்கீதம் 62:1-8. தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்கு செய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனை பண்ணி, அபத்தம் பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள் (சேலா). என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் (சேலா). சங்.62:1-8 32. அந்த சங்கீதத்தைப் படிக்கும் போது, அந்த வேத வாக்கியத்தை நீங்கள் கவனித்திருப்பீர்களானால், ''தேவனே என் கன்மலை'' (Rock) வேதத்தில் கன்மலை எதைக் குறிக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? வேதத்தில் கன்மலை என்பது “தேவனைக் குறித்த வெளிப்பாடு' என்னும் அர்த்தம் கொண்டது. பாருங்கள், ''தேவனே என் வெளிப்பாடு.'' அவர் அப்படித் தான் இருக்கிறார். பாருங்கள். வார்த்தையைக் குறித்த வெளிப்பாடே கன்மலை. 33. ஏனெனில் பேதுரு ஒரு நாள்... இயேசு, ''மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?'' என்னும் கேள்வி கேட்டார். 34. அப்பொழுது அவர்களில் ஒருவர், ''சிலர் உம்மை மோசே என்றும், சிலர் எலியாவென்றும், சிலர் எலியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்” என்றார். ''நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?'' 35. பேதுரு, ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்னும் அந்த புகழ்பெற்ற வார்த்தைகளைக் கூறினான். 36. அப்பொழுது இயேசு, ''யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த-வில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் (Rock) மேல்'' என்றார் பாருங்கள்? 37. தாவீது இங்கு, ''தேவனே எங்கள் கன்மலை'' (Rock) என்கிறான். தேவன் நமக்கு வெளிப்படும் போது, அவர் நமது கன்மலையாகிறார். அதுவே நமது கன்மலையாகிவிடுகிறது. தேவனே எங்கள் கன்மலை. 38. இன்றைய காலைக்கான பொருள் ஒரு வினோதமான வார்த்தை: ஷாலோம். எபிரெய மொழியில் ஷாலோம் என்றால் ''சமாதானம்'' என்று பொருள். இன்று காலை அதை தான் நான் சபைக்குக் கூறுகிறேன். "ஷாலோம்!” அது ''சமாதானம்'' என்று பொருள்படும். 39. பின்லாந்து நாட்டு மொழியில் அது ஜூமாலன் ரெளஹா (Jumalan Rauha) என்றழைக்கப்படுகிறது. அப்படியென்றால் ''தேவனுடைய சமாதானம்” உங்கள் மேல் தங்கியிருக்கக்கடவது என்று பொருள். ரெளஹா என்றால் தேவன், பாருங்கள், தேவனுடைய சமாதானம், ஷாலோம். 40. 1964-ம் ஆண்டுக்கான என் புத்தாண்டு செய்தி இயேசு கிறிஸ்துவில் தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கே. அது சபை குழுக்களுக்கல்ல, ஆனால் தெரிந்துகொள்ளப்பட்ட சபையாகிய சீமாட்டிக்கு, கிறிஸ்துவின் மணவாட்டிக்கு, அவளுக்கு தான் இதை கூறுகிறேன். 41. நாம் வாசித்த இந்த இரண்டு பொருள்கள் - அல்ல, இரண்டு வேத வாக்கியங்கள் - ஒன்றுக்கொன்று முரணாயுள்ளதை நாம் காண்கிறோம். ஏசாயாவில், "எழும்பிப் பிரகாசி, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. ஒளி இங்குள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கடுத்த வசனம் ''காரிருள் ஜனங்களை மூடியுள்ளது.'' என்று கூறுகின்றது. ஒளியும் இருளும் கலந்துள்ள நிலையில் நாம் இருக்கும்போது, நான் சபைக்கு அளிக்கும் செய்தி "ஷாலோம், சமாதானம்'' என்பதாம். இதெல்லாம் என்னவென்று நாம் காண்போம் பாருங்கள். நாம் இந்த ஆண்டை இருள், வெளிச்சம் இரண்டோடும் சந்திக்கிறோம். நாம்... உலகமானது இதுவரை கண்டிராத மிகவும் ஒழுங்கற்ற இருள் நேரத்தை அடைந்துள்ளது. அதே சமயத்தில், அது இதுவரை பிரகாசித்திராத மிகவும் ஆசீர்வாதமான ஒளியைப் பெற்றுள்ளது.! 42. இதன் வித்தியாசம் ஆதியில் எவ்வாறிருந்ததோ, அவ்வாறே. அப்பொழுது பயங்கரமான இருள் பூமியின் மேலிருந்தது. தேவன் ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடி கொண்டிருந்தார். அவர், ''வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்றார். தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாக பிரித்தார். தேவன் மறுபடியும் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன். வெளிச்சம் காணப்பட வேண்டும் என்பதற்காக அவர் அதை உலகின் மற்ற பாகத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். 43. சபைக்கு நான் "ஷாலோம்'' என்று கூறும் காரணம் என்னவெனில், அது தேவனுடைய சமாதானமாகும். அதை தான் இந்த புத்தாண்டுக்கு, இன்று காலை உங்களிடம் கொண்டு வர விரும்புகிறேன். நாம் பின் நோக்காமல், அந்த நாள் உதிப்பதற்காக நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். அது வரைக்கும் நமக்கு முன்னால் பெரியது ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர் நோக்கி காத்திருந்த ஆண்டுகள் நமக்கு மகிழ்ச்சியை அளித்து வந்துள்ளன. இப்பொழுது அந்த மகத்தான வெளிச்சம் வருவதை நாம் எதிர் நோக்கி தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது அது அடிவானத்தில் தோன்றுவதை நம்மால் காண முடிகிறது. அது அழிவுக்கும் அழியாமைக்கும் இடையே தோன்றுகிறது. அது வானத்துக்கும் பூமிக்கும் இடையே, வியாதியும் தொல்லையும் நிறைந்த இவ்வுலகத்திலிருந்து, அழியாத ஜீவனும், அழியாத சரீரமும், என்றென்றைக்கும் ஒழிந்து போகாத அழியாத பூமியில் பிரகாசமான நாளாக உதிப்பதை நாம் காண்கிறோம். அது சபைக்கு "ஷாலோம்" விசுவாசிகளுக்கு இது வெளிச்சத்தின் நேரம், ஆனால் மற்ற ஜனங்களுக்கோ இது காரிருள். 44. அன்றொரு நாள் நானும் என் மனைவியும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இந்த இடத்தை நான் தெரிந்து கொண்ட காரணம் என்னவெனில், நான் இங்கு வந்து உங்களிடம் வெளிப் படையாய் பேசலாம் என்பதே. பாருங்கள், பாருங்கள்? ஜனங்களின் மேல் ஒரு நேரம் வந்து உள்ளது போல் தோன்றுகிறது. நான் நினைத்துப் பார்க்கக் கூடியவைகளில் அது மிகவும் பரிதாபமான நேரம். 45. மதசம்பந்தமான விஷயங்களில் நான் மனிதருடன் இணங்காமலிருக்க நான் அதிகமாக முயன்று வந்திருக்கிறேன். நான் கூறினவை எவ்வளவு கடினமாயிருந்த போதிலும், அதன் பிறகு அந்த மனிதனின் கரங்களை நான் பிடித்துக் கொண்டு, "நம்மிடையே இதைக் குறித்து கருத்து ஒற்றுமை உண்டாக வேண்டும் என்பதற்காகவே இது கூறப்பட்டது'' என்று கூறி, அவரை நான் நேசிக்காமல் போனால் (நான் நேசிக்கிறேன் என்று உதடு அளவில் மாத்திரம் கூறுவதல்ல, இருதயப் பூர்வமாக நேசித்தல்). நான் வெளியே சென்று ஜனங்களிடம் பேசுவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை. பாருங்கள், நாம் அதை செய்ய வேண்டும், அந்த நபரை நாம் நேசிக்க வேண்டும். பாருங்கள்? பலதரப்பட்ட ஜனங்களிடையே - வெவ்வேறு கோட்பாடுகள், வெவ்வேறு மதங்கள் போன்றவைகளைப் பின்பற்றுபவர்கள் இடையே சென்று, வேதத்தை கீழே வைத்து விட்டு, ''உங்கள் கோட்பாடு-களையோ அல்லது உங்கள் பிரமாணங்களின் புத்தகத்தையோ ஆதாரமாகக் கொண்டு இதை விவாதிக்காமல், வேதாகமத்தை ஆதாரமாகக் கொண்டு விவாதிப்போம்'' என்று கூறும் போது, சில நேரங்களில் ஜனங்கள் கோபப்-படுகின்றனர். ஆயினும், அந்த மனிதன் மீது எனக்கு பிரியமில்லை என்று என் மனதில் ஒரு சிறு எண்ணம் இருக்குமானால், கிறிஸ்துவின் ஆவி என்னை விட்டு போய் விட்டார் என்று அர்த்தம், அந்த நபரின் மீது எனக்குப் பிரியம் இல்லை என்னும் உணர்ச்சி எனக்கு இருக்குமானால், என்னில் ஏதோ தவறுண்டு. 46. ஏனெனில் கிறிஸ்துவின் ஆவி. அவருடைய சொந்த ஜனங்கள் ஆணிகளைக் கடாவி அவரைச் சிலுவையிலறைந்த போது; அவர் சிருஷ்டித்த அந்த சிருஷ்டிப்பே அவருடைய மாமிச சரீரத்தில் ஆணிகளைக் கடாவின போது, அவர் அன்பு நிறைந்த இருதயம் கொண்டவராய், "பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாது இருக்கிறார்களே'' என்று கதறினார். பார்த்தீர்களா? 47. நானும் அந்நிலைக்கு வந்துள்ளேன். ஜனங்கள், தாங்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறியாமலிருக்கின்றனர் என்று எண்ணுகிறேன். மானிடர் அதிகமாக பொல்லாங்கினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். அது மிகவும் பரிதாபமான காரியம் ஜனங்களின் மேல், இருளின் நிழல் அசைவாடி, இவைகளைச் செய்யத் தூண்டுகிறது என்பது போல் தோன்றுகிறது. 48. இதை எடுத்துக்காட்டாக கூறவிரும்புகிறேன். தேசம் முழுவதிலும் சென்று பிரசங்கித்து வரும் போது, தேவனாகிய கர்த்தர் தமது வார்த்தையை உறுதிப்படுத்தி, நிறைவேறாத ஒன்றையும் அவர் கூற அனுமதிக்காமல், கூறப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றி தந்து, பேசி சிருஷ்டித்து, இப்படிப் பட்ட காரியங்களை செய்து வந்திருக்கிறார். ஜனங்கள் உட்கார்ந்து கொண்டு அதை பார்த்து விட்டு, அவர்கள் இருந்த நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர். பாருங்கள்? 49. இதை அவமதிப்பதற்காக கூறவில்லை. நமது சகோதரிகளிடம் எத்தனையோ முறை அவர்கள் இப்படிப்பட்ட உடைகளை அணிவதைக் குறித்தும், தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதைக் குறித்தும் கூறி வந்து இருக்கிறேன். மனிதர்களும் தங்கள் கோட்பாடுகளிலேயே நிலைத்திருந்து, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில் தேவனை ஆராதித்து வருகின்றனர்- அவர்கள் நல்லவர்கள். அவர்கள் மிகவும் அருமையானவர்கள். இருப்பினும் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது போல் தோன்றுகிறது. அவர்களால் அதை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. ஏன்? அடுத்த ஆண்டு அங்கு நான் செல்லும்போது, அவர்கள் திருந்தியிருப்பதற்கு பதிலாக இன்னும் மோசமான நிலையில் உள்ளனர். இது தொடர்ந்து நடந்து வருகிறது. மிகவும் அழகான நீண்ட கூந்தலை உடைய ஒரு சகோதரி இங்கு இருந்தாள். அவள் அதை கத்தரித்து விட்டாள். இதோ ஒரு மனிதன் சத்தியத்தில் உறுதியாய் நின்று முன்னேறிக்கொண்டிருந்தான்; ஆனால் அவன் பின் வாங்கிப்போய்... நாய் தான் கக்கினதை தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது போல். பாருங்கள், மீண்டும் அதற்கே திரும்பி விடுகிறான். ஏதோ ஒன்று ஜனங்களைத் தாக்கினது போல் தோன்றுகிறது, அது உலகத்தை தாக்கியுள்ளது. அவர்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதது போல் தோன்றுகிறது... ஏதோ தவறுள்ளது. 50. மனிதர்களை இன்று நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவர்களிடம் உண்மையை உங்களால் காண முடியாது. அதை ஸ்திரீகளிலும் காண முடிவதில்லை. நான் இதைப் பேசக் காரணம் என்னவெனில், இதை ''ஷாலோம்" என்னும் செய்திக்கு ஆதாரப்படுத்த, பாருங்கள்? 51. இன்றைய பெண்களை நீங்கள் கவனிப்பீர்களானால், முன்பு பெண்களுக்கு இருந்த சீமாட்டி சுபாவம் (Lady-like) அவர்களிடம் இல்லை. அவர்கள் அப்படி இருக்க விரும்புகின்றனர். ஆனால் ஏதோ ஒன்று அவர்களைத் தடை செய்கிறது. ஏதோ ஒரு பாரம் உள்ளது போல் தோன்றுகிறது. ஒரு பெண்ணிடம் நீங்கள் அவள் அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்று கூறுவீர்களானால், அவள் அதற்கு செவிகொடுத்து அதை நம்பு- கிறாள். அவள் அதை நம்ப முயற்சி செய்கிறாள். ஆனால் ஏதோ ஒன்று அவளை வேறு பக்கமாக இழுத்து விடுகிறது. பாருங்கள்? ஏழை பெண். அவளுக்காக நான் வருந்துகிறேன். அவள் ஹாலிவுட்டின் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறாள். தொலைகாட்சி, வானொலி, செய்தித்தாள்கள் ஆகியவைகளில் செய்யப்படும் விளம்பரங்கள், கடைகளில் செய்யப்படும் நவீன ஆடை விளம்பரங்கள் அவளை சந்திக்கும் மற்ற பெண்கள் உடுத்தி உள்ள விதம் போன்றவை அவளை கவர்ந்து விடுகின்றன. அதிலிருந்து அவர்- களால் தங்களை வெளியே இழுத்துக் கொள்ள முடியவில்லை என்பது போல் தோன்றுகிறது - வாலிபர், வயோதிபர், நடுத்தர வயதுள்ளவர் அனைவருமே. 52. மனிதர்களிடையேயும் ஏதோ ஒன்று உள்ளது போல் தோன்றுகிறது. மனிதர்கள், தாங்கள் முன்பு பெற்றிருந்த ஆண்மைத்துவத்தை இப்பொழுது பெற்றிருக்கவில்லை, அவ்வாறே பெண்களும், தாங்கள் முன்பு பெற்றிருந்த பெண்மைத்துவத்தை இப்பொழுது பெற்றிருக்கவில்லை. இன்றைய மனிதனைப் பாருங்கள். அவன் முன்பிருந்ததைப் போல் இப்பொழுது திடகாத்திரமுள்ளவனாய் இருப்பதில்லை. இது அனைத்தும் ஏதோ ஒரு வகையான... அவர்கள் மிருதுவான தோலினால் செய்யப்பட்ட இந்திர நீலமுள்ள (purple) காலணிகளை அணிய விரும்புகின்றனர். அவர்கள் பெண்களைப் போல் நடந்து கொள்ள விரும்புகின்றனர். அது உண்மை . அது ஏறக்குறைய முறை தவறிய நிலை (Perversion) போன்றது. ஒரு பெண் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு ஆணைப் போல் நடந்து கொள்ள விரும்புகிறாள். ஒரு ஆண் பெண்ணைப்போல் நடந்து கொள்ள விரும்புகிறான். பாருங்கள்? இருப்பினும், அவர்களிடம் நீங்கள் பேசினால், பேசுவதற்கு அவர்கள் மிகவும் நல்லவர்கள், நட்பு தன்மை கொண்டவர்கள், நன்றாகப் பழகுபவர்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஜனங்களின் மேல் தங்கியுள்ள காரிருளே அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. 53. இயேசு இவ்வுலகில் வந்த போது இருந்த யூதர்களைப் போல், ஏசாயா அவர்களைக் குறித்து, "அவர்களுக்கு கண்களிருந்தும் காணாமலும் காதுகள் இருந்தும் கேளாமலும் இருக்கிறார்கள்'' என்றான். அதன் காரணமாகத் தான் இயேசு அவர்களை மன்னிக்கும்படி ஜெபித்தார். வேத வாக்கியம் நிறைவேறுவதற்காக அது அப்படி இருக்க வேண்டியதாயிற்று. 54. அது மறுபடியும் நம்மிடத்தில் திரும்ப வந்துள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாளைக் குறித்து, வேதம் முன்னுரைத்து, இவை நிகழும் என்றும் ''காரிருள் ஜனங்களை மூடும்'' என்றும் கூறுகின்றது. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதில் ஏதோ ஒன்றுள்ளது, ஜனங்கள் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 55. நிக்கொதேமு ஒரு முறை இயேசுவிடம், “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'' என்றான். ஆனால் யூத ஜாதியின் மீது அந்த இருள் இருந்தது, அவர்கள் குருடராயிருந்தனர். மேசியா புறஜாதி- களிலிருந்து ஒரு மணவாட்டியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி நடந்தது. அவர்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டியதாயிற்று. 56. அது தான் இன்று சபைகளின் மேலும் மற்றவைகளின் மேலுமுள்ள காரிருள். வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவர்கள் காணத் தவறுகின்றனர். பாருங்கள்? பலமான தூண்டுதல் உள்ளது போல் தோன்றுகிறது. இன்றைய புகழ் வாய்ந்த சுவிசேஷகர்களை நாம் எடுத்துக் கொள்வோம். அவர்கள் ஒரு எழுப்புதலுக்காக எப்பொழுதும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறனர், ஆனால் அதற்கு விரோதமாக அவர்கள் கிரியை செய்து கொண்டிருக்கின்றனர்; பாருங்கள், அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லை. 57. 'நாங்கள் இதைக் கண்டு கொண்டோம், தேவனுக்கு மகிமை. அவர்கள் அதில் இல்லை' என்னும் மனப்பான்மையுடன் இதைக் கூறவில்லை. ''சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஒருவர் மாத்திரமே உலகத்தில் காணப்படும் சத்தியத்தைப் பெற்றிருக்கின்றீர்கள்” என்று ஜனங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. இல்லை, அது தவறு. பாருங்கள்? 58. இந்த வெளிச்சத்தை தேடிக்கண்டு பிடிக்க முயன்று கொண்டிருப்பவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக. நாம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் காணப்படும் வெளிச்சத்தைக் குறித்துக் கூறிக் கொண்டு இருக்கிறேன். உண்மையாக. இயேசு "என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' என்றார் யாரும் அதைக் காண முடியாது. முன்குறிக்கப்பட்ட வித்து மாத்திரமே அதை ஏற்றுக் கொள்ளப் போகின்றது. நாம் மறுபடியும் அந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். வேதம் ''நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று கூறுகிறது. 59. தீர்க்கதரிசி, 'காரிருள் ஜனங்களை மூடும்'' என்றான். இக்காலத்தில் உலகத்திலுள்ள ஜனங்களை. அதைத் தான் நாம் பெற்றிருக்கிறோம். ஜனங்களின் மேல் காரிருள். 60. நான் எப்பொழுதும் உறுதியாய் பிரசங்கித்து வருகிறது போல், தேவன் தமது மிகுந்த இரக்கத்தின் நிமித்தம், வரப்போகும் சம்பவங்களை வானத்தில் காண்பித்து விடுகிறார். தம்முடைய மகத்தான சம்பவங்கள் அனைத்துமே பூமியில் நிகழ்வதற்கு முன்பு வானத்தில் நிகழ்ந்து விடுகிறது. அவர் தம்மை பிரதிபலிக்கிறார். உதாரணமாக மேசியா தமது ஊழியத்தை தொடங்கு-வதற்காக இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பே, வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றி, அவரிருந்த இடத்திற்கு அந்த சாஸ்திரிகளை வழி நடத்தினது. அந்த சாஸ்திரிகளுடன் தேவன் எவ்வாறு ஈடுபட்டாரென்று என்னுடைய முந்தைய செய்தியில் நீங்கள் கேட்டீர்கள். எவ்வாறு ஒரு சொப்பனத்தின் மூலம் அவர்களை வழி திருப்பினார் என்றும், யோசேப்புக்கு ஒரு சொப்பனத்தின் மூலம், தம்முடைய சொந்த குமாரனின் நலனை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமென்று அவனுக்குக் கட்டளையிட்டார் என்றும், அவனுக்கு அந்த சொப்பனம் உண்டானதால், அங்கு... 61. சொப்பனம் என்பது இரண்டாம் தரமானது, அது வேறு பக்கத்தில் கொண்டு சென்று விடக்கூடும். ஏனெனில் ஜனங்கள் தவறான சொப்பனங்களைக் காண முடியும். ஆனால் அந்த நாளில் தேசத்தில் தீர்க்கதரிசி இல்லை, பாருங்கள், தீர்க்கதரிசி இல்லாத காரணத்தால் தேவன் வேறெதை உபயோகிக்க முடியுமோ, அதை உபயோகித்தார். அது நமக்கு என்ன கற்பிக்கிறது என்றால், நமது புலன்களையும் நமது செய்கைகளையும் நாம் தேவனுக்கு பிரதிஷ்டை செய்வோமானால், அவரால் அவை ஒவ்வொன்றையும் உபயோகிக்க முடியும். ஆனால் முதலில் அது அவருக்கு பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். உங்கள் தியானங்கள் சொப்பனத்தின் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றன. ஏனெனில் அது உங்கள் உள்ளுணர்வு. உங்கள் சொப்பனங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், நீங்கள் என்ன யோசித்துக் கொண்டிருந்தீர்களோ அதனுடன் அது சம்மந்தப்-பட்டுள்ளதைக் காணலாம். அப்படி ஏதோ ஒன்று. வழக்கமாக அப்படித்தான், பாருங்கள். உங்கள் சிந்தை தேவன் மேல் இருக்குமானால், அப்பொழுது அவருக்காக ஒன்றை அது பிரதிபலிக்கும். நீங்கள் என்னவாயிருந்தாலும், உங்கள் சிந்தை அவரைப் பிரதிபலிக்கட்டும். 62. இப்பொழுது, மேலேயுள்ள வானத்தில். லைஃப் பத்திரிக்கையில் வெளியான அந்த படத்திலுள்ள ஒளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை கவனித்தீர்களா? இங்கு வசிக்கும் அந்த சகோதரன் அவருடைய வீட்டில் அதை சுவற்றில் தொங்க விட்டிருக்கிறார் - முக்கோண வடிவுள்ள அந்த ஒளி. 63. என் மனது அதைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினது. உங்களில் யாரிடமாவது லாம்சா என்பவர் மொழி பெயர்த்த வேதாகமம் இருக்குமானால், அதன் மேலுறையில் திரித்துவ ஒளியை, ஒளி வட்டத்தைப் போன்ற மூன்று முனைகள் கொண்ட ஒளியைக் காணலாம். எனக்கு நண்பரான டாக்டர் லாம்சா வேதாகமத்தை மொழி பெயர்த்த போது, அது உண்மையான திரித்துவ விதத்தில் தேவனை சித்தரிக்கும் பழைய எபிரெய அடையாளமாகும். அதாவது மூன்று கடவுள்கள் அல்ல, ஆனால் ஒரே கடவுளின் மூன்று தோற்றங்கள் (Manifestations) பிதா, குமாரன் பரிசுத்த ஆவி. அது முழு வட்ட ஒளியாக முக்கோண வடிவில் அமைந்துள்ளது. அதன் அர்த்தம் என்னவெனில், தேவன் பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவியுகம் என்னும் மூன்று உத்தியோகங்களில் வாழ்கிறார்- அதே தேவன். 64. ஏழு முத்திரைகளின் இரகசியம் வெளிப்படுவதற்கு முன்பு, அந்த மகத்தான இரகசிய ஒளி நாங்கள் இருந்த டூசானிலுள்ள ஃபிளாக் ஸ்டாஃப்புக்கு (Flagstaff) மேலே வானத்தில் தோன்றினது என்பதை கவனித்தீர்களா? சகோ.ஃபிரட், இரண்டு பேர். அன்று காலை இரண்டு பேர் என்னுடன் இருந்தனர். அது நிகழுமென்று அநேக மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இன்று காலை இங்கு அமர்ந்துள்ள சகோ.ஃபிரட் சாத்மன், சகோ. ஜீன் நார்மன் இருவரும்... வெடி உண்டான போது அங்கிருந்தனர். என்ன நடக்குமென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர் என்னை திரும்ப அனுப்பி, ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டுள்ள வேதாகமம் முழுவதுமுள்ள ஏழு பரம ரகசியங்கள் வெளிப்படும் நேரம் வந்துவிட்டதென்று கூறினார். காலங்கள் தோறும் தோன்றின சபை காலங்களின் தூதர்கள் அதன் சில பாகத்தை மாத்திரம் திறந்தனர். ஆனால் ஏழாம் மணி நேரத்தில், ஏழாம் தூதனின் நாட்களில், இந்த இரகசியங்கள் அனைத்தும் நிறைவேறும். பாருங்கள்? அவர் குறிப்பிடுகின்ற இந்த தூதன், அப்பொழுது பூமியில் இருப்பார். 'தூதன் (Angel) என்றால் 'செய்தியைக் கொண்டு வருபவன் (Messenger) என்று பொருள். அதன் பின்பு வேறோரு தூதன் கீழே இறங்கி வருவதை யோவான் காண்கிறான். இது செய்தி தன்னிடம் அளிக்கப்பட்ட பூமியைச் சேர்ந்த தூதன் அல்ல ஆனால் வேறொரு தூதன், மகத்தான தூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறார். அவருடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. அவர் ஒரு பாதத்தை சமுத்திரத்தின் மேலும் ஒரு பாதத்தை பூமியின் மேலும் வைத்து, "இனி காலம் செல்லாது” என்று சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறவர் மேல் ஆணையிடுகிறார். பாருங்கள்? அவர் 7-முத்திரைகளை உடைத்து அதன் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பு, அவர் அந்த அற்புதத்தை முதலில் வானத்தில் காண்பித்தார். 65. அன்று அவர்கள் தென்.அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், மெக்ஸிகோவிலும் புகைப்படங்கள் எடுத்தனர். இதோ அது லைஃப் பத்திரிக்கையில் வெளியாகி இங்கே தொங்கி கொண்டிருக்கிறது. அது இன்னும் அவர்களுக்கு மர்மமாய் உள்ளது. அவர் அதை பூமியில் செய்தவற்கு முன்பே, அதை வானங்களில் வெளிப்படுத்துகிறார். அவர் எப்பொழுதும் அப்படியே செய்து வருகிறார். அவர் முதலில் தமது அடையாளங்களை வானங்களில் காண்பிக்கிறார். 66. வான ராசிகளிலும் கூட. நான் வானராசிகளுக்கு சென்று அதை உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கப் போகிறதில்லை. வானங்கள் அதை வெளிப்படுத்துகின்றன என்பதை மாத்திரம் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். வானராசிகளில் அவர் முழு வேதாகமத்தையுமே வெளிப்படுத்தி உள்ளார். வானராசிகளில் முதலாவதாக காணப்படும் உருவம் கன்னி, கடைசி உருவம் சிம்மம். இயேசு முதலில் இவ்வுலகில் கன்னிகையின் மூலம் தோன்றுவார் என்றும், அவர் இரண்டாம் முறை யூதா கோத்திரத்தின் சிங்கமாக வருவாரென்றும் அது காண்பிக்கிறது. பாருங்கள்? அதற்கு முன்பாக இரண்டு குறுக்கு மீன்களின் வழியாகச் செல்கிறார்- நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் மகர-காலம் (Cancer Age), "வானங்கள் அவரை வெளிப்படுத்து- கின்றன” என்று வேதம் கூறுகின்றது. 67. சில மாதங்களுக்கு முன்பு கூடாரத்தில் ஏழு சபை காலங்களைக் குறித்து தொடர்ச்சியாக பேசினேன். ஒருக்கால் நீங்கள் எல்லோரும் அதைக் கேட்டு இருப்பீர்கள். ஏழு சபைக் காலங்களில் வெளிச்சம் எவ்வாறு வந்து, அது எவ்வாறு மறைந்தது என்று நான் கரும்பலகையில் வரைந்து காண்பித்தேன். உங்களிடம் அது உள்ளதென்று நினைக்கிறேன். ஒருக்கால் இங்கு எங்காவது அது இருக்கக் கூடும். எப்படியாயினும், அது நமது மத்தியில் உள்ளது. அதை நாமறிவோம். விசித்திரமான காரியம் என்னவெனில், கடைசி நாளன்று, கடைசி சபையின் காலத்தின் நிலைமை வரைந்து காண்பிக்கப்பட்ட போது, நமது மத்தியில் உள்ள அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் அங்கிருந்த நூற்றுக்கணக்கானவர் மத்தியில் இறங்கி வந்து, கூடாரத்தின் பின் சுவற்றை அடைந்தது. அங்கு இந்த நூற்றுக்கணக்கானவர் மத்தியில் அது சபை காலங்களை வரைந்து - கறுப்பு தீட்டியும் வெளுப்பாகவும் வரைந்து - நான் கரும்பலகையில் எவ்வாறு வரைந்திருந்தேனோ, அதே விதமாக வரைந்தது; அற்புதமாக-! 68. அன்றொரு நாள் சபை சரித்திரத்தின் நிகழ்ச்சியில் நாம் பார்த்தோம்... வேதத்தில் சந்திரன் 'சபைக்கு” உதாரணமாயுள்ளது, சூரியன் 'கிறிஸ்துவுக்கு உதாரணமாயுள்ளது. அதை நாம் வெளிப்படுத்தல் 12-ம் அதிகாரத்தில் காண்கிறோம். அதிலுள்ள ''சபையாகிய'' ஸ்திரீயின் பாதங்களின் கீழ் சந்திரனும் தலையில் சூரியனும் காணப்பட்டன. அவள் அணிந்திருந்த கிரீடத்தில் 12-நட்சத்திரங்கள் இருந்தன-! பழைய வைதீக யூதப்பிரமாணம் அவளுடைய பாதங்களின் கீழ் இருந்தது. அவள் அதைக் கடந்து சூரிய வெளிச்சத்துக்குள் வந்து விட்டாள். 12-நட்சத்திரங்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நமக்கு செய்திகளைக் கொண்டு வந்த "பன்னிரண்டு அப்போஸ்தலர்களைக் குறிக்கின்றது. வானத்திலுள்ள சந்திரன், சூரியன் இல்லாத போது, சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்க வேண்டியதாயுள்ளது. என்று நாம் காண்கிறோம். நாம் அங்குமிங்கும் செல்ல அது வெளிச்சத்தை நமக்கு தருகின்றது. ஆனால் அது அப்பொழுதும்... அது எவ்வளவு தான் வெளிச்சத்தைப் பிரதிபலித்தாலும், அது பரிபூரண வெளிச்சம் அல்ல. ஏனெனில் அது பிரதிபலிக்கப்பட்ட வெளிச்சம். சூரியன், சந்திரனுக்கு எதிராய் பிரகாசிக்கின்றது. சந்திரன், சூரியன் இல்லாத போது, அதன் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கின்றது. ஆனால் சூரியன் மேலே எழும்பும் போது, சந்திரன் இனி அவசியமில்லை. 69. அது போன்று சபையானது இங்கில்லாத தேவனுடைய குமாரனுடைய வெளிச்சத்தை இன்று பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. சபையானது வெளிச்சத்தின் பிரதிபலிப்பாய் உள்ளது. ஏனெனில் அவர், ''இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் காலத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை” என்றார். அவர் வெளிப்படுத்தின வெளிச்சம். தேவனுடைய வார்த்தையின் மூலமாக அன்றி வேறெந்த வழியிலும் வெளிச்சம் வராது. 70. சூரியன் தேவனுடைய வார்த்தை. ஆதியிலே தேவன் ''வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார். தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டபோது, வெளிச்சம் உண்டானது. முதலாவதாக, தேவன் அதை உரைத்தார். அது வெளிப்படாதிருந்தால் என்னவாயிருக்கும் - வெளிச்சம் உண்டாயிருக்காது. அவர், அதை உரைத்து, அது வெளிப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட போது அவருடைய வார்த்தை உறுதிப்படுத்தப்பட்ட போது வெளிச்சம் உண்டானது. 71. அந்த ஒரே வழியில் தான் அதை இப்பொழுதும் செய்ய முடியும். அதாவது வார்த்தை உறுதிப்படுத்தப்படும் போது, தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தை உறுதிப்படுத்தப்படும் போது, அது வெளிச்சத்தைக் காண்பிக்கிறது. ஒவ்வொரு காலத்திற்கென்றும் வார்த்தையின் ஒருபாகம் பிரகாசமடைந்து, அக்காலத்தில் அளிக்கப்படுகின்றது. சபைக்காலங்களில் அதை நாம் காண்கிறோம். பழைய ஏற்பாட்டின் சபைக் காலங்களிலும் அதை நாம் காண்கிறோம். யாத்திரை செய்வதற்காக நேரம் வரும் ஒவ்வொரு முறையும், ஒரு தீர்க்கதரிசி பூமிக்கு வந்தான். வார்த்தையானது தீர்க்கதரிசியிடம் வந்தது, அவன் அந்த வார்த்தை ஜீவிக்கும்படி செய்தான். அந்த வார்த்தை அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட போது அது தேவனை பிரதிபலித்தது. அந்த காலத்திற்கு அது வெளிச்சமாக இருந்தது. அதே வழியில் தான் வெளிச்சம் இன்றைக்கும் வருகிறது. 72. எனக்கு எந்த ஸ்தாபனத்துடனும் - ஸ்தாபனத்தின் மக்களுடன் - விரோதம் கிடையாது. ஆனால் ஸ்தாபனங்கள் தவறாயுள்ள காரணத்தால், நான் நினைக்கக் கூடிய அளவுக்கு, அந்த முறைமைகளுக்கு விரோதமாய் இருக்கிறேன். முதலாவது எழும்பின முறைமை ரோமன் முறைமை அல்லது ரோமன் கத்தோலிக்க சபை. முதலாவதாக தன்னை ஸ்தாபித்துக் கொண்ட ஸ்தாபனம் அந்த ரோமன் கத்தோலிக்க சபை தான். அது ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் நிறுவப்பட்டது. இயேசுவின் மரணத்திற்கு 321 ஆண்டுகள் கழித்து, ரோம சபை ஸ்தானம் தோன்றி ஜனங்களை ஒன்றுபடுத்தி, அதற்கு விரோதமாயுள்ள எதையும் புறம்பாக்கினது அங்கு தான் அவர்கள் வினோதமான உபதேசங்களை ஏற்படுத்திக் கொண்டு, வார்த்தைக்குப் புறம்பான ஒரு முறைமையைத் தொடங்கினர். அந்த காலம் முதல் அந்த சபை இருளையே பிரதிபலித்துக் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் அந்த சமயத்தில் நாம், 'இருளின் காலங்கள்'' என்றழைக்கும் காலத்தை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக கடந்து வருகிறோம். எல்லா சரித்திரக்காரரும் வேதப் பண்டிதர்களும் இருளின் காலங்கள் என்ற பெயரினால் அதை அறிவர். அக்காலத்தில் ரோம சபை அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டிருந்தது. 73. இந்த ரோம சபை தான் "வேசிகளுக்குத் தாய்” என்று வேதம் வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தில் உரைக்கிறது, ''அவள் ஒரு வேசி, அவள் வேசிகளுக்குத் தாய்,'' அது நடத்தை கெட்ட அசுத்தமான வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணைக் குறிக்கிறது. இரு சாராரும் வேசிகளே- இருவரும் ஒரே விதமான நடத்தை கொண்டவர்கள். வேசியென்றால் அவள் ஸ்திரீயாக இருக்க வேண்டும். நீங்கள் கவனிப்பீர்களானால், அது 'வேசி'யல்ல, 'வேசிகள்.' பாருங்கள்-? அவள், ஒருமையில் 'வேசி' என்றே அழைக்கப்படுகிறாள். ஆனால் சபைகளோ 'வேசிகள்' என்றழைக்கப்படுகின்றன - ரோம வேசியின் குமாரத்திகள். அவள், அவர்களுக்கெல்லாம் தாய். அவள் ஸ்தாபனங்கள் அனைத்துக்கும் தாயானவள். 74. இந்நாளில் நாம் இவைகளை எல்லாம் கடந்து வந்து, செய்தியும் ஸ்தாபனத்துக்கு விரோதமாய் பூமியெங்கும் சென்ற பின்பு, இது நமக்கு வினோதமாகத் தோன்றுவதில்லை. அது அதை வலது புறமாகவும் இடதுபு றமாகவும் தகர்த்து விட்டது. 1933-ம் ஆண்டில் பரிசுத்த ஆவி எனக்குத் தரிசனங்களை அளித்து முடிவு காலத்தைக் காண்பித்தார். நான் ஏழு சம்பவங்களைக் குறித்து பேசினேன். அவைகளில் ஐந்து ஏற்கெனவே பிழை இன்றி நிகழ்ந்து விட்டன- ஜெர்மனி, இத்தாலி யுத்தங்கள் போன்றவை, தேசிய சம்பவங்கள் (அவர் இதைக் குறித்து அடிக்கடி என்னுடன் பேசுவதில்லை). ஆனால் அவை எப்படி நிகழும் என்று அவர் என்னுடன் கூறினாரோ, அதே விதமாக பிழையின்றி நிகழ்ந்தன. எப்படி முசோலினி எத்தியோப்பியாவுக்குச் செல்வான் என்றும், அது அவன் காலடியில் விழும் என்றும், அவன் எப்படி அவமான முடிவை அடைவான் என்றும், அவனுடைய சொந்த ஜனங்கள் அவனுடைய முகத்தில் துப்புவார்கள் என்றும், அவன் அவமானப்பட்டு, அவன் வாழ்ந்த அந்த வேசியுடன் தெருவில் தலைகீழாக தொங்க விடப்படுவான் என்றும்; எப்படி அமெரிக்கர்கள் ஜெர்மானியருடன் யுத்தத்துக்கு சென்று, கான்கிரீட்டினால் கட்டப்பட்டு அரணாக்கப்பட்டிருந்த அந்த கோட்டின் அருகில் மடங்கடிக்கப்படுவார்கள் என்றும் - அது சீக்ஃபிரீட் எல்லை கோடு என்று அழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். மாகினாய் என்னும் வேறொரு எல்லைக்கோடு உள்ளது. அது பிரஞ்சு நாட்டவருடையது என்று நினைக்கிறேன். அது சரியா? சீக்ஃபிரீட் எல்லைக்கோடு. ஜெர்மன் கோடாகும். அது கட்டப்படுவதற்கு பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அதை காணும்படி தேவன் செய்தார். தாங்கள் மடங்கடிக்கப்பட்டதாக அமெரிக்கர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏறக்குறைய முழு சேனையும் அங்கு கொல்லப்-பட்டது. அமெரிக்க சேனை அங்கு சென்ற போது, ஜெர்மானியர் தங்கள் துப்பாக்கிகளை சேனைக்கு நேராக குறி வைத்து சுட்டு, அவர்களைக் கொன்று விட்டனர். அதை நான் பதினொறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டேன்- சீக்ஃபிரீட் கோட்டுக்கு அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்பே. இவைகளும் இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் போன்றவைகளும் - அவர் கூறின விதமாகவே எல்லாம் நிறைவேறின. முடிவில் ஒரு ஸ்திரீ தேசத்தை ஆளுவாள் என்று. ஒருக்கால் அது சபையாக இருக்கலாம். அதன் பிறகு முடிவு வந்தது. 75. இவை யாவும்; நான் எப்படி ஸ்தாபனத்துக்கு விரோதமாக கடினமாகப் பேசினேன்-! ரோமாபுரியிலுள்ள போப் முதன் முறையாக ரோமாபுரியை விட்டு எருசலேமுக்குச் சென்றது வினோதமான செயல் அல்லவா-? அவ்வாறு செய்ததன் மூலம்... எருசலேமிலுள்ள சபை தான் உலகிலேயே மிகவும் பழமையான சபை. 76. ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு மெல்கிசேதேக்கு எதிர் கொண்டு போன போது, அவன் எருசலேமின் ராஜாவும் ஆசாரியனுமாய் இருந்தான். அது கிறிஸ்து, அது தேவன், கிறிஸ்துவைத் தவிர- இல்லை, தேவனைத் தவிர வேறு யாரும் மெல்கிசேதேக்காக இருக்க முடியாது. ஏனெனில் இவன் தகப்பனும் தாயும் இல்லாதவன், பாருங்கள். எனவே இந்த மனிதன் தகப்பனும் தாயும், நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவும் இல்லாதவன். அவன் யாராயிருப்பினும், அவன் இன்னமும் ஜீவிக்கிறான். அவன் அந்த சமயத்தில் சாலேமின் ராஜாவாயிருந்தான். அதற்கு ''சமாதானத்தின் ராஜா, ஷாலோம்” என்று அர்த்தம் - எருசலேமின் ராஜா. அவன் ஆபிரகாமைச் சந்தித்து, யுத்தத்துக்கு பிறகு அவனுக்கு திராட்சரசமும் அப்பமும் கொடுத்தான் - இராப்போஜனம் (Communion). அதை நாம் மிகவும் அழகான ஒரு முன்னடையாளமாக எபிரெயர் 7-ம் அதிகாரத்தில் காண்கிறோம். யுத்தம் முடிந்த பிறகு மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்தான். 77. நாமும் நவமான ராஜ்யத்தில் பிரவேசித்தவுடனே, அதை தான் முதலில் பெறுவோம். நாம் அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் நவமானதாய் பிதாவின் ராஜ்யத்தில் புசிப்போம். “இது முதல் இந்த திராட்சப்பழரசத்தையும் அப்பத்தையும் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்தில் பானம் பண்ணி புசிக்கும் நாள் வரைக்கும் இதை பானம் பண்ணவும் புசிப்பதுமில்லை'' 78. சாலேமின் ராஜா நகரத்திலிருந்து வந்த பிறகு, கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று நாம் காண்கிறோம். அது தொடர்ச்சியாக கோட்பாடு-களாகவே இருந்து வருகிறது. ஆனால் அது பழைய சபைக்கு உதாரணமாய் உள்ளது. நாம் புதிய ஏற்பாட்டில் கற்பிக்கப்பட்டுளோம். இதை புரிந்து கொள்ளத் தவற வேண்டாம் - நாம் பூமியிலுள்ள எருசலேம் நகரத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும் நாம் பரத்திலுள்ள புதிய எருசலேமுக்குச் சொந்தமானவர்கள் என்றும் புதிய ஏற்பாட்டில் கற்பிக்கப்பட்டுள்ளோம். எனவே சந்திரன் என்பது பூமியிலுள்ள எருசலேமைக் குறிக்க வேண்டுமேயன்றி பரத்திலுள்ள புதிய எருசலேமை அல்ல. எனவே சந்திரன் பூமியிலுள்ள சபையைக் குறிக்கின்றது. 79. போப் எருசலேமுக்கு பயணம் செய்வதற்கு முன்பு வானத்திலுள்ள சந்திரன், அவர் புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, முழுவதுமாக இருள் அடைந்தது என்பது வினோதமானதல்லவா? அவர் இங்கேயும் வரவிருக்கிறார், உங்களுக்குத் தெரியுமல்லவா? அதற்கு முன்பு அவர் அப்படி செய்ததாக தெரியவில்லை. பாருங்கள். அது எதைக் காண்பிக்கின்றது? அவர் மற்றவர்களுடன் ஐக்கியங் கொள்ளுவதற்காக இவ்வாறு செய்கிறார். அவர் எருசலேமை அடைந்த பிறகு அவர் கிரேக்க வைதீக தலைவரை சந்தித்தார். அது எதை காண்பிக்கிறது-? ஐக்கியம் அவர்கள் பிராடெஸ்டெண்டுகளும் கத்தோலிக்கர்களும் ஒன்றாக இணைய வேண்டுமென்று விரும்புகின்றனர். அதை தான் அவர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் அதை முழுவதுமாக செய்து முடிப்பார்கள். தேவன் அதை சந்திரனில் நமக்கு பிரதிபலித்துக் காண்பித்தார். அதை முழுவதுமாக இருளாக்கி அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும்... 80. சந்திரனின் புகைப்படங்கள் வெளியான செய்தித்தாளை நீங்கள் யாராகிலும் பார்த்தீர்களா-? அது என்னிடம் உள்ளது. பரிசுத்த ஆவியின் உதவியினால் நான் சபையின் காலங்களை வரைந்தேனே. அதே போல் சந்திரனின் தோற்றமும் உண்டாயிருந்தது - ஏழாவது சபை காலத்தைத் தவிர. அதோ ஆறு காலங்கள் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏழாவது காலம் இன்னும் முடிவடைய வில்லை. சந்திரனின் ஆறு நிலைகள். முதலாம் சபையின் காலத்தில் பிரகாசமாய் இருந்தது. இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஆறாம் காலங்களில் இருளானது கரும்பலகைகளில் நான் வரையும்படி பரிசுத்த ஆவியானவர் செய்த அதே விதமாக பிறகு அவர் அதை தம்முடன் ஒன்றுபடுத்திக் கொண்டு கூடாரத்தின் - சுவற்றில் வரைந்தார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் பிரதிபலித்துக் காண்பித்தது. ஏழாம் தூதனின் காலத்தில் முத்திரைகள் திறக்கப்பட்ட நேரத்தில் வானத்தில் தோன்றின ஒளியை அவர்கள் படம் பிடித்து லைஃப் பத்திரிகையில் வெளியிட்டது போன்று, விஞ்ஞானம் மறுபடியுமாக சபை காலங்களின் படத்தை பிடித்து வெளியிட்டுள்ளது. ஏழாம் தூதனின் ஊழியத்தில், காலங்கள் தோறும் இரகசியங்களாக இருந்து வந்த தேவ இரகசியங்கள், வெளிப்பட வேண்டியதாயுள்ளன. அவர் அதை செய்தார்-! அவருடைய வார்த்தைகள் தவறாது. அவர்கள் கடைபிடித்து வரும் அதே காரியத்தை தேவன் வானத்தில் எழுதினார் என்பது அற்புதமான செயல் அல்லவா-? அதே தேவன் அதை நான் கரும்பலகையில் வரையும்படி செய்தார். பிறகு அவரே கூடாரத்தின் சுவற்றில் வரைந்தார். மூன்று முறை அவர் அதை பிழையின்றி உறுதிப்படுத்தினார். போப் எருசலேமுக்கு செல்வதற்கு சற்று முன்னால் அதை வானத்தில் வரைகிறார். 81. அது சபை. சந்திரன் தான் சபையைக் குறிக்கிறது. பூமியின் நிழல் சந்திரனைக் கடப்பதற்கு முன்பு உலகப்பிரகாரமான காரியங்களின் நிழல், உலக சபையை முழுவதும் அந்தகாரமாக்கி, வேதாகமத்தின் வெளிச்சத்தைப் புறம்பாக்கி விடும். வெளிச்சம் பிரதிபலிப்பதைத் தடுக்க பூமி குறுக்கே வந்தது. உங்களுக்குப் புரிகிறதா-? பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே வந்து, சந்திரன், சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்காதபடிக்கு, சூரியனின் ஒளியை மறைத்து விட்டது, சந்திரன், சூரியனின் ஒளியைப் பிரதிபலித்து அதை பூமிக்கு அளிக்க வேண்டும். ஆனால் அது இருளாகி விட்டது. அது நடப்பதற்கு முன்னால் அது வந்து அந்த படங்களை ஊக்கத்தினால் வரைந்தது. 82. சகோதரி சிம்ப்ஸன் அந்த டூசான் செய்தித்தாளைக் கொண்டு வந்தார்கள். அது சகோதரி சிம்ப்ஸனுக்கு புரிந்ததோ என்னவோ, எனக்குத் தெரியாது. அவர்கள் அப்பொழுது அதை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள், ''உங்களுக்-காக அந்த செய்தித்தாளிலிருந்து சில படங்களையும் குறிப்புகளையும் வெட்டி எடுத்து வந்திருக்கிறேன்.” என்று சொல்லி என்னிடம் கொடுத்தார்கள். 83. இது ஏதோ வினோதமாயுள்ளதே என்று நினைத்தேன். நான் உள்ளே சென்று அதை எடுத்து, அதை ஒப்பிட்டு பார்த்து விட்டு, 'இது தான், அப்படியே, இதை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.'' என்றேன். அது அந்த செய்தி தாளில் வெளியானது. 84. அது எந்த செய்தித்தாள் என்று சகோதரி சிம்ப்ஸன் உங்களிடம் கூறுவார்கள். உங்களுக்கு அந்த செய்திதாளின் ஒரு பிரதி தேவைப்படுமா- னால் (சகோதரி சிம்ப்ஸன், ''அது டிசம்பர் 28-ம் தேதி செய்தித்தாள்” என்கிறார்கள் - ஆசி) என்ன சொல்லுகிறீர்கள் ("அது டிசம்பர் 28-ம் தேதி மாலை பதிப்பு'') அது டிசம்பர் 28-ம் தேதி மாலை பதிப்பு. 85. பாருங்கள், வெளிச்சத்தை தடை செய்ய, அல்லது எங்கு செல்கின்றதோ அதை நிறுத்த, அவர் எருசலேமுக்குச் செல்வதற்கு முன்பு. இந்த நேரத்தில் அதன் நிலையில் அது பிரகாசிக்க அதற்கு என்ன உரிமையுள்ளது-? எனவே இந்த கடைசி காலமாகிய ஏழு சபை காலத்தின் போது, அந்த வெளிச்சம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, சபையானது இருளுக்குள் சென்று விடுகிறது. கர்த்தர் எவ்வளவு பெரிய காரியத்தை நமக்கு எடுத்துரைக்கிறார்-! அது ஒன்றிலும் தவறினதில்லை. தேவன் வானத்தில் அதை வெளிப்படுத்தி, அது என்னவென்று நமக்கு சொல்லி கொடுத்து, அது முற்றிலும் உண்மை என்பதை அவர் அடையாளத்தினால் உறுதிப்படுத்துகிறார். 86. இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் அந்தகாரம். வார்த்தையாகிய இயேசு, லவோதிக்கேயா சபையின் காலத்தில் சபைக்கு வெளியே நின்று கொண்டு, கதவைத் தட்டி, உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார், இருள், காரிருள் ஜனங்களை மூடிக் கொண்டிருந்தது. வேதாகமம் கூறினது சரியா? (சபையோர் "ஆமென்” என்கின்றனர் - ஆசி). 87. வேத வாக்கியங்களின் பிழையற்ற தன்மை, அவருடைய மகத்தான நாமத்துக்கு மகிமையுண்டாவதாக-! போப்பின் விஜயம் அவருடைய வெளிப்-படுத்தப்பட்ட ஒளி சபையில் மறைக்கப்பட்டு இருளாவதற்கு அடையாளமாய் உள்ளது. உலகத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஒளி வேதாகமமே. இயேசு தாம் உலகத்தில் ஒளியாயிருப்பதாக கூறினார். வேதம் அவரை வார்த்தை என்றழைக்கிறது. எனவே வெளிப்படுத்தப்பட்டு அல்லது உறுதிபடுத்தப் பட்டுள்ள வேதாகமமே ஒளியாக அமைந்துள்ளது. ஆனால் அது அதிகாரம் வகிக்கும் போது, அதை செய்ய நீங்கள் அனுமதிக்கப்படமாட்டீர்கள். அதன் முன் நிழல்களை நாம் கண்டுவிட்டோம். அது நிகழ்வதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் அது நமக்கு அறிவிக்கப்பட்டது. சந்திரனில் ஏற்பட்ட மாறுதல்கள் என்ன நடக்குமென்று முன்னறிவித்து விட்டன. இப்பொழுது அது நடந்து கொண்டிருக்கிறது. 88. அந்த நேரம் நமது மேல் உள்ளது, இருள், காரிருள் இப்பொழுது காரிருள் ஜனங்களை மூடிக்கொண்டிருக்கிறது. அது தான் இது. இதன் அர்த்தம் என்ன? நாம் எங்கு அடைந்துள்ளோம்? நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? வருகைக்கு. நாம் எவ்வளவு அருகாமையில் உள்ளோம்? நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் எழுப்புதல் உண்டாகும் போது” எனலாம். 89. "பயப்படாதே, சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்''. 90. அதன் அர்த்தம் என்ன? தேவன் ஆதியில் செய்தது போன்று, இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரிக்கத்துவங்கி, ஒரு புதிய நாள் உதயமாகிறதென்று காண்பிக்கிறார். சபை காலங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. தேவன் இருளை ஓரிடத்தில் ஒதுக்குகிறார். சபை ஸ்தாபனங்களை, உலகத்தை மறையச் செய்ய அவர் அப்படித் தான் செய்ய வேண்டும். உலகமானது முழுவதையும் மூடிக் கொண்டிருக்கிறது. உலகப்பிரகாரமான காரியங்கள் எல்லாவற்றையும் கவர்ந்து விட்டது. அப்படியானால் தேவன் கூறினது சரி அல்லவா? உலகப்பிரகாரமான காரியங்கள், உலகப் பிரகாரமான உடை உடுத்துதல், உலகப்பிரகாரமாக நடந்து கொள்ளுதல், உலகப்பிரகாரமாக வாழ்தல் - எல்லாமே உலகமாயுள்ளது! 91. சிறுபிள்ளைகளே, நீங்கள் உலகத்தாரல்ல, நீங்கள் பரத்துக்குரியவர்கள். இது உங்கள் வீடல்ல. 92. சற்று வயதானவர்களுக்கு இதை கூறுகிறேன். நாம் ஏன் பின் நோக்கி வாலிபமாக ஆக முனைய வேண்டும்? நாம் அப்படி செய்ய முடியாது. நாம் முன் நோக்குகிறோம், நாம் பின் நோக்குவதில்லை. என்ன நடந்ததென்பதை நாம் இங்கு நோக்கி, என்ன நடக்கப் போகிறதென்பதை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். நாம் அந்த நேரத்துக்காக காத்திருந்து, அதை நோக்கித் தொடருகிறோம். 93. அநேக நல்ல, உத்தமமான ஜனங்கள் இன்று கோட்பாடுகளிலும், இந்த சபைகளிலும், ஸ்தாபனங்களிலும் சிக்கிக்கொண்டிருக்கின்றனர். 2.தீமோத்தேயு 3-ம் அதிகாரம் கூறுவது போல், ''தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கின்றனர்.'' 94. காரிருள். புறஜாதியாருக்கு வெளிச்சம் உண்டாக வேண்டும் என்பதற்காக இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டனர் இப்பொழுதோ, இஸ்ரவேலருக்கு வெளிச்சம் உண்டாகும் பொருட்டு, புறஜாதியார் குருடாக்கப்படுகின்றனர். அது பகலும் இரவும் போன்றது. ஒருபுறம் இருளாயிருக்கும் போது, மறுபுறம் வெளிச்சமாய் உள்ளது பிறகு இருளிருந்த பாகத்துக்கு வெளிச்சம் வருகின்றது. பூமியானது வெளிச்சத்தை மறைத்து, சந்திரன் இவ்வாறு அந்தகாரப்பட்டது. புறஜாதி சபை காலம் முடிவு பெற்று விட்டது என்பதை நமக்கு பிரதிபலிக்கிறது. சபை தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. சிறிது காலமாகவே அவள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறாள், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு நேரமாகி விட்டது. ஏனெனில் இருள் புறஜாதியாரின் மேல் சூழ்ந்து கொண்டு இருக்கிறது. விரைவில் யூதர்களுக்கு வெளிச்சம் உண்டாகும். சூரியன் கிழக்கிலிருந்து மேற்குக்கு பிரயாணம் செய்து விட்டது. நாம் மேற்கு கடற்கரையில் இருக்கிறோம். வெளிச்சம் இனி ஒன்று மாத்திரமே செய்ய முடியும். அது மறுபாகத்தில் கிழக்குக்கு செல்ல வேண்டும். உங்களுக்குப் புரிகிறதல்லவா? (சபையோர் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி) வெளிச்சம் முதலில் எங்கே துவங்கினதோ, அதே கிழக்கு திசைக்கு மறுபடியும் செல்ல வேண்டும் - இஸ்ரவேலரிடம். தேவன் சிறிது காலம் அவர்களை குருடாக்கி இருந்தார். ஆனால் இப்பொழுதோ இருள் புறஜாதி உலகத்தை முழுவதும் மூடியுள்ளது. புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். இயேசு அவ்வாறு கூறியுள்ளார். இப்பொழுது அது நிறைவேறி விட்டது. காரிருள் ஜனங்களை மூடி உள்ளது. இவைகள் எல்லாம் நடப்பதற்கு முன்பே, அவர் பூமியில் காண்பித்தது போன்று இப்பொழுது வானங்களிலும் பிரதி பலித்துக் காண்பித்துவிட்டார். 95. நல்ல ஜனங்கள் இதில் சிக்கிக் கொண்டுள்ளனர், நல்ல ஜனங்கள், உத்தமமான ஜனங்கள். மரியாளையும் யோசேப்பையும் போன்று. அவர்கள் மிகவும் உத்தமமாயிருந்தனர், பாருங்கள், இயேசு அவர்களுடன் இல்லாது இருந்த போது, அவர் அவர்களுடன் இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தனர். உங்களுக்குத் தெரியும், மரியாளும் யோசேப்பும் பண்டிகைக்கு சென்றிருந்த போது, இயேசுவுக்கு அப்பொழுது பன்னிரண்டு வயது. அவர் அவர்களுடன் கூட இருந்ததாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் அவர்களுடன் கூட இருக்கவில்லை. இன்றைக்கு நல்லவர்கள் அவ்வாறே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் சேர்ந்துள்ளவர்கள், இந்த ஸ்தாபனங்களில் அங்கத்தினராயுள்ளவர்கள், தாங்கள் நல்ல காரியத்தை செய்கின்றதாக எண்ணியுள்ளனர். அவர் அவர்களுடன் கூட இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் உண்மையில் அவர், அவர்களுடன் இல்லை, பாருங்கள், அநேகர் தாங்கள் போதகருடன் கைகுலுக்கி தங்கள் பெயரைப் புத்தகத்தில் எழுதின போது, அவர், அவர்களுடன் இருப்பதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர் அவர்களுடன் இல்லை. அநேகர் தெளிக்கப்பட்டு, திடப்படுத்தலில் பங்கு கொண்டு, ''பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில்'' ஞானஸ்நானம் பெறும் போது அவர், அவர்களுடன் இருப்பதாக எண்ணுகின்றனர். அவர்கள் நல்லவர்கள். மரியாளும் யோசேப்பும் கூட நல்லவர்களே. ஆனால் உண்மை என்னவெனில், அவர் அங்கில்லை. எனவே நீங்கள் ஒன்றையும் ஊகிக்க வேண்டாம். 96. வெளிச்சம் என்பது என்ன? உறுதிப்படுத்தப்பட்ட, உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை. அதற்கு புறம்பே வெளிச்சம் இல்லை. பாருங்கள்-? நீங்கள் பிரகாசமான விளக்குகளைக் கொண்டு பூமியில் வெளிச்சத்தை உண்டாக்க முடியாது. அதற்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை - சூரியன் - அவசியம். 97. அவர்கள் நல்லவர்கள். அவருடைய வார்த்தையின் பிழையற்ற தன்மையை கவனியுங்கள். அது எவ்வளவு பரிபூரணமானதென்று. மரியாள் என்ன கூறினாளென்று கவனித்தீர்களா? அருமையான கத்தோலிக்க ஜனங்களே, உங்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. நீங்கள் சேர்ந்துள்ள முறைமை தான். பிராடெஸ்டெண்டுகளே, உங்களுக்கும் அதே தான். அது முறைமைகள்-! 98. "தேவனின் தாயாகிய மரியாள்.”' பன்னிரண்டு வயதுள்ள பையன்- அவளுடைய சொந்த மகன் - அவளைத் திருத்த வேண்டியதாயிற்று என்பதை கவனியுங்கள். வேதத்தில் ஒரு முறையாவது இயேசு மரியாளை 'தாய்'' என்று கூறிப்பிடவில்லை. அவள் அவருடைய தாய் அல்ல. அவள் எப்படி தேவனுடைய தாயாக இருக்க முடியும்? இப்பூமிக்கு வந்து தம்மை வெளிப்படுத்துவதற்கு அவள் அவரால் உபயோகிக்கப்பட்ட ஒரு கர்ப்பப்பை மாத்திரமே. அந்த கர்ப்பப்பையின் மூலம் அவர் இவ்வுலகில் தோன்றினார். அதைத் தவிர அவளுக்கு வேறொன்றுமில்லை. ஒரு வேதவாக்கியம் கூட அவளை 'தாய்' என்று அழைக்கவில்லை. 99. மரியாள் என்ன தவறு செய்தாள் என்பதை கவனியுங்கள். ஆனால் அவருடைய வார்த்தை பிழையற்றதாய் உள்ளது. அவள் அவரிடம்.... அவள் அவரை ஆலயத்தில் கண்ட போது - அவர் அப்பொழுது 12-வயது சிறுவனாய் வேத பண்டிதர்களுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தார். 12-வயது சிறுவன் அவர்களைத் திகைக்க வைத்தார். அவர் பள்ளிக்கூடம் செல்லவில்லை, அவர் சென்றதாக சான்று எதுவுமில்லை. 12-வயது சிறுவன் தன் ஞானத்தினால் ஆலயத்திலுள்ள ஆசாரியர்களை திகைக்க வைத்தார். மரியாள், “உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே'' என்றாள். "உன் தகப்பன்" தாயாரே, ''உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே'' என்றாள். 100. அவர் அவளுக்கு என்ன பதிலளித்தார்? ''என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?'' அவர் யோசேப்புக்கு அடுத்தவைகளில் இருந்திருப்பாரானால், அவர் வீடுகளைக் கட்டியிருப்பார், அல்லது ஒரு தச்சனின் பட்டறையில் வேலை செய்து கொண்டிருப்பார். ஆனால் அவர் யோசேப்பின் குமாரன் அல்ல. ''நான் என் பிதாவுக்கடுத்த- வைகளில் இருக்கிறேன்.'' ''இந்த ஸ்தாபனங்களையும் கோட்பாடுகளையும் நான் கேள்விப்படுபவைகளையும் திருத்திக் கொண்டிருக்கிறேன்.'' பாருங்கள்-? ''நான் என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்கிறேன்.'' யோசேப்பு அவருடைய தகப்பன் என்று அவர் ஒரு போதும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மரியாள் அப்படி செய்தாள். இயேசு அவளிடம் திரும்பி அவள் தவறை திருத்தினார். அவள், ''உன் தகப்பனும் நானும் உன்னைத் தேடினோமே'' என்றாள். 101. அவரோ, ''நான் என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க வேண்டும்'' என்று கூறி யோசேப்பு அவருடைய தகப்பன் அல்ல என்பதைக் காண்பித்தார். அவருடைய வார்த்தைகள் பிழையற்றவை, பாருங்கள். 102. ஆனால் மரியாளும் மற்றவர்களும் அப்படி நினைத்துக் கொண்டனர். பாருங்கள். அது என்னவென்றால், அவள் அதனால் கவரப்பட்டாள். ஆசாரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக அவள் அப்படிப்பட்ட ஸ்திரீ அல்லவென்பதை காண்பிக்க விரும்பினாள். அப்படி செய்ததன் மூலம் அவள், ஒரு தேவ தூதன் அவளிடம் பிரத்தியட்சமாகி 'நீ புருஷனை அறியாமலேயே கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாய்- கன்னிகையின் வயிற்றிலிருந்து பிறக்கும்-குமாரன்” என்று கூறின அவளுடைய சாட்சியின் அஸ்திபாரத்தையே தகர்த்தெறிந்தாள். இந்த உயர்ந்த சனகரீப் சங்கத்திற்கு முன்பாக அவள், ''இங்குள்ள யோசேப்பாகிய உன் தகப்பனும் நானும் உன்னைத் தேடினோமே'' என்றாள். 103. அந்த 12-வயது சிறுவன், "நான் என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்கிறேன்” என்றார். ''அது என் தகப்பன் அல்ல” என்று அவர் கடிந்து கொண்டார். 104. பாருங்கள், இன்றைய சபையும் ஆலோசனை சங்கங்கள் போன்றவை-களாலும் உலகத்தின் காரியங்களாலும் கவரப்பட்டு, இப்பொழுது அந்தகாரப்-பட்டுள்ளது. “தேவன் அவளைக் கடிந்து கொள்கிறார்.'' 105. இயேசு அவளைத் "தாய்'' என்று அழைக்கவேயில்லை. ஒரு நாள் அவள் அவரைக் காண அவருடைய கூட்டத்துக்கு வந்திருந்தாள் - இது போன்ற வீட்டில் நடந்த ஒரு கூட்டத்துக்கு, யாரோ ஒருவர் அவரிடம் வந்து, "வாசலுக்கு வெளியே உம் தாயும் சகோதரர்களும் உமக்காக காத்திருக்கிறார்கள்” என்றார். 106. அப்பொழுது அவர், "என் தாய் யார், என் சகோதரர்கள் யார்? அவர்கள் யார்?'' என்று கேட்டுவி ட்டு, அவருடைய சீஷர்களைக் காண்பித்து, "என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே என் தாயும், என் சகோதரனும், என் சகோதரியுமாய் இருக்கிறார்கள்'' என்றார். 107. அவர் சிலுவையிலறையப்பட்டு மரித்துக் கொண்டிருந்த போது, அவர் வாலிப சீஷனாகிய யோவானிடம், ''அதோ உன் தாய்'' என்றார். “ஸ்திரீயே, அதோ உன் மகன். '' "மகனே, அதோ உன் தாய்.'' பாருங்கள், அவர் தம்மை அவளுடைய குமாரன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர் அவளுடைய குமாரனும் அல்ல, அவர் தேவனுடைய குமாரன். அவள் ஒரு கர்ப்பப்பை மாத்திரமே. 108. இன்று காலை இது ஒரு வீடு, இது சபையல்ல. சபையானது உங்களுக்குள் இருக்கிறது - கிறிஸ்து. இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மானிடரின் ஆவி உன்னதங்களில் ஒன்று கூடினது. அது கிறிஸ்து, வீடல்ல. வீடு சரி தான், அது அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது, ஆனால் அது கூடுவதற்காக ஒரு இடம் மாத்திரமே. இவ்வுலகில் தோன்றி ஜனங்களின் மத்தியில் தம்மை வெளிப்படுத்துவதற்கென அவர் உபயோகித்த கர்ப்பப்பை தான் மரியாள். இந்த வீடு எப்படி தேவனுடைய சபை இல்லையோ, அது போன்று அவள் "தேவனுடைய தாய் அல்ல. அந்த நோக்கத்துக்காக அவள் உபயோகிக்கப்பட்டாள். 109. அநேக நண்பர்கள் - மரியாள், யோசேப்பைப் போன்று அநேக நல்லவர்கள்- அவர் தங்கள் செயல்களில் அவர்களுடன் இருப்பதாக எண்ணி உள்ளனர். அன்று யோசேப்பும் மரியாளும் தவறாக எண்ணியிருந்தது போல், இன்று இவர்கள் தவறாக எண்ணுகின்றனர், அவர் அவர்களுடன் கூட இருந்ததாக யோசேப்பும் மரியாளும் எண்ணியிருந்தனர், ஆனால் அவர் அவர்களுடன், கூட இல்லை. ஜனங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, "ஓ, அவரை நான் ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட உடனேயே, அவர் என்னிடம் வந்து விட்டார்” என்கின்றனர். அதுவல்ல. உரைக்கப்பட்ட வார்த்தை தன்னை பிரதிபலிக்கும் வரைக்கும்-! 110. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களே, வெளிச்சத்தைக் குறித்தென்ன-? நான் இருளைக் குறித்து அதிகமாக பேசி, என் நேரத்தில் பாதி கடந்து விட்டது, இப்பொழுது பதினொன்றரை மணி. இப்பொழுது அதை திரும்பிப் பார்ப்போம் காரிருள் ஜனங்களை மூடியுள்ளது, வெளிச்சத்தைக் குறித்தென்ன-? காரிருள் ஜனங்களை மூடுமென்று அவர் கூறினார், ஆனால் வெளிச்சமும் இருக்கும். ''எழும்பி பிரகாசி, உன் ஒளி வந்தது.' எப்படி இருளும் வெளிச்சமும் ஒன்றாக இருக்கமுடியும்? அவை பிரிக்கப்பட வேண்டும். அதை பிரிப்பது ஒன்றே ஒன்று தான். அது தான் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. அது அதை மறுபுறம் ஒதுக்கி விடுகிறது. இங்கு உலகில் இருள் உள்ளது. ஆனால் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை - வார்த்தையால் பேசி சிருஷ்டிக்கப்பட்ட சூரியன் - தோன்றும் போது, இருள் ஒருபுறம் ஓடி விடு- கிறது. இப்பொழுது அது தான் நடந்து கொண்டிருக்கிறது - இருள் தன்னை வெளிச்சத்தினின்று பிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த இருளின் நேரத்தில் தெரிந்துகொள்ளப்பட்ட சபை... அதைக் குறித்து மணிக்கணக்காக பேசலாம். ஆனால் ''காரிருள் ஜனங்களை மூடும்” என்று வேதவாக்கியம் கூறுவதன் அர்த்தம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக நான் போதிய அளவு கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். 111. இப்பொழுது நான் சபைக்கு "ஷாலோம். தேவ சமாதானம்'' என்று கூறுகிறேன். சமாதானம்-! ஒவ்வொரு உண்மையான எபிரெயனும் மற்றொரு எபிரெயனைச் சந்திக்கும் போது, "ஷாலோம்" என்று கூறுகிறான். அதன் அர்த்தம், ''காலை வணக்கம்-! தேவன் உம்முடன் இருப்பாராக-! தேவ சமாதானம் உம்முடன் செல்வதாக-!'' என்பதே. அது ''காலை வணக்கம்-! நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்-?'' என்பதாம். சபையே, இது உனக்கு காலை உதயமாதல். ஜனங்களை இருள் மூடியுள்ளது, ஆனால் சபைக்கோ, ''காலை வணக்கம்”' கிறிஸ்து நமது மத்தியில் தோன்றுதல். "ஷாலோம். சமாதானம்.'' அல்லேலூயா “ஷாலோம்.'' 112. இருள் வருவதை நாம் காணும்போது, பகலுக்கு முன்பு இருள் தோன்றும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வரப்போகும் சூரியனை அறிமுகப்படுத்த விடிவெள்ளி நட்சத்திரம் மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். விடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கும் போது, அது இரண்டுக்கும் இடையேயுள்ள நேரம். காலைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு மிகவும் இருளாயிருக்கும், முழு இருள் தோன்றுகிறது. சந்திரன் ஒளியைக் கொடாமல் இருக்கிறது. காலைக்கு முன் மிகவும் இருளாயிருக்கும், காரணம் என்ன எனில், வெளிச்சம் இருளை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆனால் விடிவெள்ளி நட்சத்திரம் தோன்றி, "காலை வணக்கம். ஷாலோம்'' என்கிறது. 113. அது நமது மத்தியிலுள்ள அவர், அவருடைய வார்த்தை அடையாளம் கண்டு கொள்ளப்படுதல். ஷாலோம். அந்த மகத்தான நாள் உதயமாவதற்கு ஆயத்தமாயுள்ளது. பிரகாசமான நித்திய காலை உதயமாகும்போது, அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆகாயத்துக்கு அப்பால் அவர்களுடைய வீட்டில் ஒன்று கூடும் போது, மேலே பெயர்கள் கூப்பிடப்படும் போது, அங்கே நான் இருப்பேன். நமது பெயர்கள் அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன, அங்கே நாம் இருப்போம். ''ஷாலோம். காலை வணக்கம். உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக. 114. இருளானது வெளிச்சத்தினின்று தன்னைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. அது உண்டாக தேவன் காரணமாயிருக்கிறார். வெளிச்சம் அதை செய்து கொண்டிருக்கிறது. பாருங்கள், வெளிச்சம் இருளை உந்தித் தள்ளி அதை ஒன்று சேர்க்கிறது. அவர்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள தருணம் உண்டாகி இருந்தது. அவர்களோ அப்படி செய்ய மறுத்தனர். இப்பொழுது ஒன்றாக திரளுகின்றது. அவர்கள் சபைகளை ஒன்று சேர்த்து, சபைகளின் ஆலோசனை சங்கம் ஏற்படுத்தி, அதை அஞ்ஞான இருளுடன் இணைத்து விட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் இணங்காமல் போனாலும், இரவு ஜனங்களின் மேல் வருவதற்காக அவர்கள் ஒன்றாக இணைய வேண்டியுள்ளது. 115. ஏசாயா 60:1 "எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது'' என்று கூறுகின்றது. 116. எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது. வார்த்தை ஒளி, மறுபடியும் உறுதிப்படுத்தப்படுகின்றது. தேவன் இந்நாளுக்கான ஒளியின் வாக்குத் தத்தத்தில் வெளிப்படுவதை நீங்கள் காணத்தக்கதாக, ஒளி - தேவனுடைய வார்த்தை - மறுபடியும் உறுதிப்படுத்தப்படுகின்றது. அதாவது, இக்காலத்திற்கு என அளிக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள், தீர்க்கதரிசிகளாலும் இயேசு கிறிஸ்துவினாலும் இந்நாளுக்கென உரைக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள். ''பூர்வ காலங்களில்...'' எபிரெயர் 1, ''பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் திருவுளம் பற்றினார்.'' பாருங்கள்? 117. வனாந்திரத்தில் தொங்கின அந்த மகத்தான ஒளி மோசே எகிப்தை வெறுத்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களைக் காட்டிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணும்படி செய்தது. 118. அவரே சவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தார். ஒரு மகத்தான ஒளி அவனுக்கு முன்பாகத் தொங்கினது - அதே ஒளி, அதே அக்கினி ஸ்தம்பம். சவுல் எபிரெயனானதால், எந்த ஆவியையும், எதையும் வணங்கமாட்டான், அவனிருந்த நிலையில் அது என்னவென்று அறியாமல் அதை "ஆண்டவரே” என்று அழைக்கமாட்டான். அவன், 'ஆண்டவரே, நீர் யார்?” என்றான். 119. அவர், ''நான் இயேசு” என்றார் (இயேசு நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறேன்'' என்றார்). 120. அதே ஒளி இப்பொழுது வந்துள்ளது. எதற்காக இந்நாளுக்கென அவர் செய்துள்ள வாக்குத்தத்தங்களை ஜனங்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு- இந்நாளுக்கென வெளிப்படுத்தப்பட்ட ஒளி. இருளானது இன்னும் அதிகமாக இருளடைகின்றது. 121. அவர் வந்த போது, அவர் அந்நாளுக்கான ஒளியாயிருந்தார். ஒரு மேசியா வரவேண்டியதாயிருந்தது. அவர் எப்படி வருவாரென்று தேவன் கூறி இருந்தாரோ, அதே விதமாக அவர் வந்தார். அவர் வந்த போது, அவர் என்னவாயிருந்தார்? அந்நாளுக்கான ஒளியாக. அது இருளை அவருக்கு விரோதமாக உந்தித் தள்ளிற்று. அது சரியா-? அந்த ஒளி தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அவர் தமது ஜீவனைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர் அந்நாளுக்கான ஒளியாயிருந்தார். அவர் ஏன் அந்நாளுக்கான ஒளியாயிருந்தார்-? அவர் உரைக்கப்பட்ட வார்த்தை வெளிப்பட்டு, அதை உறுதிப்படுத்துபவராக இருந்தார். 122. தேவன் இந்த வெளிச்சமற்ற இருள் சூழ்ந்த உலகத்தை நோக்கி, ''வெளிச்சம் உண்டாகக்கடவது' என்றார். அந்த வார்த்தை நிறைவேறி வெளிப்படும் வரைக்கும், வெளிச்சம் இருக்கவில்லை; பிறகு வெளிச்சம் உண்டானது. 123. அவர், "ஒரு இரட்சகர், ஒரு மேசியா தோன்றுவார்” என்று கூறினார், அவர் வந்து அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி வெளிப்படுத்தும் வரைக்கும், அது வெளிப்படாமலே இருந்தது. அவர் அந்த வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தின போது, அவர், ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்றார். 124. அவர்கள், ''நீர் எங்கிருந்து வருகிறீரென்று நாங்கள் அறியோம், நாங்கள் மோசேயின் சீஷர்கள்” என்றனர். 125. அவர், ''நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், என்னையும் அறிவீர்கள், அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறான்” என்றார். பாருங்கள்-? அவர் அதன் நிறைவேறுதலாயிருந்தார். மோசேயினால் தேவன் உரைத்த வார்த்தையின் உறுதிப்படுத்தலாக அவர் இருந்தார். 126. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாளில், தேவன் தமது வாக்குத் தத்தங்களை உறுத்திப்படுத்தி, நிறைவேற்ற காட்சிக்கு வந்திருக்கிறார். அது இந்நேரத்தின் ஒளி. எனவே நாம் எழும்பிப் பிரகாசிக்கலாம். அந்த ஒளி மறுபடியுமாக நம் மேல் பிரகாசிக்கின்றது. வார்த்தை வெளிப்படுகின்றது. அது ஒளி. 127. இன்று காலை சூரியன் வெளியே பிரகாசிப்பது போல், அது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை. வேறெதுவும் அதைப் போல் வெளிச்சம் தர முடியாது. வேறெதுவுமே அப்படி செய்ய முடியாது, செயற்கை வெளிச்சம் தரும் மின்சார விளக்குகள் போன்றவை சிறிது காலத்திற்குள் எரிந்து விடுகின்றன. ஆனால் சூரியனோ வெளிச்சம் தர ஒருக்காலும் தவறினது இல்லை, ஏனெனில் அது வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாகும். 128. சிறு ஸ்தாபனக் கோட்பாடுகள் மின்சார விளக்குகளைப் போல் எரிந்து போகும். ஆனால் தேவனுடைய வார்த்தையோ என்றென்றைக்கும் தவறுவது இல்லை. அது எப்பொழுதுமே தன்னில் தானே வார்த்தையாக இருக்கும். 129. நான் சிறிது அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன் நான் தொடர்ந்து சென்று செய்தியை முடித்தால் பரவாயில்-லையா? (சபையோர் "ஆமென்” என்கின்றனர் - ஆசி). சரி. 130. எழும்பிப் பிரகாசி, ஒளி உன்னிடம் வந்துள்ளது. வார்த்தை, ஒளி உறுதிப்படுத்தப்படுகின்றது. 131. இயேசு கிறிஸ்து உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்தலாக இருந்தார். அவர் அந்த ஒரு வழியில் மாத்திரமே வெளிப்பட முடிந்தது. அவர் அந்நேரத்துக்கான ஒளியாயிருந்தார். 132. யோவான் ஸ்நானன் அந்நேரத்துக்கான ஒளியாய் இருந்தான். இயேசு ஒளியாயிருப்பதற்கு முன்பு அவன் ஒளியாயிருந்தான். ஏசாயா தீர்க்கதரிசி அவனைக் குறித்து, ''கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று” என்று கூறினான். அது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை. அது அங்கேயே உயிர் பெறாமல் கிடந்திருந்தது. கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியா, அது நிறைவேறுவதற்கு 400-ஆண்டுகட்கு முன்பே ''இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்” என்று உரைத்தான். இதோ அவன் எந்த ஸ்தாபனத்தையும், எந்த கோட்பாடுகளையும் சாராமல், அவன் யாரென்னும் அடையாளம் எதுவுமின்றி, வனாந்திரத்தில் இருந்து புறப்பட்டு வருகிறான். ஆனால் அவனுடைய ஒளி அவனை அடையாளம் காண்பித்தது, வார்த்தை அவனை அடையாளம் காண்பித்தது. அவர்கள், ''நீ மேசியாவா?'' என்று கேட்டனர். 133. அவன், "நான் இல்லை. நான், கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள், என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்'' என்றான். 134. இயேசு, ''நீங்கள் சில காலம் அவன் வெளிச்சத்தில் நடந்தீர்கள்'' என்றார். அவன் சில காலம் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான். எது வரைக்கும்? அந்த வழி ஆயத்தம் பண்ணப்படும் வரைக்கும். அதன் பிறகு அந்த வெளிச்சம் அணைந்தது. 135. பாப்டிஸ்டுகளே, நீங்கள் அந்த வெளிச்சத்தில் நடக்க முடியாது. இதுவே இந்நேரத்தின் வெளிச்சமாயுள்ளது. ஒளி வந்து விட்டது. எழும்பிப் பிரகாசியு-ங்கள். வார்த்தை, ஒளி, தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதே ஒளி (அடையாளம் கண்டு கொள்ளப்படும் வார்த்தை). 136. இப்பொழுது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் புத்தாண்டைக் குறித்து என்ன-? இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே எவ்வளவோ காரியங்களை கூறலாம். வெளிச்சத்தை அறிமுகப்படுத்துதல் இதற்கு இடையே நிகழ்கின்றது. ஆனால் நாம் இப்பொழுது புத்தாண்டைக் குறித்து கவனிப்போம். சரி. 137. புத்தாண்டு, புத்தாண்டு, அதைக் குறித்தென்ன? அது எனக்கு நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. நாம் ஒரு ஆண்டு அருகாமையில் உள்ளோம். நேற்றை விட இன்று நாம் ஒரு நாள் அருகாமையிலுள்ளோம். நாம் கூட்டத்தை துவக்கினதைக் காட்டிலும் இப்பொழுது ஒரு மணி நேரம் அருகாமையிலுள்ளோம். பதினொன்று மணி ஆக பதினைந்து நிமிடங்கள் இருந்த போது நாம் துவங்கினோம், இப்பொழுது பன்னிரண்டு மணிக்கு பதினைந்து நிமிடங்கள் உள்ளன. நாம் ஒரு மணி நேரம் அருகாமையில் வந்திருக்கிறோம். நாம் பின் நோக்கிப் பார்ப்பதில்லை, நாம் முன் நோக்கிப் பார்க்கிறோம். பாருங்கள்? ஓ, ஆம், ஐயா. புத்தாண்டு என்றால் புது பக்கத்தை திருப்புவது என்று அர்த்தமல்ல. உ, ஊ, இல்லை . 138. ஒரு காலை ஒரு மனிதன் கூறினது போல்; இதை நான் கேள்விப் பட்டேன். ஒரு மனிதன் விடியற்காலையில் எழுந்து, செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வந்து, உட்கார்ந்து, கால்களை நாற்காலியின் மேல் போட்டு, மூக்குக் கண்ணாடி அணிந்து, செய்தித்தாளைப் படிக்கத் தொடங்கினபோது, காலை உணவு ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவன் மனைவி, "ஜான், ஏதாவது புதிய செய்தி உண்டா?'' என்று கேட்டாளாம். 139. அவன், ''ஒன்றும் புதிதில்லை, எல்லாம் அதே பழைய செய்தி தான், ஆனால் புது ஜனங்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்றானாம். கொலைகள், கற்பழிப்பு, எல்லாமே. ஆனால் மற்றவர் அதை செய்துள்ளனர், பாருங்கள், உண்மை. 140. ஒரு புது பக்கத்தைத் திருப்புவதல்ல, அது வார்த்தைக்குத் திருப்புவதாகும். இன்றைக்கான வார்த்தை என்ன வாக்களித்துள்ளது என்பதை காணுதல், இன்றைக்கான ஒளி எப்படியிருக்கவேண்டும் என்பதை காணுதல். இந்த ஆண்டு நாம் செய்ய வேண்டியது என்னவெனில், கோட்பாடுகளுக்கு திரும்பிச் செல்வதல்ல நமது பழைய ஸ்தாபனங்களுக்கு திரும்பிச் செல்வதல்ல; ஆனால் வார்த்தைக்குத் திரும்பி, எப்படிப்பட்ட ஒளி இன்று பிரகாசிக்க வேண்டியதாயுள்ளது என்பதைக் காணுதல், ஓ, சபையே, வார்த்தைக்குத் திரும்பு, வார்த்தைக்குத் திரும்பவும் சரியான சுவிட்சை போடு, மின்சார விளக்குகளை மாற்றிக் கொண்டிருப்பதை விட்டு விடு - செயற்கை, மனிதனால் உண்டாக்கப்பட்டவை. அவருடைய வார்த்தைக்குத் திரும்பி, இன்றைக்கான வாக்குத்தத்தத்தைப் பார். வாக்குத்தத்தம் என்னவென்பதை கண்டு கொண்ட பின்பு, அது தன்னை அடையாளம் காண்பிப்பதற்காக காத்திரு. அது உறுதிப்படும்போது, நீ ஒளியில் இருக்கிறாயா இல்லையா என்பதை அறிந்து கொள்வாய். வாக்குத்தத்தம் என்னவென்பதைப் பார். 141. பக்கங்களை மாற்றுதலோ அல்லது நாட்காட்டிகளை மாற்றுவதோ காலத்தை மாற்றுவது கிடையாது. அநேகர், "பழைய ஆண்டு கடந்து விட்டது. பழைய டிசம்பர் நாட்காட்டியை தூர எறிந்து விட்டு புத்தாண்டுக்கான நாட்காட்டியை மாட்டுங்கள்” என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், அது தான் அவர்களுக்கு புத்தாண்டு. 142. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், இந்நாளுக்காக என்ன வாக்குத் தத்தம் பண்ணப்பட்டுள்ளது என்பதை நான் காண விரும்புகிறேன்; இந்த நேரத்துக்கான ஒளி என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்; அப்பொழுது அதில் எப்படி நடப்பது என்பது எனக்குத் தெரியும். நான் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறேன், எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், பாதையில் எதுவரை அடைந்துள்ளேன் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 143. பவுல் கூறினதை நான் மறுபடியும் எடுத்துரைக்க விரும்புகிறேன். "பின்னானவைகளை மறந்து, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.'' முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட இயேசு வரும் போது, காலம் அனைத்தும் நித்தியத்துக்குள் மறைந்து விட்டிருக்கும். 144. தாவீது செய்தது போல் செய்யுங்கள், உங்கள் எதிர்காலத்தை அவருடைய கரங்களில் சமர்ப்பியுங்கள். வேறெதையும் நோக்காதீர்கள். ஆனால்... தாவீது, ''என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது'' என்கிறான். நாம் படித்த 62-ம் சங்கீதத்தை நீங்கள் கவனித்தால், ''அவரே என் கன்மலை'' என்று தாவீது கூறுகிறான். அவர் யார்? அவர் எனக்கு வெளிப்பட்டிருக்கிறார் அவர் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம். என் காலங்கள் அவருடைய கரத்திலிருக்கிறது.'' ஆமென். ஓ, என்னே ! பார்த்தீர்களா? 145. என் காலம் அவருக்குச் சொந்தமானது. நான் அவருடையவன். நான் அவருடைய கரத்தில் இருக்கிறேன். ஏனெனில் அவர் காலத்தை தமது கரத்தில் பிடித்திருக்கிறார். எதிர்காலம் எனக்கு என்ன வைத்துள்ளது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எதிர்காலத்தை தம் கரத்தில் பிடித்து இருக்கிறார் என்று நானறிவேன். எனவே எதிர்காலத்தை கையில் பிடித்து இருப்பவர் என்னையும் பிடித்திருக்கிறார். எனவே புத்தாண்டில் இது, அது, மற்றதை நான் ஏன் செய்ய நினைக்க வேண்டும்? நான் என்னை அவருடைய கரங்களில் சமர்ப்பித்து, தாவீது நடந்து சென்றது போல் நடந்து செல்வேன். ''என் காலங்கள் அவருடைய கரத்திலிருக்கிறது.'' தேவன் எதிர் காலத்தை தமது கரங்களில் பிடித்திருக்கிறார் என்பதை தாவீது அறிந்திருந்தான். எதிர் காலம் என்ன வைத்துள்ளது என்று தாவீது அறிந்து இருக்கவில்லை. ஆனால் தேவன் எதிர்காலத்தை பிடித்திருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான் எதிர்காலம் என்ன வைத்துள்ளதென்று நான் அறியேன். நாம் எவருமே அறிய மாட்டோம். ஆனால் அவர் எதிர்காலத்தை தம் கரத்தில் பிடித்திருக்கிறார் என்று நாமறிவோம். 146. பொறுமை, பொறுமை. நம்மில் சிலர் மிகவும் அவசரப்படுகிறோம். நல்லவர் அநேகர் அப்படி செய்திருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் மிகவும் அவசரப்படுகின்றீர்கள். பாருங்கள், நீங்களே அதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள். 147. போதகர் சகோதரர்களே, நான் எப்பொழுது முதல் பேசிக் கொண்டு இருக்கிறேன் என்பதை அறிவீர்கள்- இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களே, நான் இந்த சிறு சபையோரிடம் மாத்திரம் இதை கூறவில்லை, உலகம் எங்குமுள்ள மனிதர்களுக்கு. 148. அநேகர் பொறுமையிழந்து வெளியே சென்று விடுகின்றனர். ஆனால் காலம் அருகாமையிலுள்ளது என்பதை விசுவாசித்து, உங்களுக்குள் ஏதாவது ஓன்றை செய்ய முனையுங்கள். கர்த்தருக்குக் காத்திருங்கள். பொறுமை என்பது உயரிய பண்பு. உங்களுக்கு பொறுமை இருந்தால், அது உயரிய பண்பாகும். ''கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புது பெலன் அடைவார்கள்.'' ''கர்த்தரைக் காட்டிலும் முன்பாகப் போக முயலுபவர்கள் என்றல்ல. அல்லது கர்த்தரிடம், "கர்த்தாவே, நீர் எனக்கு இதை செய்ய விரும்புகிறீர் என்றறிவேன், தேவனுக்கு மகிமை, நான்...'' என்று கூறுவர் என்றல்ல அப்படி செய்யாதீர்கள் கர்த்தருக்கு காத்திருங்கள்.'' கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புது பெலன் அடைவார்கள்” என்று வேதம் கூறுகிறது. 149. இரட்சகர் வரப்போகிறார் என்று தேவன் அளித்த வாக்குத் தத்தத்தை நிறைவேற்ற அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அது எப்பொழுது நிறைவேறும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதற்கிடையில் அநேகர் எழும்பி மேசியாக்களாக இருக்க முயன்றனர். அநேக சபைகள் மேசியாக்களைத் தோன்றச் செய்தன. ஆனால் மேசியா தோன்றுவதற்கு தேவன் ஒரு நேரத்தைக் குறித்திருந்தார். அவர் அவசரப்படவேயில்லை. பாருங்கள்? 150. அதற்கிடையே இருந்த காலத்தில் அவர் மேசியாவின் அநேக முன் அடையாளங்களைக் காண்பித்தார். அவர் ஆதாமிலிருந்து மேசியா வரைக்கும் அதை காண்பித்தார்-? முந்தின ஆதாம், பிந்தின ஆதாம், முதலாம் ஆதாம் பூமியிலிருந்து உண்டானவன், பிந்தின ஆதாம் வானத்திலிருந்து வந்தவர். ஒருவர் மண்ணானவன், மற்றவர் வானத்திற்குரியவர். ஒருவன் வானத்தில் இருந்து இறங்கினவர், மற்றவன் பூமியிலிருந்து உண்டானவன் அவர் மேசியாவை வாக்களித்திருந்தார். ஆனால் அதை நிறைவேற்ற அவர் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 151. அவர் என்னவாயிருப்பார் என்பதை யோசேப்பில் முழுவதுமாக காண்பித்தார். யோசேப்பு அவரை சித்தரித்தான். 152. தாவீது அவரைச் சித்தரித்தான். தாவீது புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக மலையின் மேலேறி திரும்பிப் பார்த்து எருசலேமை நோக்கி அழுதான்- புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக. அது தாவீதுக்குள் இருந்த இயேசு. 800-ஆண்டுகள் கழித்து இயேசு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக எருசலேமின் மேல் நின்று, “'எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகு-களின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன்னைக் கூட்டிச்சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்” என்றார். 153. யோசேப்பைப் பாருங்கள், அவனுடைய சகோதரர்களாகிய கோத்திரப் பிதாக்களின் மத்தியில் அவன் பிறந்தான், அவனே எல்லோருக்கும் இளையவன் (இல்லை, இளையவனுக்கு முந்தினவன்; பென்யமீன் தான் எல்லோருக்கும் இளையவன்). இளையவனுக்கு முந்தினவன் அவன் தன் சகோதரரால் வெறுக்கப்பட்டு, தன் பிதாவினால் சிநேகிக்கப்பட்டான். அவன் ஆவிக்குரியவனாய் இருந்தபடியால் வெறுக்கப்பட்டான். அவனுக்கு சொப்பனங் களின் அர்த்தத்தைக் கூற முடிந்தது. அவை சரியாக இருந்தன. அவனால் தரிசனங்களைக் கண்டு, வரப்போகும் சம்பவங்களை முன்னறிவிக்க முடிந்தது. அவர்கள் அவனை வெறுத்தனர். அவன் 30-வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான். 154. அவர்கள் ஏன் இயேசுவை வெறுத்தனர்? அவர்கள் அவரை பெயெல்செபூல் என்று அழைத்தனர். ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார், வார்த்தையானது இருதயங்களில் மறைந்துள்ள சிந்தனைகளை அறிந்து கொள்ளும். அவர்கள் அவரை வெறுத்தனர். அவர்கள் அவரை 30-வெள்ளிக் காசுக்கு விற்றனர். 155. யோசேப்பு மரித்துப்போனான் என்று நினைத்து அவனுடைய சகோதரர்கள் அவனைக் குழியில் எறிந்தனர். இரத்தம் தோய்ந்த அவனுடைய அங்கி அங்கே விடப்பட்டது - இயேசுவின் மரணத்தை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவர் அணிந்திருந்த அந்த இரத்தம் தோய்ந்த அங்கி விடப்பட்டது போல, ஆனால் தேவன், யோசேப்புக்கு என்ன செய்தார்? அவர் அவனைக் குழியிலிருந்து வெளியே கொண்டு வந்து, பார்வோனின் வலது பாரிசத்தில் உட்கார வைத்தார். யாரும் பார்வோனைக் காண முடியாது, யோசேப்பைத் தான் காணமுடியும். யோசேப்பு அரண்மனையை விட்டு வெளியே வந்த போது, எக்காளங்கள் முழங்கின. "யோசேப்பு வருகிறார், முழங்கால் யாவும் முடங்கட்டும்” என்னும் பிரகடனம் செய்யப்பட்டது. 156. அதே தான் இயேசுவும். அவர் ஒரேயடியாக மரித்துப் போய் விட்டார் என்று கருதி அடக்கம் பண்ணப்பட்டு குழியிலிருந்து அவர் உயிரோடே வெளியே எடுக்கப்பட்டு, இப்பொழுது மகிமையுள்ளவரின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்''. அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் போது, எக்காளங்கள் முழங்கும், முழங்கால் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும். பாருங்கள், அவர் செழிப்பின் ராஜகுமாரன். அப்பொழுது எகிப்து என்ன செய்ததென்று பாருங்கள், பஞ்சம் வந்த போது, அது முழு உலகத்தையும் காப்பாற்றினது. மனுஷகுமாரனின் வருகையின் போதும் அவ்வாறே இருக்கும். முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும், நாவுகள் யாவும் அவர் கர்த்தரென்று அறிக்கை பண்ணும். 157. அவர் எல்லாமே முன்னடையாளங்களாக காண்பிக்கப்பட்டார், ஆனால் அவர் எப்பொழுது தோன்றுவார் என்று தேவன் அறிந்திருந்தார். அதற்கு முன்பு அவர்கள் எத்தனை பேர்களைக் கொண்டிருந்தபோதும், அவருக்கு தம்முடைய மேசியா இருந்தார். என்ன வரப்போகிறதென்பதை அவர் முன்னடையாளங் களால் காண்பித்தார். 158. அவர் ஏழு சபை காலங்களை நமக்கு காண்பித்த விதமாகவே என்ன வரப் போகிறதென்று... என்ன வரப்போகிறதென்று அவர் நமக்கு காண்பித்த விதமாகவே. அவர் வெளிச்சத்தை மேலே நிறுத்தி உலகிற்கு அதை வெளிப்படுத்தினார். ஏழு சபையின் காலங்களில் இருந்த ஏழு தூதர்கள் யாரென்பதை வெளிப்படுத்த அவர். அப்பொழுது ஏழு தேவ தூதர்களை அனுப்பினார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவ தூதன் தோன்றி லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் விட்டுச் சென்ற தளர்ந்த முனைகளை வெளிப்படுத்திக் கொடுத்தனர். அது மகத்தான ஷாலோம், யேகோவா, யாவே (Jvhu)யின் முன்னடையாளமாகவும் நிழலாகவும் அமைந்தது. பாருங்கள்? நிச்சயமாக அவர் அதை ஆகாயத்தில் வைத்தார். அதை இயந்திரக் கண் படம் பிடித்தது. பாருங்கள்? கர்த்தரைத் துதிப்போமாக! 159. ஷாலோம்! சமாதானம்! சோர்ந்து போகாதீர்கள். இயேசு இங்கே இருக்கிறார். அவருடைய மகத்தான வெளிச்சம் நம்மிடம் வந்துள்ளது. அதற்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், ஆம், அவருடைய வார்த்தை, மகா இரகசியம். இன்று அவர் இங்கு இருந்து கொண்டு, முன்பு செய்த அதே கிரியைகளை இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார் - அதே கிரியைகளை அதே கிரியைகளை அவர் செய்து வருகிறார். 160. நாம் கால வரையுள்ள சிருஷ்டிகளாயிருக்கிறோம். அவரோ நித்திய தேவனாய் இருக்கிறார். நாம் நம்மை உந்தித் கொண்டு, வித்தியாசமான ஏதாவதொன்றை செய்ய முயல்கிறோம். ஓ, ''இது செய்யப்படவேண்டும்'' என்கிறோம். அவருக்கு அதைக் குறித்து எல்லாம் தெரியும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது எப்படியாயினும் நிகழப் போகின்றது. அவரே அதை செய்யட்டும். உங்களை அவரிடம் சமர்ப்பியுங்கள். 161. மேலே நோக்கிப் பார்த்து, கர்த்தருடைய சந்தோஷத்தினால் பிரகாசியுங்கள். இந்நாளைக் காண நீங்கள் சிலாக்கியம் பெற்று உங்கள் கண்கள் திறக்கப்பட்டுள்ளதற்காக களிகூருங்கள். உங்கள் எதிர்காலத்திற்காக அவர் மேல் நம்பிக்கையாயிருங்கள். கடந்த நாட்களில் அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். கடந்த நாட்களில் தமது வார்த்தையை உறுதிப்படுத்தி, நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்நேரத்தில் ஏழாம் தூதனுடைய செய்திக்கு ஒத்ததாக எல்லா கிரியைகளையும் நடப்பித்து, அதை வானத்திலும் பூமியிலும் காண்பித்து, தவறு ஒன்றும் நேரிடக் கூடாதென்று அதை மூன்று வழிகளில் தெரியப் படுத்தின அவர் மறுபடியும் வரப்போவதாக வாக்களித்துள்ளார் அல்லேலூயா! அந்த வார்த்தை உறுதிப்படுத்தப்படும். இரண்டாயிரம் ஆண்டு காலமாக காத்துக் கொண்டிருந்த தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் அவர் குறித்த நேரத்தில் வருவார். சோர்ந்து போகாதீர்கள். அவர் இங்கிருப்பார். அவர், ஒவ்வொரு காலத்திலும் தமது வார்த்தையை உறுதிப்படுத்தி வந்து உள்ளார், சபை காலங்கள் அதை நிரூபிக்கின்றன. ஏழாம் செய்தி கர்த்தரை வெளிப்படுத்துகின்றது. தேவன் அதை வெளிப்படுத்தினார். அதை நிரூபித்தார். இன்று நமது மத்தியிலும் கூட அவர் இருக்கிறார் என்பதைக் காண்பித்து, அவருடைய வார்த்தையை நிரூபித்து உறுதிப்படுத்தினார். அவர் அவ்வாறே காண்பிப்பார்! 162. ஆயிரம் வருட அரசாட்சி வரப்போகின்றது. அப்பொழுது வயோதிபர் என்றென்றைக்கும் வாலிபராக இருப்பார்கள். வியாதி மறைந்து போகும். மரணம் ஒரு போதும் உண்டாகாது. அவர்கள் வீடுகளைக்கட்டி அவைகளில் குடியிருப்பார்கள். அவர்கள் திராட்சத் தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும் வேறொருவர் (அதாவது அவனுடைய குமாரன்) அதை சுதந்தரித்துக் கொள்வதில்லை, அவன் கூடவே அவனுடைய குமாரனும் வாழ்ந்து கொண்டிருப்பான். அவன் நாட்டுகிறதும் வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை. அவன் மரித்து வேறொருவர் அதை எடுத்துக் கொள்வதில்லை. அவன் அங்கு உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பான். ஆமென்-!... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). அவர்களை ஒன்றும் சேதப்படுத்தாது. நாம் இப்பொழுது உள்ளதிலிருந்து, அழியாத தேவனுடைய குமாரனுடைய அந்த மகிமையுள்ள சொரூபத்துக்கு மாற்றப் படுவோம். ஆண்டுகள் அவரைத் தொட முடியாது. வயது அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவர் அழியாத தேவனுடைய குமாரன். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். நாம் சந்திப்பில் (Junction) இருக்கிறோம். இவையாவும் முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப் பட்டன, அவை மறுபடியுமாக அடையாளம் கண்டு கொள்ளப்படும். 163. எதிர் காலத்தை அவர் தமது கரங்களில் பிடித்திருக்கிறார். அவர் எப்பொழுது வருவார் என்று எனக்கு எப்படி தெரியும்? அவர் எப்பொழுது வருவார்-? எனக்குத் தெரியாது, ஆனால் அவர் இங்கிருப்பார். அது உண்மை. அவர் எப்பொழுது இப்படி இப்படி செய்வார்-? சாபம் எப்பொழுது பூமியை விட்டு எடுபடும்-? தேவனுடைய அன்பின் ஆசீர்வாதமான பிரதிபலிப்புகளாகிய மரங்களும் பூக்களும் எப்பொழுது அழியாததாக மாறும்-? எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழும். என்றென்றும் வாழவேண்டுமெனும் மனிதனுடைய விருப்பங்கள் எப்பொழுது நிறைவேறும்-? ஆஸ்பத்திரிகளும், மருத்துவர்களும், அறுவை சிகிச்சைகளும், அழுகையும், துக்கமும் எப்பொழுது நின்று, இயேசுவின் 1000-வருட ஷாலோம் மகத்தான ஆட்சி துவங்கும்-? எனக்குத் தெரியாது. அது இப்பூமியில் நிலை நாட்டப்படும் என்று கூறியுள்ளார். அவர் எப்படி செய்யப்போகிறாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு நீதியின் சூரியன் அவருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்துடன் உதிப்பார். நீங்கள் நினைக்கிறபடி. சரீரப் பிரகாரமான சுகமளித்தல் அங்கிருக்காது - அதாவது, யாரோ ஒருவர் வியாதிப்பட்டு, வியாதி அவரை விட்டு எடுக்கப்பட்டு அவர் சுகமடைந்தார் என்று. அதை தான் அவர் இப்பொழுது ஒரு முன்னடையாளமாக செய்து கொண்டிருக்கிறார். ஆனால் முழு சிருஷ்டியுமே மாற்றப்படும். அழிவுள்ள இது அழியாமையைத் தரித்துக் கொள்ளும். இந்த வயோதிபம் வாலிபமாக மாறும். ஆமென்-! அது எப்படி நடக்கும்-? எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழும். 164. எனக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது. கர்த்தர் என்னை ஏப்ரல் 6-ம் தேதி வரை உயிரோடிருக்க அனுமதித்தால், எனக்கு ஐம்பத்தைந்து வயதாகி விடும் - வயோதிபன். ஆனால் நான் பின் நோக்குவதில்லை... நான் பின் சென்று மீண்டும் பையனாயிருக்க விரும்பவில்லை. நான் எந்த நோக்கத்திற்காக இவ்வுலகிற்கு வந்தேனோ, அந்த இலக்கை நோக்கித் தொடர விரும்புகிறேன். ஏறக்குறைய 30-ஆண்டுகளாக, நான் இந்த பிரசங்க பீடத்தின் பின்னால் நின்று கொண்டு பிரசங்கித்து வந்திருக்கிறேன். நான் இருபது, இருபத்தொன்று, இருபத்திரண்டு வயதான வாலிபனாயிருந்த முதற்கே, இந்த செய்தியை அறிவித்து வந்திருக்கிறேன். என் பெலன் அனைத்தையும் இதில் உபயோகித்து வந்திருக்கிறேன். என் தோள்கள் தொங்கி என் தலைமயிர் விழுந்து போய் நரைத்துப் போனாலும், நான் அதை எல்லாம் பின் நோக்குவ-தில்லை. அவையெல்லாம் திரும்பக் கிடைக்கப்பெறும். தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு, ''உங்கள் தலையிலுள்ள ஒரு மயிராகிலும் விழுவதில்லை. கடைசி நாளில் அதை நான் எழுப்புவேன்'' என்னும் வார்த்தை நிறைவேறும். அந்த நாள் வரக் காத்திருக்கிறேன். அவர் எப்படி அதை செய்வார்-? எனக்குத் தெரியாது. ஆனால் நான்... 165. இந்த புத்தாண்டு என்ன வைத்துள்ளது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அதை தம் கரங்களில் பிடித்திருக்கிறார் என்று நானறிவேன். அது தான் நான் புத்தாண்டைக் குறித்து கொண்டுள்ள நம்பிக்கை. அவர் வருவாரானால், ஆமென் அவர் வராமல் போனால், அவர் என்னை உயிரோடு வைப்பாரானால் நான் இன்னமும் ஊழியம் செய்து கொண்டிருப்பேன். எதிர் காலத்தை அவரை நம்பி அவரிடத்தில் ஒப்படைக்கிறேன். அது என்ன என்று எனக்குத் தெரியாது, அதை நான் அவரை நம்பி அவரிடம் ஒப்படைக்கிறேன். அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள், எனவே அது நடக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். அவருடைய வார்த்தை-! நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, அது எப்படி உங்களுக்குத் தெரியும்?'' என்று கேட்கலாம். 166. இங்கு ஒரு நிமிடம் சில கருத்துக்களைக் கூறுகிறேன். உங்களுக்கு நாடக இசை (Symphony) என்றால் என்ன தெரியுமா? உங்களுக்குத் தெரியுமென்று நானறிவேன். அது ஒரு இசை, அது ஒரு நாடகம். பாருங்கள், அதை அவர்கள் நடிக்கின்றார்கள். 167. சிறுபிள்ளைகளே, உங்களுக்குப் புரிவதற்காக இதை கூறுகிறேன். ஞாபகமிருக்கிறதா, பள்ளிக்கூடத்தில் உங்களுக்கு.. அந்த சிறு ருஷிய நாடக இசையின் பெயர் என்ன, அவர்கள் பேரிகை (drum) கொட்டி. நடிப்பார்களே, அதன் பெயர். அந்த சிறு மரக்கொத்தி பறவை காட்டுக்குள் சென்று, சிறகடித்து, பேரிகை கொட்டுதல் போன்றவை. நாடக இசையை அவர்கள் வாசிக்கும் போது, நீங்கள் இவையனைத்தையும் கேட்கலாம். அதன் பெயர் எனக்கு மறந்து விட்டது. ''பீட்டரும் ஓநாயும் அது தான் பீட்டரும் ஓநாயும்.'' அது ருஷிய நாடக இசை. பாருங்கள், சிறு உருவங்கள் அங்கு பறப்பது கிடையாது. ஆனால் அவர்கள் அதை பேரிகை கொட்டி வாசிக்கின்றார்கள் (சகோ.பிரன்ஹாம் மரத்தின் மேல் தட்டுகிறார்-ஆசி), பிறகு (சகோ. பிரன்ஹாம் வேறொன்றின் மேல் தட்டுகிறார்-ஆசி) பேரிகையில் எழுப்பப்படும் சத்தங்கள் மூலமாகவே, அவர்கள் அந்த நாடகத்தை நடித்துக் காண்பிக்கின்றனர். சகோ. பிரன்ஹாம் கூறுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாருங்கள்? 168. இப்பொழுது பெரியோர்களாகிய உங்களுக்கு வேதாகமம் தேவனுடைய நாடக இசை. ஆம், அல்லேலூயா. அதை எழுதியவர் மாத்திரமே அதன் அர்த்தத்தை அறிவார். அந்த நாடகம் என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாய் கேட்பவர்களுக்கு அதை அவர் அதை வெளிப்படுத்துகிறார். ஆனால் நாடக இசை என்னவென்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அது நீங்கள் காணும் ஒன்றல்ல. அந்த இசை மாறிக்கொண்டே - வருகிறது. வார்த்தையின் சந்திப்பு. சில சமயங்களில் அது சிறிது நேரம் இந்த விதமாக செல்லும்- ஒரு குறிப்பிட்ட தாளம். சிறிதும் கழிந்து அது மாறும். அது என்ன-? அதை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு, அதைக் குறித்து ஒன்றும் அறியாதவர்களுக்கு, அதில் சிரத்தை இல்லாதவர்களுக்கு அது ஒழுங்கீன-மாகவும் வீண் சத்தமாகவும் காணப்படும். ஆனால் அதைக் குறித்து தெரிந்திருப்பவர்கள் அதற்காக காத்திருக்கின்றனர். அது வரப்போகிறதென்று அவர்கள் அறிவார்கள். அல்லேலூயா-! 169. எனவே தேவனுடைய வார்த்தையின் நாடக இசையில், நாடகம் முழுவதும் மாறுகின்றது. அதில் சிரத்தை கொண்டுள்ளவர்களாகிய நீங்கள், அந்த மாறுதல் நேரிடுவதை காதால் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அது அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது. என்பதை நீங்கள் அறிவீர்கள். பேரிகை கொட்டும் சத்தத்தை நீங்கள் கேட்டு, ஆமென், ஏதோ ஒன்று நடக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். அது மாறுதல் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள் இன்னும் சில நிமிடங்களில் பேரிகை பெரு முழக்கம் உண்டாக்கும். பாருங்கள்-? அதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். பேரிகையின் தாளத்திலிருந்து நீங்கள் கூறிவிடலாம். ஓ, தேவனே-! முடிவு பெறும் நேரத்தில் பேரிகை இடும் முழக்கத்தை உங்களால் கேட்க முடியு-மானால், பரலோக வார்த்தை இசை, ''கடைசி நாட்களில் சம்பவிக்கப்போவது என்னவென்றால்'' என்று பாடுவதன் எதிரொலியை உங்களால் கேட்கக் கூடுமானால்-! தேவன் இசைக்கும் அவருடைய மகத்தான நாடக இசை அவரை மாற்றுகிறது. அவருடைய நாடக இசையை சந்திப்புகளில் மாற்றுகிறது. அதை இயக்குபவரும் அதில் சிரத்தை கொண்டுள்ளவர்களும் அந்த மாறுதல்களுக்காக செவி கொடுத்து காத்திருக்கின்றர். நமக்கு இது அவ்வளவு தான், நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர் தோன்றும் போதும், ஏதாவதொன்று நடக்கிறது, காலம் அருகாமையில் வருவதை நாம் காண்கிறோம். அண்மையில் சபையின் காலங்கள் வரையப்பட்ட போது, நாம் செவிகொடுத்து கேட்டுக் கொண்டிருந்தோம். அது வார்த்தையுடன் சரியாக பொருந்துவதை, வார்த்தையின் தாளத்துடன் இணைந்து போவதை நாம் கண்டோம். சிறிது கழிந்து என்ன நடந்தது? இதோ அவரே வந்து அதை உறுதிப்படுத்தினார். 170. வார்த்தை , "ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே'' என்று கூறுவதை நாம் கேட்டோம். சபை காலத்தில் அவர், ''ஏழாம் தூதனின் செய்தியே கடைசி செய்தியாயிருக்கும்'' என்றார். பிறகு, ஓ, வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில், "ஏழாம் தூதனுடைய செய்தியின் நாட்களில், தேவ ரகசியங்கள் நிறைவேறும்.'' அது அங்கு இருக்க வேண்டும். பிறகு திடீரென்று அது நிகழும் போது, ஒரு தரிசனம் உண்டாகி, “டூசானுக்குச் செல். அந்நேரத்தில் ஒரு பெரிய சத்தம் உண்டாகும். எனவே அதை நீ நன்றாகப் புரிந்து கொண்டு, அது அனுப்பப்பட்டது என்று அறிந்து கொள்வாய். அது பூமியை ஏறக்குறைய குலுக்கும்'' என்றது. அதைக் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். அது நிகழ்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டு ஒலி நாடாவில் பதிவாகியுள்ளது. பிறகு அது சம்பவித்தது. அது என்ன-? அது இசை நாடகத்தில் தாளம் மாறுதல். 171. பிறகு ஒரு முறை அவர் மூன்றாம் இழுப்பைக் குறித்துக் கூறினார்; அது எப்படி இந்த ஒரு வழியாக வருமென்றும் பிறகு இருதயத்திலுள்ளவைகளை அறிந்துகொள்ளுதலின் மூலமாகவும், அதன் பிறகு உரைக்கப்பட்ட வார்த்தை. 172. இயேசு, ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவை-களைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்'' என்றார். யோவான் 14. ''நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்'' சற்று முன்பு நான் கூறினது போன்று, மரியாள் அவரை யோசேப்பின் குமாரன் என்று கூற முனைந்த போது, அவர் அவளுடைய தவறைத் திருத்தினார். அவருடைய வார்த்தைகள் ஒரு போதும் தவறுவதில்லை. அவர் இவ்வாறு கூறியுள்ளார்; "வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.'' 173. இசை நாடகத்தின் தாளம் மாற இருப்பதை நாம் காணும் போது, அது சந்திப்பு நேரம் (Junction time). அவர் தாளமிடத் தொடங்குவதை நாம் கவனித்து, ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை செய்வீர்கள்'' என்பதை நாம் காணும்போது, "இவைகளைப் பார்க்கிலும் பெரிய'' அவர் அதை வாக்களித்தார். அது எப்படி முடியும் என்று நாம் வியந்தோம். 174. அவர் முதலாவது அற்புதத்தை செய்த போது, அவர் தண்ணீரை எடுத்து அதை திராட்சரசமாக மாற்றினார் என்பதை கவனித்தீர்களா? அது சரியா? அவர் தண்ணீரை எடுத்தார். என்றாவது ஒரு நாள் அது திராட்சரசமாக இருக்கும். ஆனால் அது முதலில் தண்ணீராக இருந்தது. 175. அவர் ஐயாயிரம் பேர்களை போஷித்த போது, அவர் என்ன செய்தார்? அவர் தண்ணீரைப் போன்று வேறொன்றை கையிலெடுத்தார். ஒரு முட்டையிலிருந்து பிறந்து, ஒரு காலத்தில் தண்ணீரில் நீந்திய ஒரு மீனைக் கையிலெடுத்தார். அவர் அதைப்பிட்டபோது, அந்த மூல சிருஷ்டிப்பிலிருந்து வேறொரு மீன் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் ஒரு காலத்தில் கோதுமையாய் இருந்த அப்பத்தை எடுத்தார். அது விதையாக இருந்து அப்பமாக ஆனது. அவர் அந்த அப்பத்தை பிட்டபோது, அந்த சிருஷ்டிப்பு பெருகினது. 176. ஆனால் காட்டில் அணிலை சிருஷ்டிக்க ஒன்றும் இருக்க வில்லை. "உண்டாகக்கடவது.'' பிட்பதற்கு ஒன்றுமில்லாமலேயே, அது உண்டானது. அது என்ன-? அதே இயேசு கிறிஸ்து-! பாருங்கள்! சிருஷ்டிக்கப்பட்ட ஏதோ ஒன்றை எடுத்து, அதிலிருந்து பிட்டு அந்த சிருஷ்டிப்பை பெருகச் செய்வதல்ல, அதை முழுவதுமாக சிருஷ்டித்தல். ''உண்டாகக்கடவது'' என்று அங்கு நின்று கொண்டு உரைத்த அதே யேகோவாவே அவர் என்பதைக் காண்பிக்கிறார். அவர் அப்படி உரைத்தபோது அது உண்டானது. அவருடைய வார்த்தை அங்கு சிருஷ்டியாக வெளியானது. அவர் பூமியில் மாமிசத்தில் இருந்தபோது, அவர் தமது மூல சிருஷ்டிப்பை எடுத்து, அதை பிட்டு, அதை பெருகச் செய்தார். ஆனால் இந்த கடைசி நாட்களில், மறுபடியுமாக நமது மத்தியில் அவர் இறங்கி வந்திருக்கும் போது, கீழே அசைந்து "வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று உரைத்த அதே வெளிச்சம், பாருங்கள், அவர் வார்த்தையை உரைத்து சிருஷ்டியை தோன்றச் செய்கிறார். ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை செய்வீர்கள்.'' அது நிறைவேறும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 177. உலகம் இதை புரிந்து கொள்ளாது. ஏனெனில் அது “மூடத் தனமான ஒரு கூட்டமாயுள்ளது'' அது மெதோடிஸ்டு அல்லாததனால், மெதோடிஸ்டுகள் அதை புரிந்து கொள்வதில்லை. அது பாப்டிஸ்டு அல்லாததனால், பாப்டிஸ்டுகள் அதை புரிந்து கொள்வதில்லை. அது கத்தோலிக்கன் அல்லாததனால், கத்தோலிக்கர் அதை புரிந்து கொள்வதில்லை. அது பெந்தெகொஸ்தேயினன் அல்லாததனால், பெந்தெகொஸ்தேயினர் அதை புரிந்து கொள்வதில்லை. 178. ஆனால் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள், அவரை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்! கடந்து சென்ற நட்சத்திரத்தை எந்த வான்நிலை ஆராய்ச்சி நிலையமும் கண்டு பிடித்ததாக வரலாற்றில் சான்று எதுவும் இல்லை. ஆனால் சாஸ்திரிகள் இரண்டு ஆண்டு காலமாக நூற்றுக்கணக்கான மைல்கள் அதைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் அதை கவனித்து அதைப் பின் தொடர்ந்தனர். நான் கூறுவது புரிகிறதா-? அது இசை நாடகத்தை செவி கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரம். 179. இசை நாடகத்தை எழுதியவருக்கு துவக்கத்திலிருந்து முடிவு வரை தெரியும். அவருக்கு அதைக் குறித்து எல்லாம் தெரியும். அதனால் தான் அவரால் அதை இங்கு பிழையின்றி எழுதி வைக்க முடிந்தது. நீங்கள் அவருடன் துவங்க வேண்டும். நீங்கள் துவங்க வேண்டும். நீங்கள் இசை நாடகத்தை கேட்க விரும்பினால், அவருடன் இசை நாடகத்தின் இசையுடன் துவங்க வேண்டும். நீங்கள் கேட்கிறீர்கள், அது என்ன கூறுகிறதென்பதை அறிந்து கொள்கிறீர்கள். இசை நாடகம் என்னவாயிருக்கப் போகின்றதோ, அதுவாகத் தான் இருக்கும் நீங்கள் இசையை செவி கொடுத்து கேட்கத் துவங்குகிறீர்கள். அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். இங்கு இன்னின்ன சம்பவங்கள் நிகழ்கின்றன. அது இப்பொழுது மாற வேண்டும்'' என்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். ஆனால் இசை நாடகம் என்ன என்பதைக் குறித்து ஒன்றுமே அறியாத எவனுக்கும்... அவன் உள்ளே வந்து உட்கார்ந்தால், அது அர்த்தமற்றதாயும், வெறும் சத்தமாயும், தென்படும், ஆனால் அது என்னவென்று அறிந்திருப்பவனுக்கோ, தாளம் இசையுடன் பொருந்தி, இசை எழுத்துக்களுக்கு ஏற்ப பேரிகை கொட்டி, எக்காளம் அதன் தொனியை இனிமையாக முழங்கி, கின்னரத்தின் நரம்புகளைத் தட்டி இசை எழுப்பி, வயலினை வாசித்து, பேஸ் (Bass) வாத்தியக்கருவியில் தாளத்தை உண்டாக்கி, இவ்வாறு முழுவதுமே ஒன்றாக இணைந்து இன்னிசை எழுப்பி நாடகத்தை உண்டாக்கி, உங்கள் கண்களை மூடி அதில் லயித்திருக்கலாம். அல்லேலூயா! 180. அவருடைய வார்த்தை அந்த மகத்தான இசை நாடகத்தை ஒலித்து, நாம் வாழும் இந்நாளில் அது மாறுவதைக் காணும் போது, மனிதன் பூமியின் காட்சியைக் காணாமல் தன் மாமிச கண்களை மூடிக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வாழலாம். நீங்கள் அந்த இசை நாடகத்தில் துவங்க வேண்டும். நீங்கள் அந்த இசை நாடகத்தில் இருப்பீர்காளானால், நீங்கள் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று, நீங்கள் துவங்க வேண்டும். அப்பொழுது நீங்கள் அந்த தாளத்துடன் ஒன்றி விடுகிறீர்கள். அப்படித்தான் நீங்கள் தேவனிடம் செய்ய வேண்டும். நீங்கள் தூர நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் அதன் தாளத்துடன் ஒன்றி விடுகிறீர்கள். அங்கு நீங்கள் எப்படி நுழைகிறீர்கள்-? நீங்கள் அந்த வார்த்தையின் தாளத்துக்குள் பிறந்து விடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் அந்த வார்த்தையின் பாகமாக ஆகிவிடுகின்றீர்கள். 181. அந்த நடனத்துக்குள் ஒன்றி விட, நீங்கள் நடனத்தின் ஒரு பாகமாக ஆக வேண்டும். பந்து விளையாட்டினுடன் நீங்கள் ஒன்றிவிட வேண்டுமானால் - உங்களுக்குப் பிடிக்கும் ஒன்று - நீங்கள் பந்து விளையாட்டின் ஒரு பாகமாக ஆகவேண்டும். 182. நீங்கள் தேவனுடைய இசை நாடகத்தை அறிந்து கொள்ள, நீங்கள் வார்த்தையின் பாகமாக ஆகவேண்டும். அவருடைய இசை நாடகம் இசைக்கப்படும் போது, காலத்தின் தாளத்துடன் நீங்கள் நடந்து செல்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள், இந்த கடைசி நாட்களில் நீங்கள் "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள்.'' என்பதற்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். ஓ, என்னே! காலத்தின் மகத்தான மாறுதல். நாம் தாளத்துடன் வார்த்தையின் தாளத்துடன்- ஒன்றிவிடுகிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் அவருடைய நோக்கத்தை கண்டு கொள்ளுங்கள். அதன் தாளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். நீங்கள் வார்த்தைக்குள் நுழைந்து கொண்டால், அவர் துவக்கத்தில் அதை எப்படி செய்தார் என்பதை கண்டு கொண்டு, பிறகு அவர் எல்லா காலங்களிலும் எப்படி செய்கிறார் என்பதை கண்டு கொள்வீர்கள். 183. அவர் முதலில் தமது செய்தியை எப்படி அனுப்பினார்? அவர் என்ன செய்கிறார்? அவர் ஸ்தாபனங்களுடன் ஈடுபடுவதில்லை. அவர் முன்பு அப்படி செய்ததில்லை, எனவே இப்பொழுதும் அவர் அப்படி செய்வதில்லை. அதனால் தான் நீங்கள் உலக சபைகளின் ஆலோசனை சங்கம் தாளத்தைக் கேட்டுக் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் அந்தகாரத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வார்த்தையின் தாளத்தை கேட்டுக் கொண்டிருப்பீர்களானால்-! 184. அவர்கள் ஏன் இயேசுவைக் கொன்றார்கள்-? ''நீ மனிதனாயிருக்க, உன்னை தேவனாக்கிக் கொண்டாய்.'' 185. உங்களிடம் “மூவகை விசுவாசிகள்” என்னும் என் செய்தி உள்ளது. எப்படி ஒரு சாரார் அங்கு நின்று கொண்டு... அங்கு பாவனை விசுவாசிகள் இருந்தனர். அவர்கள் விசுவாசிப்பது போல் பாவனை செய்து சிறிது காலம் இயேசுவைப் பின்பற்றினர். ஒரு நாள் இயேசு அவர்களிடம், ''பரலோகத்தில் இருந்து இறங்கின மனுஷகுமாரன் மறுபடியும் பரலோகத்துக்கு ஏறி சென்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்-? நான் பரலோகத்திலிருந்து வந்தேன், மறுபடியும் பரலோகத்துக்குச் செல்கிறேன்” என்றார். 186. அப்பொழுது திரளான கூட்டம், ''இது கடினமான உபதேசம்'' என்று கூறி விட்டு, அவரை விட்டுப் போய்விட்டனர். 187. பிறகு அவருடன் கூட சென்ற பாவனை விசுவாசிகள் எழுபது பேர் வந்தனர். அவர்களுக்கு கடினமான ஒன்று கிடைத்த போது, அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இசை நாடகத்தை அறிந்து இருக்கவில்லை. இந்தக் குழந்தையே யேகோவா என்னும் வாக்குத்தத்தத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. "அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன்.'' அவர், ''நான் இறங்கி வந்த பரலோகத்துக்கு ஏறிச் செல்லும் போது” என்று கூறின போது. 188. அவர்கள், "இது கடினமான உபதேசம். இதை யாரால் புரிந்து கொள்ள முடியும்? நீர் ஒரு சாதாரண மனிதன் என்று நாங்கள் அறிவோம். நாங்கள் உம்முடன் புசிக்கிறோம். உம்முடன் உறங்குகிறோம். உம்முடன் காட்டில் இருக்கிறோம். உம்முடன் கடலில் இருக்கிறோம். நீர் ஒரு சாதாரண மனிதன். அப்படியிருக்க, மனுஷகுமாரன் தாம் இறங்கி வந்த பரலோகத்துக்கு ஏறிச் செல்வார் என்று எப்படி கூறலாம்-? இது கடினமான உபதேசம்'' என்றனர். பாருங்கள், அவர்கள் தாளத்தை அறிந்திருக்கவில்லை. அவர்கள் தேவனுடைய வார்த்தையாகிய இசை நாடகத்தின் தாளத்தை; அதாவது, அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவன் என்றும்; அவர் அந்நேரத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை வெளிச்சம் என்பதையும் அறிந்திருக்கவில்லை. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை, அவர்கள் ''இது கடினமான உபதேசம், இதை யாரால் புரிந்து கொள்ள முடியும்?'' என்று கூறி, அவரை விட்டு விலகிச் சென்றனர். அவர்கள் தாளத்தை அறிந்திருக்கவில்லை, பாருங்கள். 189. பிறகு நாம் பாவனை விசுவாசி - இல்லை, அவிசுவாசியாகிய யூதாஸை காண்கிறோம். அவன் தவறு கண்டு பிடிக்கும் வரைக்கும் காத்துக்கொண்டு இருந்தான். அவர் பன்னிருவராகிய சீஷர்களிடம் யூதாஸ் அவர்களில் ஒருவனாய் இருந்தான்- ''நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ-?'' என்று கேட்டார். 190. அப்பொழுது பேதுரு, "நாங்கள் யாரிடத்தில் போவோம் ஆண்டவரே? நீரே இசை நாடகத்தை எழுதியவர்'' என்றான். ஆமென். "அது எப்படி சென்று கொண்டிருக்கிறதென்று உமக்கு மாத்திரம் தெரியும். நீர் ஒருவர் மாத்திரமே ஜீவ வசனத்தை உடையவராயிருக்கிறீர். நாங்கள் வேறு எங்கு செல்ல முடியும்-? நாங்கள் பரிசேயரிடத்திலோ, சதுசேயரிடத்திலோ, அல்லது ஏரோதியரிடத்திலோ செல்ல முடியாது. நீர் ஒருவர் மாத்திரமே ஜீவ வசனத்தை உடையவராயிருக்கிறீர். நாங்கள் போவதற்கு வேறெந்த இடமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் எங்களை இந்த மகத்தான இன்னிசையுடன் இணைத்துக் கொண்டு விட்டோம். நாங்கள் இங்கிருக்கிறோம். நாங்கள் செவி கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தாளத்துடன் இணைந்து இருக்கிறோம். நீர் தேவனுடைய குமாரன் என்றும், மாமிசத்தில் வெளிப்பட்ட யேகோவா என்றும் விசுவாசிக்கிறோம். அதைக்குறித்து நாங்கள் நிச்சயம் உடையவர்களாய் இருக்கிறோம். எங்களுக்கு நீர் கூறும் இந்த பெரிய சோதனைகள், துன்பங்கள், கஷ்டங்கள், உம்மை ஒப்புக் கொடுக்க நீர் போகப் போவதாக கூறும் காரியங்கள், இது, அது, மற்றது, ''மூன்றாம் நாளில் போன்றவை எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் நாங்கள் தேவனுடைய இசை நாடகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறோம், நாங்கள் அதன் ஒரு பாகமாய் உள்ளோம். அடுத்தபடியாக, என்ன நடக்கப்போகிறதென்று காண நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் உம்மை நெருங்கிப் பின்பற்றுகிறோம்.'' என்றான். ஓ, என்னே-! அதைதான் நான் செய்ய விரும்பு கிறேன், நிச்சயமாக. 191. அவர் எப்படி தொடங்கினார்? அவர் துவக்கத்தில் எப்படி செய்தாரோ அப்படியே. பாருங்கள்-? அவர் தமது செய்தியை ஒரு ஸ்தாபனத்துக்கு அனுப்பவில்லை. அவர் ஒரு குழுவுக்கு செய்தியை அனுப்பவில்லை. அவர் ஒரு மனிதனை அனுப்பினார். நோவாவின் நாட்களில், அது நோவா. மோசேயின் நாட்களில், அது மோசே. 192. ஒரு முறை மற்றவர்கள், ''இந்த கூட்டத்தில் நீ ஒருவன் மாத்திரமே பரிசுத்த மனிதன் என்று நினைத்துக் கொள்கிறாய்” என்றனர். தேவன் அதை இகழ்ந்தார். 193. மோசே கர்த்தரிடம் சென்று, ''இதை செய்து விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்-?'' என்று கேட்டான். 194. அவர், "அவர்களை விட்டு பிரிந்து போ. மற்றதை நான் பார்த்துக் கொள்வேன். நானே உன்னை அனுப்பினேன் அது என் பொறுப்பு” என்றார். அவர் பூமியைப் பிளந்து கோராவையும் அவனுடன் இருந்தவர்களையும் விழுங்கிப் போட்டார். எப் பொழுதுமே. 195. யோவானும் இயேசுவும் ஒரே நேரத்தில் இருக்க முடியவில்லை. இயேசு... யோவான் மேலே நோக்கின போது, அவன், ''நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும். அவரே உறுதிப்படுத்தப்பட்ட வெளிச்சம்” என்றான். எனவே முழு உறுதிப்படுதல் வரும் வரைக்கும் இந்த வெளிச்சம்' ' நகர்ந்துக் கொண்டே இருக்கும். அது உண்மை, அது உண்மை . 196. அவர் துவக்கத்தில் எப்படியிருந்தாரோ அப்படியே இப்பொழுதும் இருக்கிறார். அதைக் கண்டு தான் தேவன் எப்படி இருந்தார் என்று நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். அவர் இவ்வுலகில் இருந்த போது எப்படியிருந்தார்-? அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்-? அவர் தவறான போதகங்களுடன் ஒத்து போனாரா-? அவர் ஸ்தாபனங்களுக்குச் சென்றாரா-? அவர் தம்மை எவ்வாறு அடையாளம் காண்பித்தார்-? ''வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே''. பாருங்கள், இன்றைக்கும் அல்லது எந்த காலத்திலும் அதுவே தான். உங்களுக்கு வெளிச்சம் வேண்டுமானால், இந்த நேரத்துக்காக வேத வாக்கியம் என்ன கூறுகிறதென்று பாருங்கள். சரி. 197. அப்படியானால், நீங்கள் எங்கிருந்து துவங்குகிறீர்கள்? இங்கு ஒரு பாவி இருந்தால், நீ சிலுவையில் துவங்கி, அவருடன் உன்னை மரித்தவனாக எண்ணிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நீ அந்த மகத்தான நாடகத்தில் பிரவேசித்து விடுகின்றாய். நீ செவி கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறாய் நீ இசை எழுதப்பட்ட தாளைக் கையில் பிடித்துக் கொண்டு அதை கவனித்துக் கொண்டே வருகிறாய். அந்த இசை நாடகம் எழுதப்பட்ட இசைத்தாள். நீ கையில் பிடித்துள்ள அந்த தாள், இசை எங்கு மாறி அதை நடிக்கச் செய்கிறது என்பது போன்ற விவரங்களை உனக்கு அறிவிக்கிறது. அப்பொழுது நாடகம் என்னவென்பதை நீ அறிந்து கொள்கிறாய் தேவனுடைய ஆவி ஜனங்களின் மேல் விழுந்து ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதை நீ காணும் போது, நீ திரும்பிப் பார்த்து அது வேதாகமத்தில் எங்குள்ளதென்று பார். அது இந்நாளுக்குரியது தானா என்பதை அறிந்து கொள். இயேசு இவ்வுலகில் வந்த போதும் கூட, அவர்கள் இசை நாடகத்தின் இசைத்தாளை தங்கள் கைகளில் பிடித்திருந்தனர். நிச்சயமாக அவர்கள் அதை வைத்து இருந்தனர். 198. அந்த சொல்லை நான் சரியாகக் கூறுகிறேனா? (சகோ. பிரன்ஹாம் Symphony என்று கூறுவதற்குப் பதிலாக Sympathy என்று செய்தியில் கூறி வருகிறார் - தமிழாக்கியோன்) இசை நாடகம், அனுதாபம் (சபையிலுள்ள யாரோ ஒருவர் Symphony என்கிறார் - ஆசி) இசை நாடகம். அது சரியா? சரி. 199. அவர்கள் தங்கள் கைகளில் இசைத்தாளைப் பிடித்திருந்தனர். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்-? அவர்கள் பின் நோக்கி ஏற்கனவே இசைக்கப்பட்ட தாளத்தை இசைக்க முற்பட்டனர். இன்றைய சபைகளும் இதை தான் செய்கின்றன. அவர்கள் பின் நோக்கி, நாடகத்தில் லூத்தர் என்ன பாகத்தை நடித்தார் என்று பார்க்கின்றனர். அதை தான் லூத்தரன்கள் செய்கின்றனர். இசை மாறினதை அவர்கள் அறியவில்லை. இன்றைக்கு தேவன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று லூத்தரன்களுக்குத் தெரியாது. பெந்தெகொஸ்தேயினர், "ஓ, அதை நாங்கள் பெற்று கொண்டு விட்டோம்'' என்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இசைக்கப்பட்ட இசைத்தாளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? நிச்சயமாக இந்த வேதாகமத்தை நாம் நமது கைகளில் பிடித்துக் கொண்டு, அது எப்பொழுது மாறுகிறது என்பதை கவனித்து வருவோம். அப்பொழுது நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம். 200. சிலுவையில் அவருடன் கூட துவங்குதல். ''நீங்கள் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் இசையை, அதை இயக்குதலைப் பெறுவீர்கள்.” பாருங்கள். "அவருடைய வார்த்தை. வார்த்தையை வெளிப் படுத்தும் பரிசுத்தாவி.'' பிறகு வார்த்தையின் தாளத்தைப் பின் பற்றிக் கொண்டே வாருங்கள். அந்த மணி நேரத்துக்கு இசை என்ன தாளமிடுகிறதோ, அதனுடன் நீங்களும் சேர்ந்து தாளமிடுங்கள். பாருங்கள்-! 201. அநேகர் ''ஏன்-?'' என்று கேட்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் என்னிடம், ''இந்த காரியங்கள் ஏன் எனக்கு சம்பவிக்க வேண்டும்-? இது ஏன் எனக்கு சம்பவித்தது-? நான் துவங்கின போது இது ஏன் எனக்கு நடக்க வேண்டும்-? இந்த தொல்லை எனக்கு இங்கு நேர்ந்தது, இது என்னை இங்கு தொல்லைப்படுத்திவிட்டது. இதை இங்கு இழந்து விட்டேன்” என்றெல்லாம் கூறுகின்றனர். 202. நானும் கூட சில சமயங்களில் "ஏன்-?'' என்று கேட்டிருக்கிறேன். நான் ஒரு வாலிபப் போதகராக இருந்த போது, நான் முதலில் துவங்கின போது, தேவன் ஏன் என்னிடமிருந்து என் மனைவியை எடுத்துக் கொண்டார்-? என் இருதயத்துக்கு அன்பான என் குழந்தையை ஏன் எடுத்துக் கொண்டார்-? அவர் ஏன் அப்படி செய்தார்-? அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை, ஆனால் இப்பொழுது எனக்குத் தெரியும். என் கையினால் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு அவரை விசுவாசித்துக் கொண்டே இருந்தேன். 203. அவருக்கு ஒவ்வொரு சந்திப்பும் (Junction) தெரியும், தாளம் எப்பொழுது இசைக்கப்பட வேண்டுமென்று அவருக்குத் தெரியும். உங்களை வார்ப்பிக்க என்ன அவசியமென்று அவருக்குத் தெரியும். அவர் அதற்காக எப்படிப்பட்ட உலோகத்தை உபயோகிக்கப் போகிறாரென்று அவருக்குத் தெரியும். பாருங்கள்? வனாந்திரத்தின் பின் பாகத்தில். அங்கு தேவன் மனிதர்களை நீதிமான்களாகவும் தீர்க்கதரிசிகளாகவும் வார்ப்பிக்கிறார். பாருங்கள்-? பாருங்கள்-? அங்கு தான் மனிதர்கள் வார்த்தையில் நொறுக்கப்படுகின்றனர். அவர்களுக்குள் எல்லாவிதமான கோட்பாடுகளும் மற்றவைகளும் காணப்படும் போது, அவர்களை வார்த்தைக்குள் கொண்டு வர, தேவன் அவர்களை நொறுக்கி, இவைகளை அவர்களிலிருந்து விலக்கி, அவர்களை வார்த்தை-யாகிய அந்த மகத்தான இசை நாடகத்துக்குள் வார்ப்பிக்கிறார். பாருங்கள்-? அப்பொழுது வார்த்தை முன்னேறிச் செல்வதை அவர்கள் காண்கின்றனர். 204. தாளம் எப்பொழுது மாற வேண்டுமென்று தேவனுக்குத் தெரியும். தாளம் எப்படி செல்கிறது என்று அவர் அறிந்திருக்கிறார். அது எப்படி செல்கிறதென்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அறிவார். அதை நான் இங்கு பார்த்து, "அது வந்து கொண்டிருக்கிறது'' என்று கூறுகிறேன். 205. ''நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்''. பாருங்கள்-? தேவன் தமது வார்த்தையின் வாக்குத்தத்தமாகிய தாளத்துடன் சரித்திரத்தின் வழியாக கடந்து; ஒவ்வொரு காலத்திலும் அதே தாளத்துடன் கடந்து வந்து இருக்கிறார். அப்படித் தான் அவர் ஆதியாகமம் துவங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடிய உள்ள காலம் வரைக்கும் கடந்து வந்திருக்கிறார். தமது வார்த்தையைக் கொண்டு அவர் சரித்திரத்தைக் கடந்து வந்திருக்கிறார். அது உண்மை. அவர் பரிசுத்த ஆவியின் வல்லமை என்னும் தாளத்தின் மூலம் காலங்கள் தோறும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு தமது வார்த்தையை உறுதிப்படுத்தி வந்து உள்ளார். அவரால் வெளிப்புற சபையைத் தொட முடியவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது தெரிந்து கொள்ளப்-பட்டவர்கள் மாத்திரமே. 206. அந்த ஆசாரியர்கள், "இவன் பெயெல்செபூல், இவன் குறி சொல்பவன், இவன் மனோவசியத்தினால் மனதிலுள்ளவைகளை அறிகிறான்'' என்று கூறுவதைப் பாருங்கள். 207. ஆனால் அவர்கள், "தேவனுடைய வார்த்தையானது இரு புறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவு-களையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்பதை சிறிதேனும் அறியாமல் இருந்தனர். அவர் வார்த்தையாயிருந்தார். 208. ஆனால் அன்று ஒரு வாளி தண்ணீர் மொள்ள கிணற்றண்டை வந்திருந்த அந்த வேசியோ, ''நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வரப்போகிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எங்களுக்கு தீர்க்கதரிசிகள் இருக்கவில்லை. ஆனால் மேசியா வருவாரென்று அறிந்திருக்கிறோம். அவர் வரும் போது அவர் அப்படித் தான் இருப்பார்” என்றாள். 209. அவர், ''நானே அவர்” என்றார். அது போதுமானதாயிருந்தது. ஏன்? தாளம் இசைத்துக் கொண்டிருக்கிறது. அதில் நேரிடவிருக்கும் மாற்றத்துக்காக அவள் காத்துக் கொண்டிருக்கிறாள்- சபை ஸ்தாபனத்திலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட மேசியா என்னும் அந்த மாற்றம் "உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்” என்று மோசேயினால் உரைக்கப்பட்ட அந்த மேசியா அங்கு நின்று கொண்டிருந்தார். அதோ அவர். தாளம் மாறினது உறுதிப்படுத்தப்பட்ட வித்து அதை அடையாளம் கண்டு கொண்டது. 210. உண்மையான தேவனுடைய வார்த்தை வித்தின் மேல் விழுந்து, அவர்கள் வார்த்தை உறுதிப்படுத்துவதை காணும் போது, அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்கின்றனர். அவர்கள் வார்த்தையை நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சந்திப்பை அறிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தை அறிந்திருக் கின்றனர் அவர்கள் மாற்றத்தை அறிந்திருக்கின்றனர், அந்த நேரத்தில் இருக்க வேண்டிய தாளத்தையும் அவர்கள் அறிந்து இருக்கின்றனர். அல்லேலூயா-! அவர்கள் தாளத்தை அறிந்திருக்கின்றனர், அவர்கள் காலத்தை அறிந்திருக்கின்றனர், அது எப்படி போக வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கின்றனர். பாருங்கள், தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் மாத்திரமே அதை அறிவர். 211. பிலிப்பு அதைக் கண்டபோது, அவனால் பொறுத்திருக்க முடியவில்லை. அவர் மேசியாவென்பதை அவன் அறிந்து கொண்டான். எனவே அவன் ஒரு ஆசாமியிடத்தில் சென்றான் அவர்கள் ஒன்றாக வேதபாடம் பயின்றனர். அவன், "நாத்தான்வேலே, வந்து ஒரு மனிதனைப் பார். நாங்கள் யாரைக் கண்டோம் என்று வந்து பார். நாங்கள் நசரேயனாகிய இயேசுவைக் கண்டோம். வருவார் என்று மோசே முன்னுரைத்த தீர்க்கதரிசி அவர் தான். நாங்கள் அவரைக் கண்டோம், நாங்கள் அவரைக் கண்டோம்''. என்றான். 212. அப்பொழுது நாத்தான்வேல், ''அது எப்படி? நான்... அவர் எங்கிருந்தார்?'' என்று கேட்டான். பாருங்கள், அவன். அவன் தாளத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றாக வேதத்தை படித்தனர். அவன் அங்கு சென்று அவனை வார்த்தைக்கு அறிமுகப்படுத்தினான். 213. நாத்தான்வேல் அங்கு அடைந்த போது, இயேசு, ''இதோ, இஸ்ரவேலன்” என்றார். அப்பொழுது தாளம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது, அந்த மகத்தான நாடகம் அன்று மேடையின் மேல்- இல்லை தரையில்-இசைக்க ஆரம்பித்தது, ஒருக்கால் இயேசு ஒரு கற்பாறையின் மேல் நின்று கொண்டு ஜனங்களிடம் பேசிக் கொண்டிருந்திருப்பார். பிலிப்பு நாத்தான் வேலைக்கூட்டிக் கொண்டு வந்த போது, அவர் நாத்தான்வேலை நோக்கி, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்றார். அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்றான். 214. இயேசு, ''பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்.'' என்றார் ஓ, என்னே ! 215. அவன் அதன் ஒரு பாகமாயிருந்தான். அவன், ''நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா" என்றான். உலகத்தின் தாளம் என்னவாயிருந்த போதிலும், ஸ்தாபனங்களின் பூசல் என்னவாயிருந்த போதிலும், அது மகத்தான தேவனுடைய இசை நாடகமாக இருக்கவில்லை. ஆமென். அவன், ''நீர் இஸ்ரவேலின் ராஜா-! அதை நான் காண்கிறேன். அதை நான் அறிந்து கொண்டேன்'' என்றான். ஏன்-? அவன் தெரிந்து கொள்ளப்பட்டவன். தெரிந்து கொள்ளப்பட்ட வித்து அறிந்து கொள்ளும். ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் அறிந்து கொண்டு உள்ளனர். 216. நீங்கள் “சகோ.பிரன்ஹாமே, என் தாயையும் தந்தையையும் குறித்து என்ன-? என் மக்களைக் குறித்தென்ன-? என் ஸ்தாபனத்தைக் குறித்தென்ன-? அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா-? என்னைத் தள்ளி விடுவார்களே” எனலாம். உன்னால் முன்னோக்கிப் பார்க்க முடியவில்லையென்றால், மேலே நோக்கிப் பார். முன்னோக்கிப் பார்க்க முயலாதே. உன் கையை அவர் கையில் போடு. அவர் உன்னை வழி நடத்தட்டும். மேலே நோக்கிப் பார். முன்னோக்கிப் பார்க்காதே. "என் நீண்ட தலை மயிரைக் குறித்தும், குட்டைக் கால் சட்டை அணிவதை நான் விட்டு விட்டதைக் குறித்தும், ஸ்தாபனத்தை விட்டு விலகினதைக் குறித்தும் அவர்கள் கேலி செய்கிறார்கள்” என்று நீ கூறலாம். ஊ! அவருடைய நாமத்தினிமித்தம் துன்பப்படுவது அவருடைய கிருபையினால் வளரும் வேதனைகளாம். ஆம். அவருடைய வார்த்தையின் நிமித்தம் துன்பப்படுவது அவருடைய கிருபையினால் வளரும் வேதனை- களாம். ஆம், ஐயா-! அது உனக்கு அருளப்பட்ட தேவனுடைய கிருபை என்பதை ஞாபகம் கொள். ஓ, என்னே! 217. பவுல் கூறின வண்ணமாக அல்லேலூயா. அவனுக்கு ஒரு பலவீனம் இருந்தது. ஏதோ ஒன்று அவனை தொல்லைப்படுத்திக் கொண்டேயிருந்தது. அவன்... பிசாசு அவனை குட்டிக் கொண்டே இருந்தான் - குத்துக்கு மேல் குத்து. அதை அவனை விட்டு எடுத்துப் போடும்படிக்கு அவன் மூன்று தரம் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டான். அவன், "கர்த்தாவே, இது எனக்கு வேண்டாம், இதை என்னை விட்டு எடுத்து போடும்'' என்று வேண்டிக் கொண்டான். 218. ஒரு இரவு கர்த்தர் அவனிடம் பேசினார். ''பவுலே என் கிருபை உனக்குப் போதும்” என்றார். 219. பவுல் ''என் பலவீனங்களைக் குறித்து நான் மேன்மை பாராட்டுவேன். அதில் நான் மேன்மை பாராட்டுவேன். நீர் சுகமளிப்பவர் என்று நானறிவேன். நீர் வியாதியஸ்தரை சுகப்படுத்துவதையும், மரித்தோரை உயிரோடு எழுப்புவதையும், பிசாசுகளைத் துரத்துவதையும், குருடரின் கண்களைத் திறப்பதையும் கண்டிருக்கிறேன். நான் உம்மை வேண்டிக் கொண்டபோது, உமது கிருபை எனக்குப் போதுமென்று கூறுகிறீர். அப்படியானால் என்னைத் தொல்லைப்படுத்தும் இந்த பிசாசு உமது கிருபையின் வளரும் வேதனைகளாம். என் பலவீனங்களைக் குறித்து நான் மேன்மைபாராட்டுவேன். ஏன் எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு'' என்றான். பாருங்கள்? 220. பாருங்கள், மற்ற சீஷர்கள் பெற்றிராததை அவன் பெற்றிருந்தான். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் இவைகளுக்குப் பின்பு அவன் அவரைக் கண்டான். சிலர், "நான் அவரோடு கூட நடந்தேன்” என்கின்றனர். தெருவில் நடந்த ஒவ்வொருவரும் அவரோடு கூட நடந்தவர்களே. ஆனால் அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிரோடு எழுந்து, பரமேறின பின்பு அவர் அக்கினி ஸ்தம்ப உருவில் திரும்பி வந்த போது, அவர் பவுலுடன் பேசினார். அது மற்றவர்கள் பெற்று இருந்த அனுபவத்தைக் காட்டிலும் அதிகமான ஒன்று ஆமென். 221. பவுல், "நான் என்னை உயர்த்திக் கொண்டு பெரிய வேத கலாசாலை-களையும் மற்ற பெரியவைகளையும் கட்டாதபடிக்கு எனக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என்னை அடித்து தாழ்த்தும்படிக்கு தேவன் சாத்தானின் தூதனை அனுமதித்து இருக்கிறார்” என்றான். அவன், "நான் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ள- வனாயிருக்கிறேன்'' என்றான். ஆமென். ஆமென். கிருபையின் வளரும் வேதனைகள்-! ஆமென் அதில் நீண்ட நேரம் நாம் நிலைத்திருக்கக் கூடும். ஏற்கனவே ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் கடந்து விட்டது. அவருடைய கிருபையின் வேதனைகளை நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 222. ஓ, அவர் தெருச் சந்தியை (Cross Roads). அனுமதிக்கக் கூடும். நம்மை சோதிக்க, நம்மை அவருடைய ஊழியத்துக்காக பரிபூரணப்படுத்த அவர் தெருச் சந்தியை அனுமதிக்கக்கூடும், இங்குள்ளதும், இதை ஒலி நாடாவில் கேட்கப் போவதுமான சபையே, அவர் அதை அனுமதிக்கக்கூடும். நம்மை ஊழியத்தில் உபயோகிக்க, அவர் தெருச் சந்தியை அனுமதிக்கக்கூடும். 223. அவர் தானியேலுக்குச் செய்தது போல. ஒரு நாள் அவர் தானியேலுக்கு ஒரு சிறு தெருச் சந்தியை அளித்தார். அவன் பாபிலோனில் ஒரு பெரிய மனிதனாக விளங்கினான். அவர் ராஜா அவனுக்கு விரோதமாக எழும்பும்படி செய்து அவனைச் சிங்கங்களின் கெபியிலே போடும்படி செய்தார். அது அவனை பரிபூரணப்படுத்த மாத்திரம் செய்தது. நிச்சயமாக செய்தது! 224. அவர் எபிரெய பிள்ளைகள் எரிகின்ற சூளைக்குள் செல்லும்படி செய்தார். அவர்கள் அவருடைய வார்த்தைக்கு உறுதியாய் நிற்க தீர்மானம் கொண்டார்கள். 225. அவர் தெருச்சந்தியை அனுமதிக்கக் கூடும். நீங்கள் நீண்ட தலைமயிர் வைத்துள்ளதற்காக அவர்கள் உங்களை கேலி செய்யட்டும். நீங்கள் ஏன் உருளும் பரிசுத்தர் ஆனீர்கள் என்னும் உங்கள் சாட்சியைக் கேட்டு அவர்கள் கேலி செய்யட்டும்.... அதற்காக, அவர்கள் உங்களைக் கேலி செய்யக் கூடும். பரவாயில்லை. அது ஒரு தெருச்சந்தி, அது ஒரு சிறு சந்திப்பு. அது ஒன்றை நிரூபிப்பதற்காகவே. 226. வார்த்தையில் நின்ற எபிரெய பிள்ளைகளுக்கு தெருசந்தி செய்த ஒன்றே ஒன்று. அவர்களுடைய கைகளையும் கால்களையும் கட்டியிருந்த கட்டுகளில் இருந்து அது அவர்களை விடுவித்தது. 227. உலக கட்டுகளிலிருந்து நம்மை விடுவிக்க, சில சமயங்களில் கடினமான சோதனைகள் அவசியமாயுள்ளன. நாம் என்ன செய்வோம் என்பதைக் காண, உங்களை உலகத்திலிருந்து பிரிக்க அவர் சில சமயங்களில் சிறு சோதனைகளை நமக்கு அனுமதிக்கிறார். வேறு விதமாகக் கூறினால் உங்களுக்கு சிறு சோதனைகளை அவர் அனுமதித்து, ''மெதோடிஸ்டுகள் ஒருவரே சத்தியத்தைப் பெற்றுள்ளனர். அல்லது பாப்டிஸ்டு ஒருவரே, அல்லது பெந்தெகொஸ்தேயினர் ஒருவரே சத்தியத்தைப் பெற்றுள்ளனர். என் சபை விசுவாசிப்பது போல் நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் விசுவாசிக்கவேயில்லை'' என்னும் கருத்தை உங்களை விட்டு எடுத்துப் போட்டு, உங்களை ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றுகிறார். ஒரு சிறு சோதனை உங்களுக்கு நேரிடுவதற்கு அவர் சில நேரங்களில் அனுமதிக்கிறார். ஒருக்கால் உங்களுக்கு வியாதிப்பட்ட குழந்தை இருக்கலாம். அல்லது மரணத்தருவாயில் ஏதாவதொன்று நேரிடலாம். அல்லது யாராவது ஒருவர் உங்களிடமிருந்து ஏதாவதொன்றைப் பறித்துக் கொள்ளலாம். அது ஏன் நடக்கிறது-? உங்களைப் பிரித்தெடுக்க, உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க, உங்கள் கண்களைத் திறக்க, ஒருக்கால் நீங்கள் குறை கூறுவதற்காக வந்து இருக்கலாம் ஒருக்கால் நீங்கள் குறை கூறுவதற்காகவே இந்த ஒலிநாடாவை நீங்கள் கேட்கலாம், ஒருக்கால் உங்களைக் கட்டியிருக்கும் உலகக் கட்டுகளிலிருந்து உங்களை விடுவிக்க. தேவன் அதை செய்யக்கூடும். 228. ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் போல். நீங்கள் ஆற்றை அவனிலிருந்து விலக்குவதற்கு முன்பாக, அவனை ஆற்றிலிருந்து தூக்கியெடுக்க வேண்டும். அது உண்மை. முதலில் அவனை ஆற்றிலிருந்து நீங்கள் தூக்கியெடுக்கவேண்டும். அப்பொழுது அவனை ஆற்றிலிருந்து நீங்கள் விலக்கி விடுவீர்கள். சில சமயங்களில் தேவன் அவ்வாறு செய்ய வேண்டியதாயுள்ளது. அதை செய்ய அவர் சந்திப்பை, தெருச் சந்தியை அனுமதிக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்களின் மேல் - வார்த்தையின் மேல் நில்லுங்கள். அவை ஒருக்காலும் தவறாது. எதிர்காலம் அவருடைய கரங்களில் உள்ளது. அவர்கள் நின்றது போல் நீங்களும் நில்லுங்கள், விலகி விடாதீர்கள். 229. ஆபிரகாம் அவனுடைய தெருச் சந்தியில், தேவன் தன் குமாரனை மரித்தோரிலிருந்தெழுப்ப வல்லவராயிருக்கிறாரென்று அறிந்திருந்தான். அங்கு இருந்து அவனைத் திரும்பவும் தெருச் சந்தியில் பெற்றுக்கொண்டான். ஆபிரகாம் தெருச் சந்தியை அடைந்தான். அவன் தேவனை விசுவாசித்து, தேவனுடைய அற்புதங்கள் அனைத்தும் கண்ட பின்பு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொள்ள அவன் 25-வருடம் காத்து இருந்தான். அவன் எதற்காக காத்திருந்தானோ, அதை கொண்டு போய் பலி செலுத்த தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். என்னே, ஓ, என்னே ஒரு சோதனையின் நேரம்-! ஆனால் ஆபிரகாம் தடுமாறினானா-? ரோமர் 4-ம் அதிகாரத்தைப் படியுங்கள். அவன் முழு நிச்சயமாய் நம்பினான்.'' ஆமென். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறாரென்று அவன் முழு நிச்சயமாக நம்பினான். ஆமென். அவர் தெருச் சந்தியை அனுமதித்தார். அவர் மரித்தோரை உயிரோடெழுப்ப வல்லவர் என்பதை ஆபிரகாமின் மூலம் அவர் நமக்குக் காண்பிக்கிறார், பாருங்கள். 230. ஆபிரகாம், ''அவனை மரித்தோரிலிருந்து பெறுவது போல பெற்றுக் கொள்கிறேன்” என்றான். சாராளின் கர்ப்பம் செத்திருந்தது. அவனுடைய சரீரமும் செத்திருந்தது. அவன் வயது சென்றவன். குழந்தைக்குப் பாலூட்ட அவளுக்கு பால் சுரப்பிகள் இல்லை. அவர்களுக்கு ஒன்றுமில்லை. அவன் ஆண்மைத்துவத்தை இழந்திருந்தான், அவளும் கர்ப்பந்தரிக்க இயலாத நிலையில் இருந்தாள். பாருங்கள்-? எந்த ஒரு வழியும் இல்லை. மரித்தோரி- லிருந்து அவனைத் திரும்பப் பாவனையாகப் பெற்றுக்கொண்டான். அவன், "தேவனால் அதை செய்யக் கூடுமானால், அவனை அவர் மரித்தோரில் இருந்தும் உயிரோடெழுப்ப முடியும். குழந்தை பிறக்குமென்று உரைத்த அதே தேவன் - அவர் கூறினபடியே குழந்தை பிறந்தது - அவனை மரித்தோரில் இருந்தும் உயிரோடெழுப்ப வல்லவராயிருக்கிறார்” என்றான். அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்படி செய்கிறார். ஆமென். 231. இக்கடைசி நாட்களில் இவை நடக்குமென்று தேவன் வாக்களித்தார். அவை நடப்பதை நாம் காண்கிறோம். அவர் ஒரு குமாரனை வாக்களித்து அந்த குமாரன் பிறந்திருப்பாரானால்; இவையனைத்தையும் அவர் வாக்களித்ததாக நாம் வேதத்தில் கண்டு அவை நிறைவேறியிருக்குமானால், அதன் தாளத்துடன் நாம் இணைந்து விடுவோம். கடைசி நாட்களில் இவை நடக்கும் என்று அவர் வாக்களித்தார். இவைகளை நாம் காண்கிறோம். அவர் இயேசுவை அனுப்புவதாக வாக்களித்தார். அல்லேலூயா-! ஆயிரம் வருட அரசாட்சி வரும். ஒரு புதிய நாள் தோன்றும். சூரியன் அஸ்தமிக்காத ஒரு நாள் வரப்போகின்றது. சூரியன் நமக்கு அவசியமிராது, ஏனெனில் நாம் செல்ல இருக்கும் அந்த நகரத்துக்கு ஆட்டுக்குட்டியானவரே வெளிச்சமாயிருப்பார். 232. ஒரு புதிய நாள் உதயம், அதை இப்பொழுதே என் உடல் முழுவதிலும் உணருகிறேன். ஒரு புதிய நாளின் வெளிச்சம்! அங்கு இரவு இருக்காது, இருள் இருக்காது, நிழல்கள் இருக்காது, வானம் இருக்காது, இருள் சூழ்ந்த வானம் இருக்காது, நள்ளிரவு இருக்காது, கல்லறைகள் இருக்காது, மலைச்சரிவுகளில் பூக்கள் இருக்காது, அடக்க ஊர்வலம் இருக்காது, மருத்துவர் இருக்க மாட்டார்கள். சவக்கிடங்கு இருக்காது. ஆமென். அவருடைய வெளிச்சத்தின் கதிர்கள் என் ஆத்துமாவின் மேல் விழுவதை நான் உணருகிறேன். ஒரு புதிய நாள்-! பழையது கடந்து போய்க் கொண்டிருக்கிறது. 233. என் உடலில் மானிட இரத்தம் ஓடிக்கொண்டிருப்பதை நான் உணருவது போல், பரிசுத்தாவி என்னுள்ளில் பாய்ந்து, "எழும்பிப் பிரகாசி'' என்று கூறுவதை என்னால் உணரமுடிகிறது.!! 234. ஏதோ ஒன்று என்னிடம், ''பில்லி பிரன்ஹாமே, உனக்கு வயதாகிறது. நீ பலவீனமடைந்து வருகிறாய், உன் தோள்கள் தொங்க ஆரம்பித்து விட்டன, உன் தலைமயிர் நரைத்து, விழுந்து கொண்டிருக்கிறது'' என்றது. உண்மை இருள், பூமியின் மேல் காரிருள்! 235, ஆனால், ''எழும்பிப் பிரகாசி. என்னை அவரில் புது சிருஷ்டியாக மாற்றின இயேசு கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் வெளிச்சம் அங்கு விழுந்து கொண்டிருப்பதை நான் உணருகிறேன். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன், ஆமென், அந்த புதிய நாளுக்காக எதிர்காலம் என்னவென்று எனக்கு தெரியாது. 1964-ம் ஆண்டு எனக்காக என்ன வைத்துள்ளதென்று எனக்குத் தெரியாது. ஆனால் நித்தியத்தை தம் கரங்களில் கொண்டுள்ளவரின் கரத்தை நான் பிடித்திருக்கிறேன், அவரே நித்தியமானவர். ஆமென். 236. தன் குமாரனை உயிரோடெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்று ஆபிரகாம் அறிந்திருந்தான், எனவே அவன் அவரை விசுவாசித்தான். 237. எனவே இந்த புத்தாண்டில், மற்ற காலத்தில் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் செய்தது போல், நீங்கள் அவருடைய வார்த்தையிலும் அதன் வாக்குத்தத்தத்திலும் நிலைத்திருக்க தீர்மானம் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் வெளிச்சம் உங்கள் மேல் விழுந்துள்ளது என்பதை நீங்கள் கண்டதாக உணர்ந்தால், இக்கடைசி நாட்களில், மகத்தான பரிசுத்த ஆவியின் கிரியைகளை நீங்கள் கண்டிருந்தால், அதில் நிலைத்திருக்க ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவர். மற்ற காலங்களில் ஆபிரகாமைப் போன்ற தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் செய்தது போல்: விஞ்ஞான நிரூபணங்களுக்கு அது விரோதமாயிருந்த போதிலும், ஆபிரகாம் அதை விசுவாசித்தான். அவ்வாறே நோவாவும் விஞ்ஞான நிரூபணங்களுக்கு விரோதமாயிருந்த அதை விசுவாசித்தான் - கடந்து போன அறிவு நிறைந்த காலங்களில். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ அதை விசுவாசித்து, உறுதியாய் நின்றனர்-! ஆமென். 238. எதிர்காலத்திற்கு நாம் வாக்குத்தத்தத்தின் மேல் உறுதியாய் நிற்போமாக. தேவன் அதை செய்தார், எனவே அதை என்னைக் கடக்கச் செய்வது தேவனுடைய பொறுப்பு, நான் தாளத்தை மாத்திரம் பின் பற்றுகிறேன், காலத்தின் தாளம் முடிவடைந்து, ''இதுவே உலகில் வில்லியம் பிரன்ஹாமின் முடிவு'' என்று கூறுமானால், நானும் தாளத்துடன் கூட சென்று விடுவேன். பின்பு தாளத்துடன் நான் உயிரோடெழுவேன். அல்லேலுயா-! தாளத்தை இசைப்பவர். தாளத்தை முடித்து விடுகிறார், மறுபடியும் தாளத்தை இசைக்கிறார். அது தேவனுடைய தாளம். ''கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு: அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” நான் வார்த்தையின் தாளத்தை பின்பற்றுவேன். ஆமென். என் இருதயத் துடிப்பை அல்ல, வார்த்தையின் தாளத்தை, அது என்னவாயிருப்பினும், என் இருதயம் வார்த்தையுடன் கூட துடிக்கவில்லையென்றால், என் இருதயத்தில் ஏதோ தவறுள்ளது. ஆமென், ஏனெனில், அவரே வார்த்தையாய் இருக்கிறார். ஆமென், தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் அவ்வாறு உரைக்கின்றது. 239. பில்லியும் நானும் சற்று முன்பு வந்து கொண்டிருக்கும் போது, வானொலியில் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டோம். அது இந்த வேதாகமம்... தீர்க்க தரிசனம் என்று அழைக்கப்படும்-? நேரம்... அது என்னவென்று அழைக்கப் படுகிறது ஏதோ தீர்க்கதரிசனம் சம்பந்தமாக. தீர்க்கதரிசனத்தின் குரல் (Voice of Prophecy). அது ஏழாம் நாள் ஆசரிப்போர். அவர்கள் ஐந்தாறு பெயர்களைக் கொண்டுள்ளனர். துவக்கத்தில் அவர்கள் மில்லரியர்கள் (Millerites). என்று அழைக்கப்பட்டனர். 240. அவர்கள் தாம் ஒரு கூட்டத்தில் நான் இயேசு கிறிஸ்து என்று உரிமை கோரினதாக - அதாவது பரிசுத்த பிதா அக்கினி ஸ்தம்ப வடிவில் என் தலையின் மேல் உள்ளதாகவும், நான் இயேசு கிறிஸ்து என்று உரிமை பாராட்டினதாகவும் கூறினர். அவர்களுடைய கூட்டத்தில் என் நண்பர் ஒருவர் இருக்க நேர்ந்தது. அவர் எழுந்து நின்று, "அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அவரை நான் இங்கு வரவழைக்கிறேன். ஒரு முறையாவது அவர் அவ்விதம் அறிக்கை பண்ணினதாக நீங்கள் நிரூபிக்க வேண்டும்'' என்றார். அவர் உலகிலுள்ள வெவ்வேறு மதங்களைக் குறித்து பேசினார். 241. அவர்களுக்குத் தெரியும். ஒரு முறை ஒய்வு நாளைக் குறித்த பிரச்சினையின் பேரில் எனக்கு அவர்களுடன் விவாதம் நடந்தது. அவர்கள் கடந்து போன ஒரு நாளை ஆசரித்து வருகின்றனர். பரிசுத்த ஆவியே நம்முடைய ஓய்வு நாள். வேதம் அவ்வாறு கூறுகின்றது. ''வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" அது "ஒருநாள் அல்ல. பவுல், ''ஒரு நாளை ஆசரிக்கிறவர்களே, உங்களைக் குறித்து நான் பயப்படுகிறேன்'' என்றான். பாருங்கள், அது உண்மை . ஆம் ஐயா. ''இளைப்பாறுகிற காலம் இனி வருகிறது.'' எபிரெயர் 4-ம் அதிகாரம். ''தேவனுடைய ஜனங்களுக்கு ஓய்வு நாள் ஆசரிப்பு - இளைப்பாறுகிற காலம் - இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கிற நாம், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, நாமும் நம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்போம்''. 242. அவர்களுடைய பேச்சாளர் சற்று முன்பு - நல்ல வானொலி நிகழ்ச்சி. அவர்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கு உதவி செய்ய நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவர்கள் அதை கூறினத-ற்காக அவர்களை தாராளமாக மன்னித்து விடுங்கள் ஏனெனில் உண்மை இல்லாத ஒன்றை அவர்கள் கூறி விட்டனர். அது பரவாயில்லை. அவர்களுடைய உபதேசம் யேகோவா சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானம் போன்ற மற்ற கொள்கைகளை (cults). போலவே உள்ளது. பாருங்கள், அதே தான். ஆனால் கவனியுங்கள், அவர்கள் மற்ற ஸ்தாபனங்களைப் போலவே தவறாயுள்ளனர். வார்த்தை எப்பொழுதும் பிழையற்ற தாய் உள்ளது, பாருங்கள், அது பிழையற்றது என்பதை நிரூபிக்கும். கவனியுங்கள். 243. வானொலி நிகழ்ச்சியில் அந்த மனிதன் பேசும்போது இந்த ஆண்டுக்கான புத்தகத்தை நாங்கள் வைத்துள்ளோம்'' என்று கூறினார். எழுதியவர், ஓ, அவருடைய பெயரென்ன, அந்த பேச்சாளர்-? அவருடைய பெயர் எனக்கு இப்பொழுது மறந்து விட்டது. அண்மையில் சியாட்டிலில் நடந்த உலக சந்தையில் கிறிஸ்தவ வர்த்தகர்கள் கூட்டத்தில் அவர் பேசினார். அந்த அறிவிப்பாளர், 'இந்த மனிதன் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார், அது இவ்வாண்டில் தலை சிறந்த புத்தகம்” என்றார். 244. இவ்வாண்டுக்கான புத்தகம் வேதாகமமே-! அதுவே உலகத்திற்கு ஒளியாயுள்ளது. அது தேவனே. ஆண்டுக்கான நமது புத்தகம் வேதாகமமே. இந்த 1964-ம் ஆண்டுக்கு நமது புத்தகம் வேதாகமமே. வரப் போகும் எல்லா ஆண்டுகளுக்கும் நமது புத்தகம் வேதாகமமே. கடந்து போன எல்லா ஆண்டுகளுக்கும் கூட அது புத்தகமாக திகழ்ந்து வந்தது. வரப் போகும் ஆண்டுகளுக்கும் அது அவ்வாறே இருக்கும். அது நித்தியத்துக்கான புத்தகம். அது தேவன் என்று வெளிப்படுத்துகிறது. ஆம், அது தேவனை வெளிப்படுத்து-கிறது வரப்போகும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அது அவ்வாண்டுக்கான புத்தகமாய் இருக்கும். வேதம் ஒரு வாக்குத்தத்தத்தைக் கூறுவதை நீங்கள் கேட்கும் போது, அது உறுதிப்படும்போது, என்றாவது ஒரு நாள் நித்தியம் வரும் என்னும் உறுதி ஏற்படுகின்றது. ஏனெனில் வேதம் தான் அதையும் நமக்கு வாக்களித்துள்ளது - இயேசு ஒரு நாள் வருவார் என்று. 245. நான் முடிக்கவேண்டும். ஏனெனில் நான் இங்கு இரண்டு மணி நேரமாக இதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். 246. கவனியுங்கள். வரப்போகும். சம்பவங்களைக் குறித்து வேதம் நமக்கு அறிவிக்கின்றது. அது நாம் கடந்து வந்த காலங்களைக் குறித்தும் உரைத்து உள்ளது. நோவாவின் நாட்கள் வேதத்தில் முன்னுரைக்கப்பட்டது. மற்ற நாட்களையும் வேதம் முன்னுரைத்தது. மார்டின் லூத்தரின் நாட்கள் முன்னுரைக்கப்பட்டது. வெஸ்லியின் நாட்கள், பெந்தெகொஸ்தேயினரின் நாட்கள், நாம் வாழும் இந்நேரம் ஆகிய அனைத்தும் முன்னுரைக்கப்பட்டன. அது முன்னுரைத்த விதமாகவே இவையனைத்தும் நிகழ்ந்தன. அது என்ன-? அது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை. அது தேவனால் உறுதிப்படுத்தப் படும்போது, அந்நேரத்துக்கான வெளிச்சமாக அமைகின்றது. பாருங்கள், சூரியனைப் போல் வார்த்தையானது, அது எந்த காலத்துக்குரியதோ, அந்த காலத்தில் உறுதிப்படுத்தப்படும்போது வெளிச்சமாக அமைகின்றது. பாருங்கள், அது உறுதிப்படுத்தப்படும்போது, அது அந்நேரத்துக்கான வெளிச்சம். 247. யோவான் வெளிச்சமாயிருந்தான். எலியாவும் மற்றவர்களும் பெற்று இருந்ததை விட, இவன் அதிக வெளிச்சமாயிருந்தான். அவன் எலியாவின் வெளிச்சமல்ல. ஆனால் அவன் வேறு உருவத்தில் எலியாவாக இருந்து, வெளிச்சத்தை உறுதிப்படுத்தினான். பாருங்கள், அவன் அதை செய்தான். இயேசு இவ்வுலகில் வந்த போது, ''அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான். நீங்களும் சில காலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாய் இருந்தீர்கள்'' என்றார். பாருங்கள்-? 248. யோவான், ''நான் இப்பொழுது மங்க வேண்டும். நான் இப்பொழுது போக வேண்டும். என் வெளிச்சம் பிரகாசித்து முடிந்து விட்டது. நான் போக வேண்டும். அவர் பெருக வேண்டும். அவர் தான் ஒளி" என்றான். 249. இயேசு, ''நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்'' என்றார். ஆமென், அது உண்மை. "நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.'' அவர் இன்னமும் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறார். அவர் என்னவாயிருக்கிறார்-? ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது.'' அவர் எப்படி உலகத்துக்கு ஒளியாயிருந்தார்-? அவர் தம்மை மேசியாவென்று அழைத்துக் கொண்டு, மேசியா என்ன செய்வாரென்று வேதம் கூறியுள்ளதை செய்யாமல் போனால், அவர் உலகத்துக்கு ஒளியல்ல. பாருங்கள்-? உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையே அவரை உலகத்துக்கு ஒளியாகச் செய்கின்றது. 250. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்நேரத்துக்கான உறுதிப் படுத்தப்பட்ட வார்த்தை-! பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள், "அந்நிய பாஷை பேசுதல்" என்கிறீர்கள், அது பெந்தெகொஸ்தே நாளின்போது. அப்பொழுது அது அந்நேரத்துக்கான வெளிச்சமாயிருந்தது. பாருங்கள், இது வேறொரு நாள். இன்றைக்கு அவர் இந்நேரத்துக்கான வெளிச்சமாயிருக்கிறார். 251. ஏழாம் சபையின் காலம் புகைக்காடாகி, இயேசு அதற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். சந்திரன் அதை அடையாளம் காண்பிக்கிறது. பூமியின் மேல் இருள் வந்து கொண்டிருக்கிறது. வெளிச்சம் இப்பொழுது நெருக்கி உள்ளே நுழைந்து, என்ன நடக்கப்போகின்றது என்பதைக் காண்பிக்கிறது. அது அழிந்து போகும். வெளிச்சம் உள்ளே வந்து அதை அழித்துப் போடும். அப்பொழுது பரிசுத்தவான்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள், சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள், பூமி, சந்திரன் மேல் உள்ள இருள் எடுக்கப்படும் இரவின் இருள் போய்விடும் - கோட்பாடுகளினால் ஏற்பட்ட மரணம். தேவனுடைய வார்த்தையை விட்டு தூர விலகுதல், அவர்கள் கூறும் முரணான காரியங்கள் போன்ற அனைத்தும், அப்பொழுது காலை நேரத்தில் வெளிச்சம் உதிக்கும். 252. ஞாபகம் கொள்ளுங்கள், முழு வேதாகமும்... முடிக்கும் தருணத்தில், இதை கவனியுங்கள். இந்த முழு வேதாகமும் முழுவதுமாக உறுதிப் படுத்தப்பட்ட பிறகு, ஒரு நித்திய ஷாலோம் நித்திய சமாதானம் உண்டாகும். பாருங்கள்? 253. இயேசு இவ்வுலகில் வந்தபோது, "பூமியிலே சமாதானமும் மனிதர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று கூறப்பட்டது. ஆனால் உலகமோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாருங்கள்? பாருங்கள்? சமாதானத்துக்காக அவரிடம் வந்த யாவருக்கும் அவர் சமாதானம் என்பவராய் இருந்தார். பாருங்கள்-? பூமியிலே சமாதானம், மனிதர் மேல் பிரியம். அந்த புத்தாண்டின் துவக்கத்தில், தேவனுடைய அந்த புதிய நாளில், அவர் சமாதானம் என்பவராக இருந்தார். ஏன்-? அவர் அந்நாளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஒளியாக இருந்தார். பாருங்கள்-? 254. ஆனால் இன்னும் அநேக வார்த்தை உறுதிப்பட வேண்டியதாயுள்ளது. அவர் இன்னும் அநேக வார்த்தையை உறுதிப்படுத்த வேண்டும். கடைசி வார்த்தை உறுதிப்படும் போது, மரணம் ஜெயமாக விழுங்கப்படும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடெழுந்திருப்பார்கள். ஆயிரம் வருட அரசாட்சி நிலை நாட்டப்படும். அது ஒரு பெரிய சமாதானம், ஷாலோமாக இருக்கும். சகோதரனே, சகோதரியே, அந்த நாளுக்காக, அந்த பெரிய ஷாலோமுக்காக நாம் காத்திருப்போம். 255. வேதாகமமே ஞானம் அனைத்திற்கும் ஊற்று என்றும், எதிர்காலத்துக்கான எல்லா நம்பிக்கையையும் அது வைத்துள்ளது என்றும் ஞாபகம் கொள்ளுங்கள். சபைக்கு, ஷாலோம். நாம் ஜெபம் செய்வோம். 256. இங்குள்ள இச்சிறு கூட்டம். இந்த புத்தாண்டின் செய்தியை நான் இரண்டு மணி நேரம் அளித்தேன். நீங்கள் மிகவும் பொறுமையாயிருந்தீர்கள். இன்று காலை, இல்லை இன்று பிற்பகல், ஷாலோமைப் பெற்றிராத யாராகிலும் இங்குள்ளனரா-? நாம் பேசிக் கொண்டிருந்த அந்த சமாதானம், நீங்களும் வார்த்தையும் ஒன்றாகும் போது, அடையாளம் கண்டுகொள்ளப்படும் தேவனு டைய வார்த்தை. வேதாகம் ஒன்றைக் கூறும் போது, நீங்கள், "அது உண்மை என்று என்னால் நம்ப முடியாது,'' என்று கூறுவீர்களானால், உங்களுக்கு ஷாலோம் இல்லை. நீங்கள் தேவனுடைய சமாதானமாயில்லை. ஏனெனில் அவருடைய வார்த்தை ஒன்றைக் கூறும்போது, நீங்கள் அதனுடன் இணங்குவதில்லை. 257. வார்த்தை, "ஷாலோம், சமாதானம்'' என்று கூறி, நீங்கள் அந்த சமாதானத்தைப் பெற்றிருந்தால், தேவன் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தை- யையும் நீங்கள் விசுவாசித்து, அதை "ஆமென்” என்று கூறி ஆமோதிப்பீர்கள். அது உறுதிபடுத்தப்படுவதை நீங்கள் காணும்போது, நீங்கள் ''ஆமென்,'' அது வார்த்தை என்பீர்கள். ஆனால் ஒரு கோட்பாடு, ஒரு பொய்யான வெளிச்சம் உலகம் முழுவதும் பரம்பி, இந்த வெளிச்சத்தை அந்தகாரப்படுத்த அது நிழல்களை உண்டாக்கி, ''அது வேறெதையோ கூறுகிறது. அதன் அர்த்தம் அதுவல்ல'' என்று கூறும் போது, நீங்கள் நிழலைப் பின்பற்றுவீர்களா-? அல்லது வெளிச்சத்துடன் உடன்படுவீர்களா-? 258. இங்குள்ளவர்களும், இதை ஒலிநாடாவில் கேட்பவர்களும், இதைக் கேட்பவர்கள் யாராயிருந்தாலும், ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இங்கு உள்ளவர்களில் யாராகிலும் ஒருவருக்கு அந்த வெளிச்சம் இல்லாமலிருந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், உங்களை அடையாளம் காண்பிக்க உங்கள் கையை உயர்த்தி, இன்று அந்த வெளிச்சத்தில் நடக்க நீங்கள் ஆயத்த மாயிருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பீர்களா? இந்த ஒலிநாடா செல்ல இருக்கும் தேசத்தில் யாராகிலும் ஒருவர் இதைப் பெறாமலிருந்தால், நீங்கள் உள்ள இடத்திலேயே உங்கள் கையை உயர்த்தி... நாங்கள் ஜெபம் செய்யும் போது, சிறிது நேரம் ஒலிப் பதிவுக் கருவியை அணைத்து விட்டு, முழங்கால் படியிட்டு "தேவனாகிய கர்த்தாவே, நான் சந்தேகித்தேன், நான் இதை செய்தேன். சபை, அவை இருக்க முடியாது என்று கூறியதால் அது இருக்க முடியாதென்று நினைத்து விட்டேன். ஆனால் அது வேதத்தில் வாக்களிக்கப் பட்டுள்ளதை நான் காண்கிறேன். நான் அநேக காரியங்களைக் காண்கிறேன். வானங்களும்கூட அதை அறிவித்து விட்டன. உரைக்கப்பட்ட காரியங்கள் அது போன்றே நிகழ்ந்து வருகின்றன. பரலோகத்திலுள்ள தேவனும் அதை வானங்களில் அறிவித்து வருகிறார். எனவே இதை நான் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தை எனக்குள் வரட்டும். நான் சபையோ அல்லது போதகரோ கூறுவதைக் கேளாமல், வார்த்தையின் தாளத்துடன் இணைந்து, அது என்ன கூறுகிறதென்று காணட்டும். இந்த மகத்தான தேவனுடைய இசை நாடகத்தில், என் வாழ்க்கையில் அவருடைய சித்தப்படி தாளம் உண்டாகட்டும்'' என்று ஜெபியுங்கள். 259. எங்கள் பரலோகப் பிதாவே, எல்லாவிடங்களிலும் உயர்த்தப்பட்ட கரங்களை உம்மிடம் இப்பொழுது கொண்டு வருகிறோம். தேவனுடைய பரிசுத்தாவி தாமே வார்த்தையின் தாளத்தையும் அதன் சத்தியத்தையும் அவர்களிடம் கொணர்ந்து, அவர்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளு-மாய் வார்க்கப்பட்டு, இவ்வுலகில் தேவனுடைய வெளிச்சத்தைப் பிரதிபலிப்-பார்களாக-! அவர்கள் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக, இயேசு இவ்வுலகில் வாழ்ந்தது போல் இந்த ஆண்களும் பெண்களும் வாழ்ந்து, அவர் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து அதன்படி வாழ்ந்தது போல் அவர்களும் வாழ அருள்புரியும். ஏனெனில் அவர், ''மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று கூறியுள்ளார். ஒரு சில வார்த்தைகள் மாத்திரமல்ல, வார்த்தைகளின் ஒரு பாகமல்ல, ஆனால் ''தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்.'' 260. மோசேயின் காலத்திற்கென அளிக்கப்பட்ட வார்த்தை இயேசுவின் காலத்தில் கிரியை செய்யவில்லை. அப்போஸ்தலர்களின் காலத்திற்கென அளிக்கப்பட்ட வார்த்தை இந்நாளில் கிரியை செய்வதில்லை, இந்நாளுக்கென வாக்களிக்கப்பட்டுள்ள வார்த்தையே கிரியை செய்யும். கடைசி நாட்களில் என்ன நிகழுமென்றும், சபைகள் எப்படி துணிகரமுள்ளவர்களாகவும் இறுமாப் புள்ளவர்களாயும் இருப்பார்கள் என்றும், வேசி எப்படி எழும்புவாள் என்றும், அவளுடன்கூட அவளுடைய குமாரத்தி வேசிகள் இருப்பார்களென்றும், அவர்கள் எப்படி உலகத்தை அந்தகாரப்படுத்துவார்களென்றும், கடைசி சபை காலமாகிய லவோதிக்கேயாவிலிருந்து இயேசு சபையிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுவார் என்றும் அவர்கள் பரிசுத்தாவியினால் ஏவப்பட்டு பேசினார்கள். 261. ஓ, கர்த்தாவே, நான் வார்த்தையாகிய அவருடன் தங்கியிருப்பேனாக, இந்த புத்தாண்டில் நாங்கள் ஒரு தீர்மானத்துடன் புறப்படும்போது, எங்கள் அனைவரின் மூலமாகவும் உமது வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்யும். இந்த புத்தாண்டு எங்களுக்கு என்ன வைத்துள்ளதென்று தெரியாதவர்களாய், நாங்கள் வார்த்தையாகிய அவரை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அவர் முழு இசை நாடகத்தையும் துவக்கத்திலிருந்து முடிவு வரை அறிந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு சந்திப்பையும் அறிந்திருக்கிறார். கர்த்தாவே, எங்கள் கண்களை வார்த்தையாகிய அவர் மேல் வைத்து அவரை கவனித்துக் கொண்டு வருகிறோம். இவைகள் தோன்றுவதை நாங்கள் காணும் போது, நாங்கள் வார்த்தையின் தாளத்தின் மத்தியில் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். அதை அருள்வீராக. கர்த்தாவே, இங்குள்ள இழந்து போன ஒவ்வொரு ஆத்துமாவையும் இந்த ஒலிநாடாவைக் கேட்கும் ஒவ்வொரு-வரையும் இரட்சிப்பீராக. இவர்களை உமது ராஜ்யத்தின் நிமித்தம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.